search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பகோணம், ராமசாமி கோவிலில் ராமநவமி விழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்
    X

    கும்பகோணம், ராமசாமி கோவிலில் ராமநவமி விழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

    • நாளை காலை 11.15 மணிக்கு மேல் மிதுன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற உள்ளது.
    • 6-ம்நாள் யானை வாகனத்தில் சாமி வீதியுலா.

    பட்டீஸ்வரம்:

    கும்பகோணம் ராமசாமி கோவிலில் ராமநவமி பெருவிழா இன்று மாலை அனுக்ஞை, மிருத்சங்கி–ரஹணம், கருடப்ரதிஷ்டை பூஜை களுடன் தொடங்குகிறது.

    நாளை (புதன்கிழமை) காலை 11.15 மணிக்கு மேல் மிதுன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற உள்ளது.

    இவ்விழாவினை–யொட்டி நாளை முதல் தினசரி காலை மங்கல இன்னிசை முழங்க சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் பல்லக்கிலும், மாலை வேளைகளில் 1- ம் திருநாள் இந்திர விமானம், 2-ம்நாள் சூர்யப்ரபை, 3-ம்நாள் சேஷ வாகனம், 4-ம் திருநாள் மின் விளக்குகள் ஒளிர ஓலைச்சப்பரத்தில் கருடசேவையும், 5-ம் நாள் அனுமந்த சேவையும், 6- ம்நாள் யானை வாகனத்திலும், 7-ம் திருநாள் கோரதம் மற்றும் புன்னைமரம் வாகனங்களிலும், 8-ம் நாள் குதிரை வாகனத்துடனும் வீதிஉலா நடைபெறும்.

    9-ம் திருநாள் காலை 8 மணிக்கு மேல் தேரோட்டமும்,

    10-ம் திருநாள் சப்தாவர்ண விழாவும், மறுநாள் (ஏப்ரல்.1) விடையாற்றி விழாவும் நடைபெற உள்ளது.

    மேலும் இவ்விழாவில் தினசரி காலை, மாலை வேளைகளில் பஞ்சராத்திர ஆகம பகவத் சாஸ்திரப்படி யாகசாலை பூஜை ஹோமமும், பூர்ணாஹீதியும் வேதபாராயண மத்ராமாயணம், திவ்யப்பிரபந்த பாராயணங்கள் சேவை சாற்று முறையும் மற்றும் வருகிற 29-ந் தேதி வரை கோவில் வளாகத்தில் தினசரி மாலை மருத்துவர் வெங்கடேஷ் பாசுரபடி ராமாயணம் உபன்யாசமும் நடைபெற உள்ளது.

    இவ்விழா ஏற்பாடுகளை கோவில் ஆய்வாளர் வெங்கடசுப்ரமணியன், செயல் அலுவலர் மகேந்திரன் மற்றும் பணியாளர்கள், ராமசரணம் டிரஸ்ட் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×