search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷ சாராயம்"

    • விஷ சாராயம் விற்பனை செய்யப்பட்ட கிராமங்களில் போலீசார் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
    • இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தின் சங்ரூர் மாவட்டத்தில் உள்ள குஜ்ரான் மற்றும் அதை சுற்றியுள்ள பல கிராமங்களில் கடந்த 20-ந் தேதி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சாராயத்தை வாங்கி குடித்த பலர் அடுத்தடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்டனர்.

    இதையடுத்து அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அன்று இரவே சிகிச்சை பலனின்றி 5 பேர் இறந்தனர். அதை தொடர்ந்து 21-ந் தேதி காலையில் மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.

    இது சங்ரூர் மாவட்டம் முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, விஷ சாராயம் விற்பனை செய்யப்பட்ட கிராமங்களில் போலீசார் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் சாராயம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த நிலையில் விஷ சாராயம் குடித்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 6 பேர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை இறந்தனர். இதனால் விஷ சாராயத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதனிடையே விஷ சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் சிரோமணி அகாலி தளம் கட்சிகள் ஆம் ஆத்மி தலைமையிலான அரசைக் கண்டித்துள்ளன.

    • மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
    • 29-ந்தேதி நடைபெறவிருக்கும் ஆர்ப் பாட்டத்தில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    கன்னியாகுமரி:

    குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது மற்றும் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தது தொடர்பாக தமிழக அரசை கண்டித்து 29-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது.

    கூட்டத்துக்கு அவைத்தலைவர் சேவியர் மனோகரன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ், தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன்,மாநகராட்சி கவுன்சிலர்கள் அக் ஷயா கண்ணன், ஸ்ரீலிஜா, அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன், ஒன்றிய செயலாளர்கள் ஜெஸீம், பொன் சுந்தர்நாத், இளையரணி செயலாளர் ஜெயசீலன், மாநகர முன்னாள் செயலாளர் சந்துரு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுகளை தெரிவிப்பது, குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.வில் அதிக ளவில் உறுப்பி னர்களை சேர்க்க வேண்டும், தமிழகத்தில் கள்ளச்சா ராயத்தை ஊக்குவித்த தி.மு.க. அரசை கண்டிப்பது, நடைபெற உள்ள நாடாளு மன்ற தேர்தலில் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டும் வேட்பாளரை வெற்றிபெறச் செய்வது, வருகிற 29-ந்தேதி நடைபெறவிருக்கும் ஆர்ப் பாட்டத்தில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    • கவர்னர் மாளிகைக்கு வருகிற திங்கட்கிழமை எடப்பாடி பழனிசாமி தலைமையில் சைதாப்பேட்டை கோர்ட்டு அருகே இருந்து ஊர்வலமாக சென்று அதிமுகவினர் மனு கொடுக்கிறார்கள்.
    • கவர்னர் மாளிகையிலும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் அனுமதி கேட்டு மனு கொடுக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி மீது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கவர்னர் மாளிகைக்கு ஊர்வலமாக சென்று மனு கொடுக்க உள்ளார்.

    அ.தி.மு.க. மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

    கூட்டத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள், அமைப்புச் செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மதுரையில் ஆகஸ்டு 20-ந்தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. பொன்விழா மாநாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக பேசப்பட்டது.

    அதன்பிறகு தி.மு.க. ஆட்சியின் 2 ஆண்டு கால அவல நிலை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. தி.மு.க.வின் அத்துமீறல்கள், முறைகேடுகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    குறிப்பாக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ரூ.30 ஆயிரம் கோடி சொத்து குவிப்பு ஆடியோ பற்றி மக்கள் மத்தியில் எடுத்துச்சொல்ல வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் பகுதியில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவத்தின் பின்னணியை தி.மு.க. அரசு மறைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். விஷ சாராய பலி குறித்து அவர் பேசியதாவது:-

    விஷ சாராயம் குடித்தவர்களில் 62 பேர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 15 பேர்களுக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுதான் காரணம். ஆளும் கட்சி துணையுடன் கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது.

    இந்த விஷயத்தில் கள்ளச்சாராயத்தை தடுக்க தி.மு.க. அரசு தவறி விட்டது. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது.

    சட்டசபையில் நான் இதுபற்றி பேசியதற்கு கூட முதலமைச்சரிடம் இருந்து விளக்கமான பதில் வரவில்லை.

    எதிர்க்கட்சி தலைவர் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லக் கூடாது என்பதற்காக பல்வேறு தகவல்களை முதலமைச்சர் மறைத்து விட்டார்.

    அ.தி.மு.க. ஆட்சியில் கள்ளச்சாராயம் காய்ச்ச வியாபாரிகள் பயந்தார்கள். தி.மு.க. ஆட்சியில் அந்த பயம் யாருக்குமே இல்லை. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது. இப்போது இந்த வழக்கை திசை திருப்ப அரசு முயற்சி செய்கிறது.

    எனவே நாம் இந்த விஷயத்தை விடக்கூடாது. கவர்னரை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளோம். தி.மு.க.வின் ஊழல்களையும் பட்டியலிடுவோம்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் பல்வேறு முறைகேடுகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

    தி.மு.க. ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி, அ.தி.மு.க. சார்பில் வருகிற 22-ந்தேதி காலை 10.25 மணிக்கு சென்னை, சின்னமலை தாலுகா அலுவலக சாலை, ஏசு கிறிஸ்து சபை அருகில் இருந்து கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணியாக புறப்பட்டு கவர்னர் மாளிகையை சென்றடைந்து முக்கிய நிர்வாகிகள் கவர்னரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கவர்னர் மாளிகைக்கு ஊர்வலமாக சென்று மனு கொடுக்க அனுமதி கேட்டு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    வருகிற 22-ந்தேதி தி.மு.க. ஆட்சி மீது புகார் தெரிவித்து கவர்னரிடம் மனு கொடுக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக சைதாப்பேட்டை கோர்ட்டு அருகில் இருந்து ஊர்வலமாக செல்ல அனுமதி கேட்டு மனு கொடுத்துள்ளேன்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர் குலைந்துள்ளது. தமிழகம் அமைதி பூங்காவாக இல்லை. அமளிக்காடாக மாறி உள்ளது. இதுபற்றி விரிவாக கவர்னரிடம் மனு கொடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து 17 பேர் பலியானார்கள்.
    • மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

    திருப்பூர் :

    விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து 17 பேர் பலியானார்கள். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் சாராய தடுப்பு பணிகளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். சேவூர், ராயர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடந்தது.

    திருப்–பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவின் பேரில் மாநகர மதுவிலக்கு போலீசார் விஷசாராயம், வெளிமாநில மதுபானங்கள், கள், கஞ்சா உள்ளிட்டவை தொடர்பாக சோதனை மேற்கொண்டனர். மாநகர பகுதியில் வெளிமாநில மதுவிற்பனை தொடர்பாக ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் இதுதொடர்பான புகார்களை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டை 94437 81474 என்ற எண்ணிலும், திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டரை 94981 75139 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷசாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்து உள்ளது.
    • விஷசாராயம் விற்றதாக அமாவாசை என்பவரை ஏற்கனவே போலீசார் கைது செய்து இருந்தனர்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே உள்ள சித்தாமூர் அடுத்த பெருங்கரணை, இருளர் பகுதியை சேர்ந்த சின்ன தம்பி (வயது 30), அவரது மாமியார் வசந்தா ஆகியோர் விஷசாராயம் குடித்து பலியானார்.

    அவர்களுடன் விஷ சாராயம் குடித்த சின்னத் தம்பியின் மனைவி அஞ்சலி (22)செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இதேபோல் விஷசாராயம் குடித்ததில் சித்தாமூர் அடுத்த பேரம்பாக்கம் பகுதியை சேர்ந்த வென்னியம்பன் (65) , அவரது மனைவி சந்திரா (55) பெருங்கருணை கிராமத்தைச் சேர்ந்த முத்து (55) ஆகியோரும் அடுத்தடுத்து இறந்தனர்.

    இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷசாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்து உள்ளது.

    மேலும் விஷசாராயம் குடித்ததில் உடல் நிலை பாதிக்கப்பட்ட 5 பேர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக விஷசாராயம் விற்றதாக அமாவாசை என்பவரை ஏற்கனவே போலீசார் கைது செய்து இருந்தனர். அவரிடம் விசாரணை நடந்து வந்தது. அவர் செய்யூர் அருகே உள்ள ஊதியூர் கிராமத்தைச் சேர்ந்த வேலு என்பவரிடம் இருந்து சாராயத்தை வாங்கியதாக தெரிவித்தார்.

    இதையடுத்து விஷ சாராயம் விற்றதாக வேலுவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    இதற்கிடையே விஷ சாராயத்தை விற்ற அமாவாசையும் குடித்து இருந்தார். இதில் அவரது உடல் நிலையும் சற்று பாதிக்கப்பட்டு உள்ளது. நேற்று மாலை அவரையும் போலீசார் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து உள்ளனர்.

    இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் சாராய வேட்டை நடந்து வருகிறது. விஷசாராயத்தை மேலும் வேறுயாராவது குடித்து இருந்தால் அவர்களையும் சிகிச்சைக்கு அனுப்ப விசாரித்து வருகின்றனர்.

    கள்ளச்சந்தையில் மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் குறித்த விபரங்களையும் சேகரித்து வருகிறார்கள். இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளார். எனவே செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பை காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சதாகர் கூடுதலாக கவனிப்பார் என்று அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    திருவண்ணாமலையில் கடந்த 2000-ம் ஆண்டு விஷ சாராயம் குடித்து 13 பேர் பலியான விவகாரத்தில், குற்றவாளிகள் 5 பேருக்கு மாவட்ட கோர்ட் விதித்த தூக்கு தண்டனையை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. #MadrasHC
    சென்னை:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் கடந்த 2000ம் ஆண்டில், விஷம் கலந்த சாராயத்தை குடித்து 13 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜெயபால், முருகன், காளியப்பன், தில்லைக்கண்ணு, குமார் ஆகிய 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து மாவட்ட கோர்ட் கடந்த ஏப்ரல் மாதம் 27-ம் தேதி உத்தரவிட்டது. 

    மேலும், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 பேருக்கும் தலா, 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி புகழேந்தி தீர்ப்பு வழங்கினார்.

    இந்த தண்டனையை எதித்து குற்றவாளிகள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் 5 பேரின் தூக்குதண்டனையை ரத்து செய்தனர். 
    ×