search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழிப்புணர்வு பயணம்"

    • ராமேசுவரம் முதல் சென்னை வரை ஆட்டோவில் ரத்ததான விழிப்புணர்வு பயணம் தொடங்கியது.
    • ரத்ததானம் செய்த 48 மணி நேரத்தில் தானம் அளித்த ரத்தம் மீண்டும் உற்பத்தி ஆகிவிடும்.

    ராமநாதபுரம்

    ராமேசுவரம் முதல் சென்னை வரை ஆட்டோவில் ரத்த தானத்தை வலியுறுத்தி சமூக ஆர்வலர் ஜே.எஸ்.சாகுல் ஹமீது விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கினார். ரத்த தானத்தை வலியுறுத்தி பல்வேறு வகை பிரச்சாரங்கள் நடக்கிறது. ஒருமுறை ரத்த தானம் செய்வதால் 4 உயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன. ரத்ததானம் செய்த 48 மணி நேரத்தில் தானம் அளித்த ரத்தம் மீண்டும் உற்பத்தி ஆகிவிடும். தொடர்ந்து மூன்று மாத இடைவெளியில் ரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு இருதய நோய்கள் வருவதற்கு வாய்ப்பு குறைவு ஒவ்வொரு முறை ரத்த தானம் செய்யும் போது உடலில் உள்ள ரத்த செல்கள் புத்துணர்ச்சி அடைகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இது போன்ற விழிப்புணர்வு வாசகங்களை மக்களிடையே பிரச்சாரம் செய்தபடி ஆட்டோவில் ராமேசுவரத்திலிருந்து சமூக ஆர்வலர் சாகுல் ஹமீது சென்னை வரை தனது பயணத்தை தொடங்கினார்.

    • போலீஸ் துணை சூப்பிரண்டு தொடங்கிவைத்தார்
    • கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை நடக்கிறது

    கன்னியாகுமரி :

    தமிழ்நாடு கிராமிய கலைஞர்கள் சங்க மாநில துணைத்தலைவர் பழனியாபிள்ளை, பாடகர் கண்டன்விளை ராஜேந்தி ரன் ஆகியோர் புற்றுநோய் விழிப்புணர்வு, நீர் மேலாண்மை, பிளாஸ்டிக் தவிர்த்தல் குறித்தும் தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்கள் குறித்தும் மாநில அளவிலான மக்கள் நலத் திட்ட இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணம் நடத்த முடிவு செய்தனர்.

    இதன் தொடக்க விழா கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு இன்று காலை நடந்தது. போலீஸ் துணை சூப்பி ரண்டு மகேஷ்குமார் கொடி அசைத்து விழிப்புணர்வு பயணத்தை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் குமரி மாவட்ட சுற்றுலா அதிகாரி சதீஷ்குமார், உதவி அலுவலர் கீதா ராணி, மற்றும் கிருஷ்ண மூர்த்தி, சிலுவை வஸ்தியான், சரண்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணம் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, தேனி, மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், உள்பட பல்வேறு கடலோர மாவட்டங்கள் வழியாக வருகிற 14-ந்தேதி சென்னை சென்றடைகிறது. 15-ந் தேதி சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆசி பெறுகின்றனர். பின்னர் இவர்கள் அங்கு இருந்து புறப்பட்டு பல்வேறு மாவட்டங்கள் வழியாக 22-ந் தேதி மீண்டும் கன்னியாகுமரியில்வந்து இந்த பயணத்தை நிறைவு செய்கின்றனர்.

    மொத்தம் 23 நாட்கள் 3ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் இந்த விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளப்படுகிறது. வழி நடுகிலும் பள்ளி கல்லூரி களில் மாணவர்களிடம் இவர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கிறார்கள்.

    • கடந்த மாதம் 6ந்தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சைக்கிள் நடைப்பயணத்தை தொடங்கினார்.
    • அவினாசி அருகில் வந்த போது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    அவினாசி :

    மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவர் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு சைக்கிள் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். அதற்காக கடந்த மாதம் 6ந்தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சைக்கிள் நடைப்பயணத்தை தொடங்கினார்.

    ஓசூரில் இருந்து கோவை வரையிலும், பின்னர் அங்கிருந்து காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேலூர் வரையும் சைக்கிள் நடை பயணம் செல்கிறார். இந்த நிலையில் நேற்று அவர் அவினாசி புது பஸ் நிலையம் அருகில் வந்த போது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது அவர் பேசுகையில்:- வாக்களிப்பது மக்களின் உரிமை மற்றும் ஜனநாயக கடமையாகும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தேர்தலில் தகுதியான வேட்பாளரை தேர்ந்தெடுப்பது நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். அதன் மூலம் நம்முடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் வகையில் இருக்க வேண்டும். பணம் வாங்கிக் கொண்டு ஏதோ ஒரு நபரை தேர்ந்தெடுக்க கூடாது.

    மக்கள் நேர்மையாக தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்என்றார். இதையடுத்து அவர் தெக்கலூர் மற்றும் கருமத்தம்பட்டி வழியாக கோவை நோக்கி புறப்பட்டார்.

    • சித்தம்பலம் கிராமத்தில் இருந்து, திருச்செந்தூர் நோக்கி 4 பேர் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.
    • தன்னார்வலர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் ஊராட்சி நிர்வாகம், ரெயின்போ ரோட்டரி சங்கம் ஆகியவை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து வலியுறுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் ஏப்ரல் 3 ம் தேதி பிளாஸ்டிக் விழிப்புணர்வை வலியுறுத்தி சித்தம்பலம் கிராமத்தில் இருந்து, திருச்செந்தூர் நோக்கி சுமார் 350 கி.மீ., தூரம் ராமஜெயம்(வயது 70), ரங்கசாமி,(63), மகேஷ்(30), தரணி(19) ஆகிய 4 பேர் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.இவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சித்தம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார் . தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ரெயின்போ ரோட்டரி சங்கத் தலைவர் ஆறுமுகம், தங்கலட்சுமி நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ரோட்டரி சங்க செயலாளர் சுந்தர்ராஜன் வரவேற்றார்.சைக்கிள் பயணம் மேற்கொண்ட தன்னார்வலர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் முத்துக்குமார், ஆறுமுகம், கதிர், திருமூர்த்தி மற்றும் தன்னார்வலர்கள், சித்தம்பலம் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒன்பது நாட்களை கடந்து தருமபுரி மாவட்டம் வந்தடைந்தனர்.
    • தருமபுரி அமைப்பினர் தகவல் அறிந்து அவர்களை வரவேற்றனர்.

    தருமபுரி,

    புனேவில் இருந்து மிதிவண்டியில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக விழிப்புணர்வு ஏற்படுத்த பெடல் பார் சைக்கிள் என்ற அமைப்பு சார்பில் கன்னியாகுமரி செல்கின்றனர்.

    அதில் மூன்று ஆண்கள் ஒரு பெண் உட்பட நான்கு நபர்கள் கூடிய குழு புனேவியில் இருந்து கிளம்பி ஒன்பது நாட்களை கடந்து தருமபுரி மாவட்டம் வந்தடைந்தனர். அவர்கள் தருமபுரியில் இருந்து ஓமலூர், சேலம் வழியாக மதுரை செல்கின்றனர்.

    பிறகு இறுதியாக கன்னியாகுமரி செல்கின்றனர். தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்து வரும் தருமபுரி அமைப்பினர் தகவல் அறிந்து அவர்களை வரவேற்றனர்.

    தருமபுரி அமைப்பின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் முஹம்மது ஜாபர் நேரில் சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வழியனுப்பி வைத்தார்.

    • பள்ளி மாணவர்கள் சுற்றுசூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பயணம் சென்றனர்.
    • பொன்னணியாறு அணை உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    கரூர்:

    தமிழக அரசின் சுற்று சூழல் துறை மற்றும் தேசிய பசுமை படை சார்பில், கரூர் மாவட்ட அரசுப் பள்ளி மாணவ, மாண வியர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கலைப் பயணம் சென்றனர்.

    கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து இந்த பயணம் தொடங்கியது. மாவட்ட சுற்றுச்சூழல் பொறி யாளர் ஜெயமுருகன் தலைமை வகித்தார்.

    மாவட்டத்தில் 60க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவியர், சின்ன தாதம்பாளையம் பகுதியில் உள்ள வன விரிவாக்க கோட் டத்துக்கு அழைத்துச் செல்லப் பட்டனர். அங்கு, மரக்கன்றுகள் வளர்ப்பதன் முக்கியத்துவம், அதனால் சுற்றுசூழலுக்கு ஏற் படும் நன்மைகள் குறித்து எடுத் துரைக்கப்பட்டது. பின்னர், கடவூர் பகுதியில் அமைந்துள்ள இயற்கை மூலிகை மருந்துகளின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்ட.அதைத் தொடர்ந்து, நம்மாழ்வார் வாழ்விடம் மற்றும் பொன்னணியாறு அணை உள்ளிட்ட பகுதிகளுக்கு மாணவ, மாணவியர் அழைத்துச் செல்லப்பட்டனர்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர் விஜேந்திரன், வனவர் பாஸ்கர், மாவட்ட சுற் றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் வேலுச்சாமி, தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×