search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழிப்புணர்வு நிகழ்ச்சி"

    • கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் மூலம் நடனமாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
    • பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்த்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த பவளந்தூர் கிராமத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை பாரதி கிராமிய கலை குழு சார்பில் திறந்தவெளி மலம் கழிப்பதை தவித்தல், பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்த்தல், திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை குறித்த தகவல்களை கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் மற்றும் பாடல்கள் மூலம் நடனமாடி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    இந்நிலையில் பென்னாகரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் கலைகுழுவினர் கடந்த 4 தினங்களாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

    இதில் வட்டுவனஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் மாதம்மாள் கோவிந்தசாமி, ஊராட்சி செயலாளர் ராமசாமி, பணித்தள பொறுப்பாளர் சத்தியா, கலை குழுவினர் பொதுமக்கள் என ஏராளமானோர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    • ஊராட்சி தலைவர் புவனேஷ்வரி மூர்த்தி தலைமையில் நல்லம்பள்ளி சீட்ஸ்தொண்டு நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.
    • 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் சீட்ஸ் தொண்டு நிறுவன மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் சிறுதானியங்கள் ஊக்குவிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊராட்சி தலைவர் புவனேஷ்வரி மூர்த்தி தலைமையில் நல்லம்பள்ளி சீட்ஸ்தொண்டு நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.

    தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறுதானிய உணவு பொருட்கள் கண்காட்சியினை தொடங்கி வைத்தார்.

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பொறுப்பு சுகந்த பிரியா கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.

    நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார். மேலும் சீட்ஸ் தொண்டு நிறுவன இயக்குனர் சரவணன், எர்ரபையனஅள்ளி ஊராட்சி தலைவர் சிலம்பரசன், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தலைவர் சார்பில் பெரியசாமி, சின்னபள்ளத்தூர் ஊராட்சி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பழனி சமூக ஆர்வலர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

    இந்நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் சீட்ஸ் தொண்டு நிறுவன மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நிகழ்ச்சியின் நிறைவாக தேசிய இளைஞர் தொண்டர் அரிபிரசாந்த் நன்றி கூறினார்.

    • செருவலூர் ஊராட்சியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.
    • நிகழ்ச்சியில் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை பொதுமக்கள் எடுத்து கொண்டனர்.

    திருவாரூர்:

    உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அரசு ஆரம்பசுகாதார நிலையம் மற்றும் செருவலூர் ஊராட்சியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    பூந்தோட்டம் மருத்துவ அலுவலர் டாக்டர் விநாயகர்வேலன் தலைமை தாங்கினார். பல் மருத்துவர் ஆனந்தி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் எடுத்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் உமாராணி, மருத்துவ துணைஇயக்குனரின் உதவியாளர் கணேசன், சித்தா டாக்டர் சரண்யா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தொடர்ந்து உதவி கலெக்டர் தலைமையில் அனைவரும் பசுமை உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
    • அணை பூங்கா வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை பூங்காவில் மீண்டும் மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நீர், காற்று மற்றும் நிலம், பிளாஸ்டிக் மாசில்லாத தமிழகத்தை உருவாக்க, அணை பூங்காவில் உள்ள கழிவு குப்பைகளை அகற்றும் பணி நடந்தது. இந்த பணியை கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு தொடங்கி வைத்தார். தொடர்ந்து உதவி கலெக்டர் தலைமையில் அனைவரும் பசுமை உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். ஆணை பூங்கா வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    இந்த நிகழச்சியில் துணை கலெக்டர் (பயிற்சி) தாட்சாயிணி, தாசில்தார் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோடைகாலத்தில் ஏற்படும் நோய்கள், இயற்கை மருத்துவ தீர்வுகள் குறித்து பாரதி விளக்கி கூறினார்.
    • கோடைகால உணவு முறைகள் குறித்து மாணவி அகல்யா, கெஜின் சந்தோஷ் ஆகியோர் உரையாற்றினர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் எஸ். தங்கப்பழம் கல்வி குழுமத்தில் உள்ள இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியை எஸ். தங்கப்பழம் கல்வி குழுமத்தின் நிறுவனர் எஸ். தங்கப்பழம், தாளாளர் எஸ்.டி. முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். மருத்துவ கல்லூரி உதவி முதல்வர் பாரதி முன்னிலை வகித்து, கோடைகாலத்தில் ஏற்படும் நோய்கள், அதற்கான இயற்கை மருத்துவ தீர்வுகள் குறித்து விளக்கி கூறினார். கோடைகாலத்தை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் மற்றும் உணவு முறைகள் குறித்து முதலாமாண்டு மற்றும் 2-ம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவி அகல்யா, மாணவர் கெஜின் சந்தோஷ் ஆகியோர் உரையாற்றினர். நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரியின் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும் மருத்துவ கல்லூரியின் அனைத்து மாணவ, மாணவிகள், உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அரசு பள்ளிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்தும் வகையில், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
    • ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் எம்.எம்.டி மற்றும் நர்ச்சர் என்ற தன்னார்வ இயக்கம் மூலம் வழிகாட்டு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் மத்திய அரசின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளின் படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்தும் வகையில், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

    தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் குறித்தும், அப்படிப்பினை படிக்க ஏதுவாக உள்ள கல்வி நிறுவனங்கள் குறித்த உயர்கல்வி வழிகாட்டுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் எம்.எம்.டி மற்றும் நர்ச்சர் என்ற தன்னார்வ இயக்கம் மூலம் வழிகாட்டு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.

    இந்த நிகழ்ச்சி, நாளை 27-ந் தேதி மாலை 3 மணிக்கு நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நடைபெறுகிறது.

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி படிக்கும் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். 

    • குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சித்தையன் தலைமையில் நடைபெற்றது.
    • பள்ளி மாணவிகள் மத்தியில் பாலியல் வன்கொடுமை, பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் குறித்து எடுத்து கூறப்பட்டது.

    பாப்பாரப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பாப்பாரப்பட்டி காவல்துறை சார்பில் பள்ளி மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சித்தையன் தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் மத்தியில் பாலியல் வன்கொடுமை, பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள், இளம் வயது திருமணங்கள், பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் குறித்து பள்ளி மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.

    நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, தலைமை காவலர் கீதா ராணி மற்றும் பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

    • கஞ்சா, குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருட்களை பயன்படுத்த கூடாது.
    • பாலியல் துன்புறுத்தல், போதை பழக்கம் குறித்து தெரிய வந்தால் 1098 என்ற தொலைபேசி எண்ணிற்க்கு தெரிவிக்க அறிவுறுத்தினார்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே சோமனஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு போக்சோ சட்டம் மற்றும் கஞ்சா குட்கா உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தன் தலைமையில் நடைப்பெற்றது.

    பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ராஜா முன்னிலை வகித்தார்.

    இதில் சிறப்பு விருந்தினராக பாலக்கோடு டி.எஸ்.பி. சிந்து கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளிடம் குழந்தை திருமணம், எதிர்பாலின ஈர்ப்பு, மன சஞ்சலம், மன குழப்பம் ஆகியவற்றை தவிர்த்து படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும்.

    அதே போன்று செல்போன், டிவி. சினிமா உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களில் தீயனவற்றை தவிர்த்து நல்ல விஷயங்களை எடுத்து கொள்ள வேண்டும்.

    மேலும் கஞ்சா, குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருட்களை பயன்படுத்த கூடாது.

    பாலியல் துன்புறுத்தல், போதை பழக்கம் குறித்து தெரிய வந்தால் 1098 என்ற தொலைபேசி எண்ணிற்க்கு தெரிவிக்க அறிவுறுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் ஆசிரியர், ஆசிரியைகள் பள்ளி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • குழந்தைகளிடம் செல்போன் தேவைகளை குறைத்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
    • பெண் குழந்தைகளை தவறான முறையில் தொட்டாலோ பேசினாலோ போலீசாருக்கு தைரியமாக தகவல் அளியுங்கள்

    ஒகேனக்கல்,

    தருமபுரி மாவட்டம், அளேபுரம் அரசு உயர்நிலைபள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கவும் கவனமாக சாலைகளில் செல்ல வேண்டும், இளம் வயது திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும், பள்ளி செல்லும் பொழுது யாராவது கேலி செய்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    மேலும் பெண்கள் படித்து நல்ல ஒழுக்கத்தை கற்று பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

    மேலும் பெண்குழந்தைகள் 1098 ஆகிய எண்ணுக்கும் இதே போல் 181 ஆகிய எண்ணிற்க்கு புகார் அளிக்கலாம்.

    பெண்குழந்தைகள் கடந்த காலத்தில் அதிக அளவில் வெளியே வர மாட்டார்கள். வெளியூரில் தங்கி படிக்க வைக்க மாட்டார்கள். ஏனென்றால் பெற்றோர்களுக்கு பயம் இருந்தது.

    தற்போது உள்ள காலகட்டத்தில் பெண்கள் நிறைய துறையில் சாதித்து வருகின்றனர். தைரியமாக பெற்றோர் பெண்களுக்கு சுதந்திரம் அளித்து படித்து வைக்கின்றனர்.

    இதேபோல் மாணவிகள் பெற்றோர்கள் மது அருந்திவிட்டு வீட்டில் பிரச்சனை செய்தால் போலீஸ் துறைக்கு தகவல் அளிக்கலாம். அந்த தகவலை ரகசியமாக பாதுகாத்து அவர்களுக்கு அறிவுரை வழங்கி மதுவால் ஏற்படும் பிரச்சனைகளால் தீர்வு ஏற்படுத்தித் தரப்படும் என தெரிவித்தனர்.

    மேலும் குழந்தைகளிடம் செல்போன் தேவைகளை குறைத்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் பெண் குழந்தைகளை தவறான முறையில் தொட்டாலோ பேசினாலோ போலீசாருக்கு தைரியமாக தகவல் அளியுங்கள் என பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் விக்னேஷ், முதல் நிலை காவலர் பாலா ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் ஆசிரியர்கள் மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பிளாஸ்டிக் தவிர்ப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • கேசா இளம்படை அமைப்பின் எதிர்கால திட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர் ஜீவலதா பேசினார்.

    ராஜபாளையம்

    ஜெ.சி.ஜ. ராஜபாளையம் கேசா டி மிர் மற்றும் புதுயுகத்தின் கேசா இளம்படை இணைந்து பிளாஸ்டிக் தவிர்ப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை திருவள்ளுவர் நகரில் நடத்தியது. கேசா இளம்படையின் துணை ஒருங்கிணைப்பாளர் ரேஷ்மா பேசினார். சிறப்பு விருந்தினர்களாக எல்.ஜ.சி. காப்பீடு ஆலோசகர் திருமுருகன், திருவள்ளுவர் நகர மேற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அங்குராஜ், 2-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் வள்ளிமயில் ராஜா, யூனியன் வைஸ் சேர்மன் துரைகற்பகராஜ் ஆகியோர் பேசினர்.

    மாணவி சிவதர்ஷினி வரவேற்றார். பிளாஸ்டிக் தவிர்ப்போம் என்ற தலைப்பில் மாணவன் நரேஷ், பிளாஸ்டிக்கை குறைப்போம் என்ற தலைப்பில் சிவதர்ஷினியும், பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வோம் என்ற தலைப்பில், காவ்ய தர்ஷினியும் பேசினர். கேசா இளம்படை அமைப்பின் எதிர்கால திட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர் ஜீவலதா பேசினார். துணை ஒருங்கிணைப்பாளர் ரேஷ்மா வாழ்த்துரை வழங்கினார். மாணவி ஹாஜிரா பர்ஹின் நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜெ.சி.ஜ ராஜபாளையம் கேசா டி மிர் தலைவர் பானுபிரியா, மாலா, அழகுராஜா, சத்யா ஆகியோர் பள்ளியின் தாளாளர் திருப்பதி செல்வன், முதுநிலை முதல்வர் அருணாதேவி வழிகாட்டுதலின் படி செய்திருந்தனர்.

    • கபிலர்மலை பகுதியில் வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கூலி தொழிலாளர்களுக்கு போதை பொருள் தடுப்பு குறித்து மாவட்ட மன நல திட்டத்தின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத் தப்பட்டது.
    • போதைப் பழக்கம் ஒரு மனநோய் என உலக சுகாதார நிறுவனம் வரையறை செய்கிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை பகுதியில் வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கூலி தொழிலாளர்களுக்கு போதை பொருள் தடுப்பு குறித்து மாவட்ட மன நல திட்டத்தின் சார்பில் விழிப்பு ணர்வு ஏற்படுத் தப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட மனநல மருத்துவர் ஜெயந்தி மற்றும் மன நல ஆலோசகர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகையில், போதை மருந்து பழக்கம் ஒருவரின் உடல் நலத்தையும், மன நலத்தையும் வெகுவா கப் பாதிக்கும். இளைய சமுதாயத்தினரிடையே வேகமாக பரவும் போதை பழக்கம் புற்றுநோயை விடக் கொடியது.

    போதை மருந்துப் பழக்கத்தினால் ஈரல் கோளாறுகள், தூக்க மின்மை, குற்றம் புரிதல், சமூக விரோத நடவடிக் கைகள் ஏற்படுகிறது. போதைப் பழக்கம் ஒரு மனநோய் என உலக சுகாதார நிறுவனம் வரை யறை செய்கிறது.

    எனவே தக்க ஆலோ சனை மற்றும் சிகிச்சை எடுத்தால் போதை பொருள் தாக்கத்தில் இருந்து விடு படலாம். அருகில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்
    • 63 வகையான உணவு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் சர்வதேச சிறுதானிய ஆண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார். 2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அறிவித்துள்ளது.

    அதனை தொடர்ந்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் முன்முயற்சிகள் மூலம் குடிமக்களிடையே ஆரோக்கியமான மற்றும் மாறுபட்ட உணவின் ஒரு பகுதியாக சிறுதானிய உணவுகளை இணைப்பதை ஊக்குவித்து வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு துறை, வேளாண்மை துறை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட, நகர ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், பள்ளி மாணவிகள் ஆகியோர் இணைந்து சர்வதேச சிறுதானிய ஆண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இதில் வேளாண்மை துறை சார்பில் சிறுதானிய இனிப்புகள் மற்றும் சிறுதானிய விதைகள் காட்சிப்படுத்தப்பட்டது. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் சார்பாக 15 வகையான சிறுதானிய வகை உணவு பொருட்களையும் மற்றும் 35 வகையான சிறுதானியங்களை காட்சிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து திருவண்ணாமலை அரசு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 63 வகையான சிறுதானியத்தால் செய்யப்பட்ட உணவு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட சிறுதானியத்தால் செய்யப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் சிறுதானிய விதைகளை பார்வையிட்டார். மேலும் பள்ளிகளில் காலை வழிப்பாட்டு கூட்டத்தின் போது சிறுதானியத்தின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உணவு இடைவேளையின் போது சிறுதானிய சிற்றுண்டிகள் உட்கொள்ளவும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    ×