என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
- கஞ்சா, குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருட்களை பயன்படுத்த கூடாது.
- பாலியல் துன்புறுத்தல், போதை பழக்கம் குறித்து தெரிய வந்தால் 1098 என்ற தொலைபேசி எண்ணிற்க்கு தெரிவிக்க அறிவுறுத்தினார்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே சோமனஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு போக்சோ சட்டம் மற்றும் கஞ்சா குட்கா உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தன் தலைமையில் நடைப்பெற்றது.
பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ராஜா முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக பாலக்கோடு டி.எஸ்.பி. சிந்து கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளிடம் குழந்தை திருமணம், எதிர்பாலின ஈர்ப்பு, மன சஞ்சலம், மன குழப்பம் ஆகியவற்றை தவிர்த்து படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும்.
அதே போன்று செல்போன், டிவி. சினிமா உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களில் தீயனவற்றை தவிர்த்து நல்ல விஷயங்களை எடுத்து கொள்ள வேண்டும்.
மேலும் கஞ்சா, குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருட்களை பயன்படுத்த கூடாது.
பாலியல் துன்புறுத்தல், போதை பழக்கம் குறித்து தெரிய வந்தால் 1098 என்ற தொலைபேசி எண்ணிற்க்கு தெரிவிக்க அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர், ஆசிரியைகள் பள்ளி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.