search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழிப்புணர்வு ஊர்வலம்"

    • பதாகைகளை ஏந்திச் சென்றனர்
    • ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்

    வந்தவாசி:

    கருவம்பாக்கம் ஸ்ரீதரம்சந்த் ஜெயின் பள்ளி சார்பில் மின் சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம் வந்தவாசியில் நடைபெற்றது.

    ஊர்வலத்துக்கு பள்ளித் தாளாளர் பப்ளாசா தலைமை வகித்தார். செயலர் ஜின்ராஜ், பொருளர் நவீன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாக இயக்குனர் அனுராக் ஊர்வலத்தை தொடக்கி வைத்தார்.

    வந்தவாசி காந்தி சாலையில் தொடங்கிய ஊர்வலம் பஜார் வீதி, தேரடி வழியாக புதிய பஸ் நிலையம் சென்றடைந்தது. இதில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவோம், மின்சாரத்தை சேமிப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பள்ளி மாணவர்கள் ஏந்திச் சென்றனர்.

    ஊர்வலத்தில் பள்ளி முதல்வர் ஜெகன், ஆசிரியர்கள் ஆர்த்தீஸ்வரி, பத்மஜெயனி, தினேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • விழிப்புணர்வு ஊர்வலத்தை பேரூராட்சியை தலைவர் பி.கே. முரளி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • பதாகைகளை கையில் ஏந்தியபடி, முழக்கமிட்டு ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பாலக்கோடு,

    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி விழிப்புணர்வு ஊர்வலத்தை பேரூராட்சியை தலைவர் பி.கே. முரளி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த ஊர்வலமானது பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலை ப்பள்ளியிலிருந்து தொடங்கி தக்காளி மண்டி, பை -பாஸ் சாலை, எம்.ஜிரோடு, பஸ் நிலையம், கடைவீதி வழியாக பள்ளியை சென்றடைந்தனர்.

    இந்த விழிப்பு ஊர்வ லத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை முன்கூட்டியே கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தல், சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை களுக்கான தீர்வு காணுதல் ஆகியவை பற்றி மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதாகைகளை கையில் ஏந்தியபடி, முழக்கமிட்டு ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு சப்-இன்ஸ்பெக்டர் முருகன், அரசு மருத்துவமனை மருத்துவர் சித்ரா, பள்ளியின் குழு தலைவர், உறுப்பினர்கள், உதவி தலைமை ஆசிரியர், இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி நன்றி தெரிவித்தார்.

    • போதை பொருள் விழிப்புணர்வு மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது
    • துறை தலைவர்கள், பேராசிரியர்கள், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் உள்ள கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கல்வியியல் கல்லூரி சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் தொடங்கப்பட்ட ஊர்வலத்திற்கு கல்லூரியின் தலைவர் வள்ளி பெருமாள் தலைமைதாங்கினார். கல்லூரி முதல்வர் ஆறுமுகம் வரவேற்றார். கல்வியியல் கல்லூரி முதல்வர் அமலோற்பவம், பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போதை பொருள் விழிப்புணர்வு மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தியவாறு சென்றனர். மேலும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி னார்கள்.

    இந்த ஊர்வலம் புதிய பஸ் நிலையம், அண்ணா சிலை, டி.பி. ரோடு, காந்தி சிலை, பழையபேட்டை என முக்கிய சாலைகள் வழியாக சென்றன. இதில் சப்&இன்ஸ்பெக்டர்கள் சந்துரு, குப்புசாமி, ராமதாஸ், போக்குவரத்து சப்&இன்ஸ்பெக்டர் சீதாராமன், கல்லூரி நிர்வாக அலுவலர் சுரேஷ், மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முருகன் நன்றி கூறினார்.

    • கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி பெற்று, வட்டார அளவில் விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
    • வெற்றிபெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றி தழ்களை வழங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக, பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு நிறைவடைந்ததையொட்டி, சென்னையில் இருந்து வரப்பெற்ற தீபச்சுடரை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி பெற்று, வட்டார அளவில் விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை நூற்றாண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, பொது சுகாதாரத் துறையின் சார்பாக ஒவ்வொரு வட்டார அளவிலும் கடந்த 6-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

    வெற்றி பெற்ற அணிகளை மாவட்ட அள வில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கடந்த 17-ந் தேதியன்று தொடங்கி வைக்கப்பட்டு, 20-ந் தேதி வரை நடத்தப்பட்டது.

    அதனை தொடர்ந்து அனைத்து வட்டார அளவிலும் சுகாதார துறை சார்பாக விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மருத்துவ துறையில் ஓய்வு பெற்ற மருத்துவ பணியாளர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும், மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றி தழ்களை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர். ரமேஷ்குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட திட்ட அலுவலர் (தொற்றாநோய்) டாக்டர்.திருலோகன், டாக்டர்கள். விமல், திலக்குமார், சுரேஷ், சங்கீதா, மரைத்தென்றல், சுகாதாரப் பணிகள் நலக்கல்வியாளர் சப்தமோகன், நேர்முக உதவியாளர் மாதை யன்,மாவட்ட பூச்சியியல் நிபுணர் முத்துமாரியப்பன், மாவட்ட தாய் சேய் நல அலுவலர் பியூலா ஏஞ்ச லின் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • விபத்துக்கள் குறித்து விளக்கப்பட்டது

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி பஸ் நிலையத்தில் டேவிட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

    ஊர்வலத்திற்கு டாக்டர். டேவிட் விமல் குமார் தலைமை தாங்கினார். டாக்டர்.நிக்கி ரோஸ் முன்னிலை வகித்தார். வாணியம்பாடி கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. கொடி அசைத்து ஊர்வலத்தை தொடக்கி வைத்தார்.

    ஊர்வலம் பஸ் நிலையம், சி.என்.ஏ ரோடு, நியூ டவுன் பகுதிகளில் ஊர்வலமாக மாணவ, மாணவிகள், டாக்டர்கள் சமூக ஆர்வலர்கள், நகர அ.தி.மு.க. செயலாளர் சதாசிவம், நகர மன்ற உறுப்பினர் ஹாஜியார் ஜகீர் அகமது, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாரதிதாசன், குமார், செல்வராஜ் கருணைஇல்ல நிர்வாகி டேவிட் சுபாஷ் சந்திரன், நியூடவுன் பி.சங்கர் உட்பட பலர் சென்றனர்.

    நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் இறுதியில் நகராட்சி அலுவலக வளாகத்தை வந்து அடைந்தது. அங்கு மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டும் போது ஏற்படும் விபத்துக்கள் குறித்து விழிப்புணர்வு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    தொடர்ந்து அங்கு நடந்த கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, வாணியம்பாடி நகர மன்ற தலைவர் உமா சிவாஜிகணேசன், நகராட்சி ஆணையாளர் மாரிசெல்வி, நகர கூட்டுறவு வங்கி தலைவர் வி.எஸ்.சாரதி குமார் ஆகியோர் பேசினார். முடிவில் நகராட்சி என்ஜினீயர் சங்கர் நன்றி கூறினார்.

    • கூடலூர் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் படி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
    • மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்து கொடுப்பதின் அவசியம் குறித்து துண்டு பிரசுரம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    கூடலூர்:

    கூடலூர் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் படி மக்கும் குப்பை, மக்கா குப்பை என தனித்தனியாக பிரித்து கொடுப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

    இதற்கு நகராட்சி ஆணையர் காஞ்சனா தலைமை தாங்கினார். பொறியாளர் வரலட்சுமி முன்னிலை வைத்தார். நகராட்சி தலைவர் பத்மாவதி லோகந்துரை ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பழைய பஸ் நிலையம் அருகே முடிவடைந்தது.

    மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்து கொடுப்பதின் அவசியம் குறித்து துண்டு பிரசுரம் மூலம் பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த ஊர்வலத்தில் நகராட்சி சுகாதார அலுவலர் சக்திவேல், மேலாளர் ஜெயந்தி மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • விழிப்புணர்வு ஊர்வலத்தை தருமபுரி சரக டி.எஸ்.பி. வினோத் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • 50 பேர் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள ரத்த வங்கியில் ரத்த தானம் கொடுத்தனர்.

    தருமபுரி,

    உலக மருந்தாளுநர் தினத்தை முன்னிட்டு தருமபுரியில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. தருமபுரி ரோட்டரி அரங்கம் அருகில் இருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை தருமபுரி சரக டி.எஸ்.பி. வினோத் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த ஊர்வலத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், சில்லறை வணிக மருந்தாளுநர்கள், அரசு மருத்துவமனை மருந்தாளுநர்கள் மற்றும் பார்மசி கல்லூரி மாணவ-மாணவிகள் ஏராளமானோர் விழிப்புணர்வு பதாகைகளுடன் கலந்துகொண்டனர்.

    இந்த ஊர்வலம் 4 ரோடு, பைபாஸ் ரோடு வழியாக அரசு மருத்துவக் கல்லூரியை சென்றடைந்தது. அங்கு உலக மருத்தாளுநர் தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

    இந்த கருத்தரங்கில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் அமுதவல்லி, தருமபுரி மருந்து ஆய்வாளர் சந்திரா மேரி, மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் ராம் பிரபு மற்றும் தனியார் பார்மசி கல்லூரி முதல்வர்கள் பார்மசித்துறையில் பார்மசி துறையின் சிறப்பம்சங்கள் குறித்தும், பார்மசி படித்தால் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் விளக்கி பேசினர்.

    இதனைதொடர்ந்து மருந்தாளுநர்கள் 50 பேர் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள ரத்த வங்கியில் ரத்த தானம் கொடுத்தனர்.

    • பதாகைகளை ஏந்தி கோஷமிட்டு பேரணியாக சென்றனர்
    • மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் உத்தரவுப்படி, திமிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாணவ- மாணவிகளுக்கு பஸ் படிக்கட்டுகளில் அபாயகர மாக பயணம் செய்வதை தவிர்ப்பது குறித்தும், போதைப் பொருள் ஒழிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

    திமிரி பஸ் நிலையம் அருகில் தொடங்கிய ஊர்வலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத் தின் போது, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ - மாணவிகள் கையில் ஏந்தி கோஷமிட்டு சென்றனர்.

    இந்த ஊர்வலத்தில் டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ - மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களுக்கு இதயத்தின் செயல்பாடு மற்றும் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • இந்த பேரணியை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.

    தருமபுரி,

    தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உலக இருதய தினத்தை முன்னிட்டு தனியார் செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் சார்பில் பொதுமக்களுக்கு இதயத்தின் செயல்பாடு மற்றும் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணியை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்ட செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் இதயத்தின் செயல்பாடுகளையும், முக்கியத்துவத்தையும் பொதுமக்கள் புரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு பதாகை களை கையில் ஏந்தி கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

    இதில் உடற்பயிற்சி செய்வோம், ஆரோக்கியமாக வாழ்வோம், தீய பழக்கங்களை தவிர்ப்போம், இதயத்தை காப்போம், பிறக்கும் முன் துடிக்க தொடங்கும் இதயத்தை, பாதுகாப்பாக வைத்துக் கொள்வோம்.துரித உணவு தவிர்ப்போம், இதயத்தை காப்போம் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

    மருத்துவக் கல்லூரியில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி, சேலம் பிரதான சாலை வழியாக நெசவாளர் காலனி வரை நடைபெற்றது. இதனை தொடர்ந்து நெசவாளர் காலனியில் இலவச இருதய பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

    • 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.
    • இந்த ஊர்வலம் புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி பழையபேட்டை டி.பி.ரோடு, காந்தி ரோடு வழியாக புதுப்பேட்டை ஐந்து ரோடு பகுதியில் நிறைவடைந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக சர்வதேச நீலவான தூய காற்று தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த ஊர்வலத்தில், இயற்கையை நேசிப்போம், இனியாவது திருந்துவோம், வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் தூய்மையான காற்றை சுவாசிப்போம்,

    செல்போன் சூடாவதை பார்த்து கவலைப்படும் நாம் பூமி சூடாவதை எண்ணி கவலைப்படுவது இல்லை. இயற்கையை நேசிப்போம் இயற்கையுடன் வாழ வேண்டும் என யோசிப்போம். ஓசோனில் ஓட்டை நமக்கெல்லாம் வெட்கை. மரங்கள் வளர்ப்போம் ஓசோன் காப்போம்.

    ஓசோனின் தேவை நமக்கெல்லாம் அதுதான் போர்வை. ஓசோனைக் காப்போம் பூமியை காப்போம். ஓசோனைக் காப்பாற்றுங்கள் அல்லது அடுத்த தலைமுறைக்கு ஆபத்தை கொடுங்கள் என 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

    இந்த ஊர்வலம் புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி பழையபேட்டை டி.பி.ரோடு, காந்தி ரோடு வழியாக புதுப்பேட்டை ஐந்து ரோடு பகுதியில் நிறைவடைந்தது.

    ஊர்வலத்தில் மாவட்ட சுற்று சூழல் பொறியாளர் வெங்கடேசன், உதவி சுற்றுசூழல் பொறியாளர் சுமித்ராபாய், உதவி பொறியாளர்கள் ரங்கசாமி, தீனதயாளன், வினோதினி, தாசில்தார் சம்பத் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • நடந்தை ஊராட்சி சார்பில் நம்ம ஊரு சூப்பரு திட்டம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி மற்றும் ஊர்வலம் நடைபெற்றது.
    • விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவர் வசந்தா தலைமை வைத்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஊராட்சி ஒன்றியம் நடந்தை ஊராட்சி சார்பில் நம்ம ஊரு சூப்பரு திட்டம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி மற்றும் ஊர்வலம் நடைபெற்றது.

    விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவர் வசந்தா தலைமை வைத்தார். உறுதியேற்ப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள், ஊராட்சி பகுதிகளை சேர்ந்த வீதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழியை பொதுமக்கள் பயன்படுத்தக் கூடாது. பொதுமக்கள் துணிப்பை பயன்படுத்த வேண்டும். என் குப்பை என் பொறுப்பு. என் கிராமம் தூய்மை கிராமம் உள்ளிட்ட பல்வேறு உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

    அதை தொடர்ந்து நம்ம ஊரு சூப்பரு குறித்தவிழிப்புணர்வு ஊர்வலத்தை ஊராட்சித் தலைவர் வசந்தா துவக்கி வைத்தார். ஊர்வலம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை வந்தடைந்தது.

    நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ராஜேஸ்வரி, ஊராட்சி செயலர் பாலசுப்பிரமணி, ஊராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் உள்ள தெருக்களை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.

    • பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்
    • பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் எடுத்து ஆட்டுப்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு கல்லூரி மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து போதைப் பொருள் தடுப்பு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பிளாஸ்டிக் ஒழிப்பு ஆகியவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

    அரக்கோணம் எஸ். ஆர்.கே. தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலம் அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் முடிவடைந்தது.

    இந்த ஊர்வலத்தை அரக்கோணம் ரவிஎம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் சமூகத்தில் எந்த ஒரு நற்செயலும் மாணவர்கள் இருந்தே தொடங்க வேண்டும்.

    மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். போதைப் பொருளை ஒழித்து நல்ல சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு ஒவ்வொரு மாணவரிடமும் உள்ளது.

    அதற்கான முயற்சிகளை ஒவ்வொரு மாணவர்களும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    ஊர்வலத்தில் சப் கலெக்டர் பாத்திமா ரோட்டரி சங்கத் தலைவர் சதீஷ் செயலாளர் ராஜா நிர்வாகிகள் மனோகர் முரளி மற்றும் கல்லூரி முதல்வர் கவிதா பேராசிரியர்கள் ஜெகதா குமார் தமிழரசி செல்வக்கனி ஜெய்சங்கர் சாமுவேல் முரளி காந்தி செழியன் உடற்கல்வி இயக்குனர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆய்விற்கும் மேற்பட்ட

    100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பதாகைகளை கையில் ஏந்தி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ×