என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணா கல்லூரி சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு ஊர்வலம்

- போதை பொருள் விழிப்புணர்வு மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது
- துறை தலைவர்கள், பேராசிரியர்கள், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் உள்ள கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கல்வியியல் கல்லூரி சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் தொடங்கப்பட்ட ஊர்வலத்திற்கு கல்லூரியின் தலைவர் வள்ளி பெருமாள் தலைமைதாங்கினார். கல்லூரி முதல்வர் ஆறுமுகம் வரவேற்றார். கல்வியியல் கல்லூரி முதல்வர் அமலோற்பவம், பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போதை பொருள் விழிப்புணர்வு மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தியவாறு சென்றனர். மேலும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி னார்கள்.
இந்த ஊர்வலம் புதிய பஸ் நிலையம், அண்ணா சிலை, டி.பி. ரோடு, காந்தி சிலை, பழையபேட்டை என முக்கிய சாலைகள் வழியாக சென்றன. இதில் சப்&இன்ஸ்பெக்டர்கள் சந்துரு, குப்புசாமி, ராமதாஸ், போக்குவரத்து சப்&இன்ஸ்பெக்டர் சீதாராமன், கல்லூரி நிர்வாக அலுவலர் சுரேஷ், மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முருகன் நன்றி கூறினார்.