search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Awareness march"

    • போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
    • வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்

    ராணிப்பேட்டை:

    ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் ஊழல் தடுப்பு வாரத்தை முன்னிட்டு ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கியது.

    ஊர்வலத்தை ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப் பிரண்டு கிரண்ஸ்ருதி கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 3000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். ஊர்வலம் நவல்பூர், கெல்லீஸ் ரோடு என நகரின் முக்கிய வீதிகளின் வழியாக மாணவ-மாணவிகள் ஊழலுக்கு எதிரான விழிப்பு ணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந் தியவாறு சென்றனர்.

    இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்ரமணியம், பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்
    • பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

    இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான அக்டோபர் 31-ந்தேதியை ஒவ்வொரு ஆண்டும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் அனுசரித்து வருகிறது.

    நேற்று ராணிப்பேட்டையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

    ஊர்வலத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த ஊர்வலம் ராணிப்பேட்டை நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. ஊர்வலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ்உள்பட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஸ் நிலையம் அருகே லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரி தலைமையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணி பஸ் நிலையம் தொடங்கி சிஎல் சாலை வழியாக வாரசந்தை மைதானம் வரை நடைபெற்றது.

    இதில் சப் இன்ஸ்பெக்டர்கள் கணேசன், பிரகாஷ் மற்றும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
    • ஊர்வலத்தை கலெக்டர் கார்மேகம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    சேலம்:

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. ஊர்வலத்தை கலெக்டர் கார்மேகம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக அரசு நிலத்தடி நீர்மட்டத்தினை உயர்த்தவும், நீர் மேலாண்மைக்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் மழைநீரை வீணாக்காமல் அவர்களுடைய இல்லங்களில் சேகரிக்க வேண்டும்.

    பருவமழை காலம் தொடங்குவதற்கு முன்னதாக தங்கள் வீடுகளில் உள்ள மொட்டை மாடியை சுத்தப்படுத்த வேண்டும். மழைநீர் வடிக்குழாய்களில் அடைப்பு மற்றும் துவாரங்களை சரி செய்வதுடன், வடிகட்டும் தொட்டிகளில் உள்ள கூழாங்கல் மற்றும் கருங்கல் ஜல்லிகளை சுத்தம் செய்து மீண்டும் நிரப்ப வேண்டும்.

    வருகிற 22-ந் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களிலும் கட்டாயம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்த வேண்டும். மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நன்றாக பராமரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    துண்டு பிரசுரங்கள்

    மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு தொடர்பான குறும்படத்தினை கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்து பார்த்தார். கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் திருவள்ளுவர் சிலை, மாநகராட்சி அலுவலகம், அரசு ஆஸ்பத்திரி வழியாக மீண்டும் கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தது. இதில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ, மாணவிகள் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் செல்வராஜ், துணை மேற்பார்வை பொறியாளர் ஜெயகொடி, துணை நிலநீர் வல்லுனர் கல்யாணசுந்தரம், உதவி நிர்வாக பொறியாளர் கல்யாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் வளர்மதி தொடங்கி வைத்தார்
    • மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை நகரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கிராம குடிநீர் திட்டக் கோட்டம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்து மாணவர்கள், மகளிர் குழுக்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் மாவட்டம் முழுவதிலும் மழைநீர் சேகரிப்பு குறித்து குறும்படங்கள் ஒளிபரப்பும் வகையில் மின்னனு காணொளி வாகன பிரச்சார தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி கொடி அசைத்து, ஊர்வலத்தையும், வாகன பிரச்சாரத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நகரமன்றத் தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உதவி நிர்வாகப் பொறியாளர் குமரவேல், துணை நில நீர் வல்லுநர் மணிமேகலை, உதவி பொறியாளர் ஜெ யப்பிரியா, உதவி கணக்கு அலுவலர் நடராஜன் மற்றும் பொதுமக்கள், மகளிர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து ெகாண்டனர்

    செய்யாறு:

    செய்யாறு டவுன், ஆரணி கூட்ரோட்டில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் சிறுதானிய விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் மோகனவேல் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், நகர செயலாளர் வழக்கறிஞர் கே.விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒ.ஜோதி எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன், உணவு பாதுகாப்பு அலுவலர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர் ஞானவேல், சின்னதுரை, ராம் ரவி, துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் சார்பில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
    • அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இந்த பேரணிக்கு, மேட்டூர் தாசில்தார் முத்துராஜா தலைமை வகித்தார்.

    மேட்டூர்:

    மேட்டூரில், மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் சார்பில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

    மேட்டூர் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இந்த பேரணிக்கு, மேட்டூர் தாசில்தார் முத்துராஜா தலைமை வகித்தார். அரசு கலை கல்லூரி வளாகம் அருகே தொடங்கிய பேரணி, மாதா கோவில், மேட்டூர் நீதிமன்றம், எம்.எல்.ஏ அலுவலகம் வழியாக மீண்டும் கல்லூரி வளாகத்தைச் சென்றடைந்தது. இதில் மேட்டூர் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி மற்றும் மதுவிலக்கு போலீசார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • போலீசார் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் உலக போதை பொருள் தடுப்பு தின நிகழ்ச்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, போதை மருந்து பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசினார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி முன்னிலை வகித்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் அருண்குமார் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் போலீசார் போதை பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    இதில் கலால் துணை ஆணையர் சத்தியப்பிரசாத், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விஸ்வேஸ்வரய்யா, குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெட்ரோல் பயன்பாடை குறைத்து சைக்கிள் பயன்படுத்த வேண்டும் என அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்
    • ராயபுரம் வழியாக ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியை கடந்து மீண்டும் நஞ்சப்பா பள்ளியை அடைந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி சக்ஷம் அமைப்பு சார்பில் நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், அத்தியாவசிய செலவை கட்டுப்படுத்த அனைவரும் சைக்கிளை உபயோகிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்த சைக்கிள் ஊர்வலம் நடந்தது.

    இந்த சைக்கிள் ஊர்வலம் நஞ்சப்பா பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்டு ராயபுரம் வழியாக ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியை கடந்து மீண்டும் நஞ்சப்பா பள்ளியை அடைந்தது.பசுமை- சுகாதாரத்தை பாதுகாப்போம், பெட்ரோல் பயன்பாட்டை குறைத்து சைக்கிள் பயன்படுத்த ஊக்கப்படுத்துவோம்என்கிற விழிப்புணர்வு பதாகைகளுடன் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பெட்ரோல் பயன்பாடை குறைத்து சைக்கிள் பயன்படுத்த வேண்டும் என அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

    • தீ தொண்டு நாளையொட்டி நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் கடந்த 14-ந் தேதி முதல் ஒரு வாரம் தீ தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் 10 கிலோ மீட்டர் தொலைவு மாரத்தான் போட்டி நடந்தது.

    இதையடுத்து இன்று காலை வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தீயணைப்பு நிலையம் வரை விழிப்புணர்வு ஊர்வலம் இன்று நடந்தது.

    ஊர்வலத்தை தீயணைப்புத்துறை வடக்கு மண்டல துணை இயக்குனர் சரவணகுமார் தொடங்கி வைத்தார். வேலூர் கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு சேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    தீயணைப்புத் துறையினர் என்சிசி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு சார்பில் பணியாளர்கள் கொண்டு பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் என்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் வளர்மதி கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    ஊர்வலம் கருமாரியம்மன் கோவில் கூட்டு சாலையில் இருந்து பஸ் நிலையம் வழியாக அண்ணா சிலை காந்தி ரோடு சென்று தபால் அலுவலகத்தில் நிறைவு பெற்றது.

    பேரணியில் பயண்படுத்தும் பிளாஸ்டிக், பிளாஸ்டிக் தட்டு, டம்ளர், உருஞ்சுகுழாய்கள் ஒழிப்போம், பிளாஸ்டிக் பொருட்கள் பயண்படுத்து வதை தவிர்ப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.

    முன்னதாக பிளாஸ்டிக் பயண்பாட்டிற்கு எதிராக உறுதிமொழியினையும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பையை பயண்படுத்துவோம் என உறுதி மொழி ஏற்றனர்.

    இந்த பேரணியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், தாசில்தார் ஆனந்தன், மண்டல துணை தாசில்தார் அருட்செல்வம், வருவாய் ஆய்வாளர் தமிழரசி, கிராம நிர்வாக அலுவலர் ராஜகோபால் மற்றும் தனியார் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • மீண்டும் மஞ்சப் பையை பயன்படுத்துவோம் என்று உறுதிமொழி

    ராணிப்பேட்டை:

    தமிழ்நாடு மாசுக் கட்டுப் பாட்டு வாரியம் சார்பில், தனியார் தொழில் நிறுவன பணியாளர்கள் பங்கு பெற்ற பிளாஸ்டிக் மாசில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வு ஊர்வலம் ராணிப்பேட்டையில் நடந்தது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய ஊர்வலத்தை கலெக்டர் வளர்மதி கொடிய சைத்து தொடங்கிவைத்தார்.

    முன்னதாக பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழியினையும், பிளாஸ்டிக்கிற்கு பதிலாக அனைவரும் மீண்டும் மஞ்சப் பையை பயன்படுத்துவோம் என்ற உறுதிமொழியினை கலெக்டர் தலைமையில், அனைவரும் எடுத்துக்கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

    முதல்- அமைச்சர் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்ப்பதற்காக மீண்டும் மஞ் சப்பை திட்டத்தினை தொடங்கி வைத்தார். ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்து வதை நாம் அனைவரும் தவிர்க்க வேண்டும். நம் வீட் டில் உள்ள குப்பைகளை மக் கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கிட வேண்டும். பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும்.

    குழந்தைகளுக்கு இளம்வயதிலேயே இதுகுறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினால் குழந்தைகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டார்கள். எதிர்கால தலைமுறையினருக்கு தூய் மையான சுற்றுப்புறத்தை வழங்கிட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சுற்றுச்சூ ழல் விழிப்புணர்வு தோரணம், பதாகைகளை ஏந்திச் சென்று விழிப்புணர்வு கருத் துக்களை முழங்கிக்கொண்டு நகரத்தின் முக்கிய வீதி வழியாக சென்று ராணிப்பேட்டை புதிய பஸ் நிலையத்தை அடைந்தனர்.

    இதில் தமிழ்நாடு மாசு கட் டுப்பாட்டு வாரிய செயற் பொறியாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாட்டு நலத்திட்ட முகாம் நடந்தது
    • மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி மருத கேசரி மகளிர் கல்லூரி சார்பில் குன்னத்தூர் மற்றும் மண்டலவாடி பகுதியில் நாட்டு நல திட்ட மாணவர்களும், விதை குரல் தொண்டு நிறுவனமும் இணைந்து சிறப்பு முகாமை நடத்தியது.

    முகாமிற்கு கல்லூரி தலைவர் விமல்சந் ஜெயின், செயலாளர் லக்மிசந்த் ஜெயின், நிர்வாக குழு உறுப்பினர் ரமேஷ் குமார் ஜெயின் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற நாட்டு பணித்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் இன்பவள்ளி, கல்லூரி கல்வி ஆலோசகர் பேராசிரியர் பாலசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர், மக்கள் தொடர்பு அலுவலர் சக்தி மாலா மற்றும் விதையின் குரல் தொண்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரபு ஆகியோர் வரவேற்றுப் பேசினர்.

    குன்னத்தூர் பகுதியில் நடைபெற்ற முகாமில் உள் அலங்காரம் மற்றும் கட்டமைப்பு துறை தலைவர் விஜயலட்சுமி மற்றும் மேகநாதன் ஆகியோர் சிறப்புறையாற்றினார். மண்டலவாடி முகாமில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறை தலைவர் பவித்ரா தொடக்கி வைத்து பேசினார்.

    மேலும் இந்த முகாமில் நாட்டு நலத்திட்ட பணி மாணவிகள் பொன்னேரி தேசிய நெடுஞ்சாலையில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையில் தலைக்கவசம் அணிதல், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தை திருமணம் தடுப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற வாசகங்களை கையில் ஏந்தியவாறு வீதிவீதியாக சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு வீடு வீடாகச் சென்று குழந்தை தொழிலில் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது எனவும், பெண் கல்வியின் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறினர். மண்டலவாடி பகுதியைச் சேர்ந்த நாட்டு நல திட்ட பணி மாணவிகள் பொன்னேரியில் உள்ள பூங்காவிற்கு சென்று தூய்மைப்படுத்தினர். இந்த முகாமை நாட்டு நல திட்ட பணி ஒருங்கிணைப்பாளர் ஜெயஸ்ரீ, அருணா ஆகியோர் இணைந்து நடத்தினர்.

    ×