என் மலர்
உள்ளூர் செய்திகள்

சைக்கிள் பயன்பாட்டை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்ற காட்சி.
சைக்கிள் பயன்பாட்டை வலியுறுத்தி திருப்பூரில் விழிப்புணர்வு ஊர்வலம்
- பெட்ரோல் பயன்பாடை குறைத்து சைக்கிள் பயன்படுத்த வேண்டும் என அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்
- ராயபுரம் வழியாக ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியை கடந்து மீண்டும் நஞ்சப்பா பள்ளியை அடைந்தது.
திருப்பூர்:
திருப்பூர் நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி சக்ஷம் அமைப்பு சார்பில் நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், அத்தியாவசிய செலவை கட்டுப்படுத்த அனைவரும் சைக்கிளை உபயோகிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்த சைக்கிள் ஊர்வலம் நடந்தது.
இந்த சைக்கிள் ஊர்வலம் நஞ்சப்பா பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்டு ராயபுரம் வழியாக ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியை கடந்து மீண்டும் நஞ்சப்பா பள்ளியை அடைந்தது.பசுமை- சுகாதாரத்தை பாதுகாப்போம், பெட்ரோல் பயன்பாட்டை குறைத்து சைக்கிள் பயன்படுத்த ஊக்கப்படுத்துவோம்என்கிற விழிப்புணர்வு பதாகைகளுடன் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பெட்ரோல் பயன்பாடை குறைத்து சைக்கிள் பயன்படுத்த வேண்டும் என அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.






