என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்த போது எடுத்த படம்.
சேத்துப்பட்டில் மின் சிக்கனம், பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
- தேவையான போது மட்டுமே மின்விளக்குகளை பயன்படுத்த அறிவுரை
- எராளமானோர் கலந்து கொண்டனர்
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை, மாவட்டம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சேத்துப்பட்டு, மின்சார வாரிய கோட்டத்தின் சார்பில் மின்சார சிக்கனம், மற்றும் பாதுகாப்பு வார, விழா 14-ம்தேதி முதல் 20-ம் வரை நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு மின்சார சிக்கனம், மற்றும் பாதுகாப்பு, குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
சேத்துப்பட்டு மின்சார வாரிய கோட்ட செயற்பொறியாளர் ரவிச்சந்திர பாபு, தலைமை தாங்கி கொடி அசைத்து விழிப்புணர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை ஆலய வளாகத்தில் இருந்து போளூர் சாலை, ஆரணி சாலை, காமராஜர் பஸ் நிலையம், வந்தவாசி சாலை, செஞ்சி சாலை, வழியாக மின்வாரிய கோட்ட அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர்.
அப்போது தேவையான போது மட்டுமே மின்விளக்குகள், மற்றும் மின்விசிறிகள், பயன்படுத்த வேண்டும், சுவிட்சுகள், பிளக்குகள், போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும்.
இடி மின்னலின் போது மின்சார சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். உள்ளிட்ட மின்சார பாதுகாப்பு மற்றும் மின்சாரத்தின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பதாகளை ஏந்தியவாறு மின்சார வாரிய ஊழியர்கள் ஊர்வலமாக சென்றனர்.
அப்போது விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். ஊர்வலத்தில் உதவி செயற்பொறியாளர்கள் எழிலரசி, பக்தவாச்சலம், ரமேஷ் பாபு, மற்றும் மின்சார கோட்ட அலுவலர்கள், ஊழியர்கள், கலந்து கொண்டனர். முடிவில் நகர் பிரிவு உதவி மின் பொறியாளர் மோகனசுந்தரம், நன்றி கூறினார்.






