என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை பாதுகாப்பு, புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
    X

    சாலை பாதுகாப்பு, புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

    சாலை பாதுகாப்பு, புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

    • எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • விபத்துக்கள் குறித்து விளக்கப்பட்டது

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி பஸ் நிலையத்தில் டேவிட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

    ஊர்வலத்திற்கு டாக்டர். டேவிட் விமல் குமார் தலைமை தாங்கினார். டாக்டர்.நிக்கி ரோஸ் முன்னிலை வகித்தார். வாணியம்பாடி கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. கொடி அசைத்து ஊர்வலத்தை தொடக்கி வைத்தார்.

    ஊர்வலம் பஸ் நிலையம், சி.என்.ஏ ரோடு, நியூ டவுன் பகுதிகளில் ஊர்வலமாக மாணவ, மாணவிகள், டாக்டர்கள் சமூக ஆர்வலர்கள், நகர அ.தி.மு.க. செயலாளர் சதாசிவம், நகர மன்ற உறுப்பினர் ஹாஜியார் ஜகீர் அகமது, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாரதிதாசன், குமார், செல்வராஜ் கருணைஇல்ல நிர்வாகி டேவிட் சுபாஷ் சந்திரன், நியூடவுன் பி.சங்கர் உட்பட பலர் சென்றனர்.

    நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் இறுதியில் நகராட்சி அலுவலக வளாகத்தை வந்து அடைந்தது. அங்கு மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டும் போது ஏற்படும் விபத்துக்கள் குறித்து விழிப்புணர்வு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    தொடர்ந்து அங்கு நடந்த கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, வாணியம்பாடி நகர மன்ற தலைவர் உமா சிவாஜிகணேசன், நகராட்சி ஆணையாளர் மாரிசெல்வி, நகர கூட்டுறவு வங்கி தலைவர் வி.எஸ்.சாரதி குமார் ஆகியோர் பேசினார். முடிவில் நகராட்சி என்ஜினீயர் சங்கர் நன்றி கூறினார்.

    Next Story
    ×