search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளக்கு பூஜை"

    • மூலவருக்கு மூலிகைகளால் அபிஷேகம்
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அய்யப்பன் கோவிலில் விளக்கு பூஜை வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது.

    முன்னதாக அய்யப்பனுக்கு பல்வேறு மூலிகைகளால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அய்யப்பன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதை தொடர்ந்து வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு விளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தி பாடல்களை பாடினர்.

    இதைத் தொடர்ந்து மங்கல மேள வாத்தியங்கள் முழங்க ஸ்ரீ அய்யப்பனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த சிறப்புமிக்க விளக்கு பூஜையில் திரளான அய்யப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • கடைசியாக 2016-ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது.
    • விளக்கு பூஜையொட்டி விளக்கணி மாடத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டன.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் திருப்பணிகள் தொடங்குவதற்கு முன்பு வரை கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா கிராம முன்னேற்ற திட்டத்தின் சார்பில் ஆண்டு தோறும் 2008 திருவிளக்கு பூஜை நடைபெற்று வந்தது. கடைசியாக 2016-ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது. அதன்பின்னர் கோவிலில் திருப்பணி நடைபெற்று வந்ததால் 6 ஆண்டுகள் திருவிளக்கு பூஜை நடைபெறவில்லை.

    கடந்த ஜூலை மாதம் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றதை அடுத்து இந்த ஆண்டு முதல் மீண்டும் திருவிளக்கு பூஜை நடத்த விவேகானந்தா கேந்திராவின் கிராம முன்னேற்ற திட்ட அமைப்பு முன் வந்தது. அதன்படி நேற்று மாலையில் பஜனை, ஆன்மிக சொற்பொழிவு போன்றவை நடந்தது. வெள்ளிமலை சாமி சைதன்யா மகராஜ் தலைமை தாங்கி ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். தொடர்ந்து அலங்கார தீபாராதனைக்கு பின்னர் திருவிளக்கு பூஜை தொடங்கியது.

    இந்த பூஜையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து பெண்கள் கலந்து கொண்டனர். விளக்கு பூஜையொட்டி விளக்கணி மாடத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டன.

    • மூலஸ்தான தீபாரதனை நடைபெற்றது.
    • பெண்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி விழாவை முன்னிட்டு காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 8 மணிக்கு காலசந்தி பூஜை நடைபெற்றது.

    நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் மூலஸ்தான தீபாரதனை நடைபெற்றது.

    இதில் குலசேகரன்பட்டினம் சுற்றுவட்டார பெண்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
    • ஏராளமான பெண்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 8 மணிக்கு காலசந்தி பூஜை, மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 7.30 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் குலசேகரன்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு திருவிளக்கு பூஜை செய்து அம்மனை தரிசனம் செய்தனர்.

    • இன்று குற்றாலத்தில் இருந்து புனித நீர் எடுத்து வரப்படுகிறது.
    • நாளை அம்மன் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.

    தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான பாவூர்சத்திரம் அருகே சிவகாமிபுரம் பெரியம்மன் கோவிலில் திருவிழா கடந்த 7-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மாலையில் நெய்விளக்கு பூைஜ நடைபெற்றது. 8-ந் தேதி மாலையில் அம்மனுக்கு பக்தர்களால் புஷ்பாஞ்சலி நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் மாலையில் சுமங்கலி பூஜை நடந்தது.

    நேற்று மாலையில் உலக நன்மை வேண்டி, திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். தொடர்ந்து கரகாட்டம், நையாண்டி மேளம் நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் வாணவேடிக்கை நடைபெற்றது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு நையாண்டி மேளத்துடன் குற்றாலத்தில் இருந்து புனித நீர் எடுத்து வரப்படுகிறது. இரவு 8 மணிக்கு அம்மனுக்கு பட்டு உள்ளிட்ட நேர்ச்சை பொருட்கள் ஊர்வலமாக எடுத்து வரப்படுகின்றன. நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.

    நாளை (புதன்கிழமை) மதியம் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனையை தொடர்ந்து அம்மன் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். மாலை 5 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழா நாட்களில் தினமும் மாலையில் சிறுமிகள், பெண்கள் பங்கேற்ற கும்மியடி நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழா ஏற்பாடுகளை சிவகாமிபுரம் ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

    • தங்கரதம் பவனி, தீபாராதனை நடந்தது.
    • அத்தாழ பூஜை நடைபெற்றது.

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 12-ந் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடந்தது. முதல் நாள் சுமங்கலி பூஜை, இரண்டாம் நாள் அஸ்வதி பொங்கல் வழிபாடு நடைபெற்றது. நேற்று திருவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி காலை கணபதி ஹோமம், உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், உஷபூஜை, பஜனை, மதியம் உச்சபூஜை நடந்தது. மாலை 5.45 மணிக்கு 201 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். 6.15 மணிக்கு தங்கரதம் பவனி, தீபாராதனை நடந்தது.

    இரவு 7 மணிக்கு கோவில் சமய வகுப்பு மாணவர்கள் மற்றும் மண்டைக்காடு தேவஸ்தான மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. 8 மணிக்கு அத்தாழ பூஜை நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். விழா நாட்களில் திங்கள்நகர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    • பூஜை செய்த ஒவ்வொருவருக்கும் மங்களப் பொருட்கள் வழங்கப்பட்டது.
    • சுகுந்த குந்தலாம்பிகை சன்னதியில் மகாதீப ஆராதனை நடந்தது.

    திருச்செங்கோடு கைலாசநாதர் கோவில் சொக்கப்ப முதலியார் அரங்கத்தில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அருள்நெறி வார வழிபாட்டு குழு தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். அகில பாரத சன்னியாசிகள் சங்க பொறுப்பாளர் ராமானந்தா சுவாமிகள், மயில் முருகேஷ் சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு ஆன்மிகம் குறித்து பேசினார். மீனாட்சி ரவிச்சந்திரன், ரேணுகா லட்சுமண சுவாமி ஆகியோர் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்தனர். இதையடுத்து உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் 1,008 பெண்கள் மற்றும் சிறுமிகள் அமர்ந்து விளக்கு ஏற்றி பூஜை செய்தனர்.

    பூஜை செய்த ஒவ்வொருவருக்கும் மஞ்சள் பிள்ளையார், உதிரி புஷ்பம், லட்டு, ஊதுபத்தி, கற்பூரம், விபூதி, குங்குமம் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் சுகுந்த குந்தலாம்பிகை சன்னதியில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், மகாதீப ஆராதனை நடந்தது.

    • மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடந்தது.
    • பவுர்ணமியான இன்று மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடைபெற்றது.

    விழுப்புரம்:

    தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் அமைச்சர் சேகர்பாபு ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோவில்களில் விளக்கு பூஜை நடைபெற ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.

    அதன்படி பவுர்ணமி யான இன்று மேல்மலை யனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடைபெற்றது. இந் நிகழ்ச்சியை அமைச்சர் செஞ்சிமஸ்தான் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்கு–மார், உதவி ஆணையர் ஜீவானந்தம், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், சுப்பிர–மணியன், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றியக்குழு துணை தலைவர் விஜயலட்சுமி முருகன், ஒன்றிய கவுன்சிலர் யசோதரை, ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், அறங்காவலர்கள் வடிவேல் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராம லிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, சந்தானம் பூசாரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    செல்வம் தருபவள் திருமகள். அந்தத் திருமகள் நம்மைத் தேடி வர, பல வழிகளில் வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் திரு விளக்கு பூஜை.
    உலகில் வாழும் ஒவ்வொரு வரும் எந்த வழியிலாவது வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்துவிட வேண்டும் என்ற குறிக்கோளோடு தான் வாழ்கிறார்கள். ஒரு சிலருக்கு அந்தக் குறிக்கோள் உடனடியாக நிறைவேறி விடுகிறது; சிலருக்கு தாமதப்படுகிறது. ஒரு மனிதன், பொருளாதார நிலையில் உயர வேண்டுமானால் லட்சுமியின் கடைக்கண் பார்வை இருந்தால் போதும். அந்த லட்சுமி நம்மைப் பார்க்க வேண்டுமானால் நாம் பல நல்ல வழிமுறைகளைக் கையாள வேண்டும். பொருளாதார வளர்ச்சி மட்டும் ஒரு மனிதனுக்குப் போதாது. அந்தப் பொருளாதாரத்தை பலருக்கும் கொடுத்து உதவும், நல்ல மனதையும் அவன் பெற்றிருக்க வேண்டும்.

    செல்வம் தருபவள் திருமகள். அந்தத் திருமகள் நம்மைத் தேடி வர, பல வழிகளில் வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் திரு விளக்கு பூஜை. “அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்பது வள்ளுவர் வாக்கு. இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு மனிதனும் செல்வந்தனாக வாழ ஆசைப்படுகிறான். செல்வம் இருந்தால் தான் சமூகத்தில் உயர்ந்த நிலை என்ற சூழ்நிலை தற்போது நிலவுகிறது. பணம் வருவது ஒரு பெரிய செயல் அல்ல. வந்த பணம் கையில் நிலைத்திருக்க வேண்டும், அதுதான் முக்கியம்.

    ‘பெண்கள் சிரித்த முகத்தோடு, கோபப்படாமல் இருந்தால் ஸ்ரீதேவி சீக்கிரம் நம்மை நாடி வருவாள்’ என்று புராணங்கள் கூறுகின்றன. சினம் இருந்தால் பணம் வராது என்பார்கள். முதலில் குடும்பங்களில் ஏற்படும் தேவையற்ற கோபங்களைத் தடுக்க வேண்டும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். குடும்பத்தினர் ஒவ்வொருவரும் அன்பைப் பகிர்ந்துகொண்டால் ஆத்திரம் குறைந்துவிடும். அமைதி நிலவி வரும்.

    குறிப்பாக குடும்பப் பெண்கள் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு எந்தச் செயலையும் செய்யக்கூடாது. நாகரிக காலத்தில் கோவிலுக்கு கூட தலைவிரிக் கோலமாகத் தான் வருகின்றனர். இதை ஒவ்வொரு பெற்றோரும் கண்டிக்க வேண்டும். திருமணமாகி ஒரு பெண் புகுந்த வீட்டிற்குச் செல்லும் பொழுது, முதன் முதலில் குத்துவிளக்கு ஏற்றச் சொல்வது மரபு. குத்து விளக்கிற்கு ஐந்து முகங்கள் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தத்துவத்தைக் கொண்டிருக்கின்றன. அன்பு, மனஉறுதி, சகிப்புத் தன்மை, நிதானம், சமயோஜித புத்தி ஆகிய ஐந்தும் வரும் பெண்ணுக்கு இருந்தால், குடும்பம் குல விருத்தியாகும் என்பதுதான் குளத்து விளக்கு ஏற்றுவதன் தத்துவம் ஆகும்.

    பெண்கள், தினமும் அதிகாலை நேரத்திலும், மாலை நேரத்திலும் இல்லங்களில் அவசியம் விளக்கேற்ற வேண்டும். லட்சுமியின் கடைக்கண் பார்வை இருந்தால் தான் லட்சாதிபதி களும், கோடீஸ்வரர்களும் உருவாக முடியும். தீபத்தை எப்படி ஏற்றுவது? எந்த வகை எண்ணெய் ஊற்றுவது?, எத்தனை முகங்கள் ஏற்றுவது? எந்த திசை பார்த்து ஏற்றுவது? போன்ற சந்தேகங்கள் எல்லோருக்கும் தோன்றுவது இயற்கை.

    திருவிளக்கு பூஜை செய்வதற்கு இல்லத்தை புனிதப்படுத்தி முறையாக விளக்கேற்றி, அஷ்டலட்சுமி படத்தை வைத்து, அஷ்டலட்சுமி கவசம், அஷ்டலட்சுமி வருகைப் பதிகம் பாடி இனிப்புப் பொருள் நைவேத்தியம் செய்து வைத்து தீபம் காட்டி வழிபட வேண்டும். இப்படி தினமும் வழிபட்டால் லட்சுமி நிலையாக இல்லத்தில் குடியிருந்து அருள்புரிவாள். வெள்ளிக்கிழமை அன்று வழிபட்டால் இல்லம் செழிப்பாகும்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட அகல்விளக்கில் இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றினால், எப்படிப்பட்ட கடுமையான பிரச்சினையும் எளிதில் அகன்றுவிடும். தீபம் ஏற்றி வழிபடு வதன் மூலம் நம்முடைய பாவங்கள் படிப்படியாக குறையும். ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு எண்ணெய் உகந்தது. எல்லா எண்ணெய்யும் கிடைக்காதவர்கள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் நன்மைகள் நாளும் வந்து கொண்டேயிருக்கும்.

    இப்படிப்பட்ட விளக்கிற்கு ஒளிகொடுக்க எந்த வகையான திரியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது சிலரின் கேள்வி. எல்லாத் தடைகளும் அகன்று மகாலட்சுமியின் பூரண அருள் கிடைக்க, தாமரைத் தண்டு திரி உபயோகிப்பது நல்லது. கிடைக்காத சூழ்நிலையில் பஞ்சுத் திரியை உபயோகிக்கலாம்.

    விளக்கின் முன் அமர்ந்து பாட வேண்டிய பாடல்.

    “விளக்கே! திருவிளக்கே, வேந்தன் உடன்பிறப்பே
    சோதிமணி விளக்கே! ஸ்ரீதேவிப் பொன்மணியே!
    அந்தி விளக்கே! அலங்கார நாயகியே!
    காந்தி விளக்கே! காமாட்சி தாயாரே!
    பசும்பொன் விளக்குவைத்து பஞ்சுத் திரி போட்டு
    குளம்போல் எண்ணெய் விட்டு கோலமுடன்
    ஏற்றிவைத்தேன்!
    ஏற்றினேன் நெய்விளக்கு எந்தன் குடிவிளங்க
    வைத்தேன் திருவிளக்கு மாளிகையும் தான் விளங்க”

    விளக்கின் முன்வைக்கும் தேங்காய் மற்றும் பழ வகைகளை, சுமங்கலிக்கு கொடுத்து, நாமும் சாப்பிடலாம். திருவிளக்கு பூஜையை வெள்ளி மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் செய்து வழிபட்டால் அஷ்டலட்சுமியின் அருட்பார்வை முழுமையாக கிடைக்கும்.

    வீடுகளில் விளக்கு பூஜை செய்ய இயலாத சுமங்கலிப் பெண்கள், ஆண்டிற்கு ஒரு முறையாவது ஆடி மாதங்களில் கோவில்களில் நடைபெறும் விளக்கு பூஜையில் கலந்துகொண்டால் சுமங்கலி பாக்கியம் அமையும். வாழ்வில் சுகங்களும், சந்தோஷங்களும் நிறையும்.
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கோட்டூர் முத்துமாரியம் மன் கோவிலில் 1500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கோட்டூர் முத்துமாரியம்மன் கோவிலில் 1500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு அம்மனுக்கு காப்புகட்டி தினமும் காலை, மாலை சிறப்பு அபிஷேகமும், இரவு கும்மியடியும் நடைபெற்று வருகிறது.

    விழாவில் ஒரு பகுதியான நேற்று சுமார் 1500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங் கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பெண் கள் மாங்கல்ய பாக்கியம், குழந்தை பாக்கியம், லட்சுமி பாக்கியம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் தடையின்றி கிடைக்க திருவிளக்கு பூஜை யில் கலந்து கொண்டனர்.

    மேலும் மாணவிகள் மதிப் பெண்கள் அதிகம் பெறுவதற்கும் விளக்கு பூஜையில் கலந்து கொண் டனர். இந்நிகழ்ச்சியில் தேவகோட்டை, பெரிய காரை, அடசிவயல், கோட் டூர், கள்ளிக்குடி, நாகாடி, புதுக்கோட்டை, நயினார் வயல், திருமண வயல், பரமக்குடி மற்றும் கோட்டூர் கிராமத்தை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் இறுதி விழாவாக பூச்சொரிதல் விழா, அம்மன் திருவீதி உலா அதனை தொடர்ந்து முளைப்பாரி திருவிழா செவ்வாய்கிழமை நடைபெற உள்ளது, இதே போன்று முளைப்பாரி திருவிழா கோட்டூர், நாகாடி, பெரியகாரை, கள்ளிக்குடி, அடசிவயல், சுற்றியுள்ள 50க்கும் மேற் பட்ட கிராமங்களிலும் நடை பெறுகிறது.
    தச்சநல்லூர் சந்திமறித்தம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான பங்குனி மாத பிறப்பான நேற்று 2,007 திருவிளக்கு பூஜை நடந்தது.
    தச்சநல்லூர் சந்திமறித்தம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 1-ந்தேதி ஜோதி வழிபாட்டு குழுவின் சார்பில் திருவிளக்கு பூஜை நடத்தப்படுவது வழக்கம். அதேபோல் பங்குனி மாத பிறப்பான நேற்று 2,007 திருவிளக்கு பூஜை நடந்தது.

    இதையொட்டி மாலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. அம்பாள் ரெங்கமன்னர், ஆண்டாள் திருக்கோலத்திலும், உற்சவர் அம்பாள் திருமணச்சேரி கல்யாண சுந்தரேசுவரர், கோகிலாம்மாள் திருமண கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    மாலை 6-30 மணிக்கு கோவில் வளாகத்திலும், தச்சநல்லூர் மெயின் ரோட்டிலும் 2,007 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு வழிபாடு செய்து அம்மனை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, தச்சநல்லூர் மெயின் ரோட்டில் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
    ×