search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lamp Worship"

    • வழிபாடுகளில் தேங்காய்க்கு மிகுந்த முக்கியத்துவம் தருகிறோம்.
    • வெண்மையான பருப்பே பேரின்பம் என்றும் சொல்லப்படுகிறது.

    காலம் காலமாகவே நம்முடைய வழிபாடுகளில் தேங்காய்க்கு மிகுந்த முக்கியத்துவம் தருகிறோம். தேங்காயை உடைத்து, அதன் குடுமியை அகற்றிவிட்டு, உள்ளிருக்கும் வெண்மையான பருப்புகளை இறைவனுக்கு சமர்ப்பித்து, தீப ஆராதனை செய்யும் போதுதான், நம்முடைய பூஜை முழுமை பெற்றதாக உணருகிறோம்.

    அதேபோல் கோயில்களுக்குச் செல்லும்போது, அர்ச்சனைத் தட்டை குருக்களிடம் கொடுத்துவிட்டு, நாம் கொடுத்த தேங்காய் சரியாக உடைக்கப்படுகிறதா? இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படுகிறதா என்பதை உன்னிப்பாக கவனிக்காதவர்களே இல்லை என்று சொல்லலாம்.

    அந்த அளவுக்கு பூஜையின்போது தேங்காய் நம்முடைய உணர்வுடன் ஒன்றிவிட்ட விஷயமாகிவிட்டது. இது உடையும் தன்மையைப் பொறுத்தே நம்முடைய இன்ப துன்பங்களைக் கணிக்கும் அளவுக்கு இதன் மீதான நம் நம்பிக்கை மிகப் பெரியது. இப்படி முக்கியத்துவம் கொண்ட தேங்காயை இறைவனுக்குப் படைப்பதன் தத்துவம் என்ன என்பது பற்றித் தெரிந்துகொள்வோம்.

    ஆணவம், கன்மம், மாயை இம்மூன்றும் மும்மலம் என்று சொல்லப்படுகின்றது. தேங்காய் உடைப்பதென்பது நம் ஆன்மாவைச் சுற்றியுள்ள இம்மும்மலங்களைப் போக்குவதற்காகவே.

     தேங்காயின் மேல் இருக்கும் மட்டையை மாய மலம் என்றும், மட்டை என்னும் மாய மலத்தை நீக்கினால், அடுத்ததாக வரும் நார் என்பதை கண்ம மலம் என்றும், கண்ம மலத்துக்கு அடுத்து வரும் ஓட்டை ஆணவ மலம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த மூன்று மலங்களையும் நீக்கிய பிறகு கிடைக்கும் வெண்மையான பருப்பே பேரின்பம் என்றும் சொல்லப்படுகிறது. நம் மனதை மூடியிருக்கும்

    இந்த மூன்று மலங்களையும் அகற்றி, பேரின்பத்தை அடையவேண்டும் என்பதற்காகவே தேங்காய் உடைத்து இறைவனுக்கு அர்ப்பணிக்கிறோம்.

    தேங்காய் உடைக்கும்போது தேங்காய் சரியாக உடையாமல் இருக்கலாம் அல்லது அழுகி இருக்கலாம். இது போன்ற சில நிகழ்வுகள் நம் மனதை சஞ்சலப்படுத்தும். எனவே, தேங்காய் எப்படி உடைந்தால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.

    நாம் அர்ச்சனைக்குக் கொடுத்த தட்டு மாறி வந்தால், அதை நாம் அபசகுனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அதேபோல் ஆலயத்தில் உடைக்கும் தேங்காய்க்கும் சகுனம் பார்க்கத் தேவையில்லை. சகுனம் பார்ப்பதற்காக உடைக்கப்படும் தேங்காய், அது உடையும் முறையைப் பொறுத்து நமக்குப் பலன்களைத் தரும்.

    * தேங்காய் சரிபாதியாக உடைந்தால் குடும்பத்தில் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

    * தேங்காயின் மேல்பகுதி அதாவது கண்பாகம் உள்ள பகுதி பெரிதாகவும், அடிப்பகுதி சிறியதாகவும் உடைந்தால் இல்லத்தில் செல்வம் பெருகும்.

    * கண்பகுதி சிறியதாகவும் கீழ்ப்பகுதி பெரியதாகவும் உடைந்தால் குடும்பத்தில் உள்ள பிரச்னைக்கு உரிய விஷயங்கள் தீர்ந்து இல்லத்தில் அமைதி பெருகும்.

    * தேங்காய் உடைக்கும்போது ஒரு சிறிய பாகம் அதனுள் விழுந்தால், அதிர்ஷ்ட வாய்ப்புகள் நிச்சயம் உருவாகும்.

    * சகுனத்துக்கு உடைக்கும் தேங்காயின் உட்புறம் பூ இருப்பின் நினைத்த காரியம் கண்டிப்பாக நிறைவேறும்,

    * தேங்காய் நீளவாக்கில் இரண்டாக உடைந்தால் பிரச்னைகள் உருவாகும்.

    * தேங்காய் அழுகி இருப்பின் நினைத்த காரியங்கள் சற்று தள்ளிப் போகும்.

    * சிதறு தேங்காய் உடைக்கும்பொழுது சகுனம் பார்க்க வேண்டியதில்லை.

    * சாஸ்திரமானது பூமிக்குள் விளையும் பொருட்களை அகந்த மூலம் என்றும், மரத்தின் உச்சியில் விளையும் பொருட்களை கந்த மூலம் என்றும் குறிப்பிடுகின்றது.

    * அகந்த மூலமானது மனிதனுக்கு தாம்ச குணத்தையும், கந்த மூலம் சத்வ குணத்தையும் உருவாக்கும். மரத்தின் உச்சியில் விளையும் கந்த மூலப் பொருளான தேங்காயை மனிதன் உட்கொள்ளும்போது மனிதனுக்கு சத்வ குணம் மேலோங்கி இன்பத்துடன் வாழலாம்.

    * முன்னோர்கள் வகுத்த முறைகளை பின்பற்றி நாளும் இறைவனைத் தொழுது நல்ல பலன்களைப் பெறுவோம். சீரும் சிறப்போடும் வாழ்வோம்.

    • தமிழகம் முழுவதும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது.
    • அனைத்து கோவில்களிலும் சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.

    திருப்பூர்:

    தமிழகம் முழுவதும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருப்பூரில் நேற்று மாலை பெரும்பாலான வீடுகள், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் விளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்தினர். வீட்டின் முற்றம், வாசல், மாடி என எங்கு திரும்பினாலும் தீபமாகவே காட்சியளித்தது. பெண்களும், குழந்தைகளும் ஆர்வமுடன் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். சில வீடுகளில் ஓலை கொலுக்கட்டை செய்து சாமிக்கு படைத்து வழிபட்டனர். இதனால் திருப்பூரில் கார்த்திகை தீபத் திருவிழா களை கட்டியது.

    சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு விநாயகர் பூஜை உள்ளிட்ட சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு ஸ்ரீதர்மசம்வர்த்தினி அம்பிகா சமேத வாலீஸ்வரர் சாமிக்கு, பால், தயிர், இளநீர் உள்பட 32 வகை திரவிய அபிஷேகம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு கார்த்திகை ஜோதி தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சேவூரில் உள்ள கல்யாண வெங்கட்ரமண சாமி கோவில், அஞ்சநேயர் கோவில், பத்ரகாளியம்மன் கோவில்களில் கார்த்திகை ஜோதி தீபம் ஏற்றப்பட்டது.

    இதுபோல் ஊத்துக்குளி பகுதியில் அனைத்து கோவில்களிலும் சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. பிரசித்தி பெற்ற கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவில், பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், ஊத்துக்குளி கைலாசநாதர் கோவில், அம்மன் கோவில்களில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று மாலை பெண்கள் புத்தாடை அணிந்து கோவில்களில் தீபம் ஏற்றினர். அதனைத் தொடர்ந்து அவரவர் வீடுகளில் வண்ண கோலமிட்டு மண் விளக்குகளில் தீபமேற்றி வழிபட்டனர்.

    • மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடந்தது.
    • பவுர்ணமியான இன்று மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடைபெற்றது.

    விழுப்புரம்:

    தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் அமைச்சர் சேகர்பாபு ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோவில்களில் விளக்கு பூஜை நடைபெற ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.

    அதன்படி பவுர்ணமி யான இன்று மேல்மலை யனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடைபெற்றது. இந் நிகழ்ச்சியை அமைச்சர் செஞ்சிமஸ்தான் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்கு–மார், உதவி ஆணையர் ஜீவானந்தம், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், சுப்பிர–மணியன், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றியக்குழு துணை தலைவர் விஜயலட்சுமி முருகன், ஒன்றிய கவுன்சிலர் யசோதரை, ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், அறங்காவலர்கள் வடிவேல் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராம லிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, சந்தானம் பூசாரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    பேராவூரணி அருகே சோழகனார்வயல் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
    பேராவூரணி:

    பேராவூரணி அருகே கொரட்டூர், சோழகனார்வயல் கிராமத்தில் உள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் கோவிலில், விரைவில் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெற வேண்டி தேவாரம், திருவாசகம் முற்றோதல் மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    இதையொட்டி காலை முதல் தேன்தமிழ் தேவாரம், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் திருவிளக்கு பூஜை நடந்தது. இந்நிகழ்வில் கொரட்டூர், சோழகனார் வயல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர். 

    ஏற்பாடுகளை உலக சிவசித்தர்கள் அறக்கட்டளை, அறந்தாங்கி மற்றும் பேராவூரணி சிவனடியார் திருக்கூட்டம், கொரட்டூர் - சோழகனார்வயல் கிராமத்தினர் செய்திருந்தனர்.

    ×