search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிவகாமிபுரம் பெரியம்மன் கோவிலில் திரு விளக்கு பூஜை
    X

    சிவகாமிபுரம் பெரியம்மன் கோவிலில் திரு விளக்கு பூஜை

    • இன்று குற்றாலத்தில் இருந்து புனித நீர் எடுத்து வரப்படுகிறது.
    • நாளை அம்மன் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.

    தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான பாவூர்சத்திரம் அருகே சிவகாமிபுரம் பெரியம்மன் கோவிலில் திருவிழா கடந்த 7-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மாலையில் நெய்விளக்கு பூைஜ நடைபெற்றது. 8-ந் தேதி மாலையில் அம்மனுக்கு பக்தர்களால் புஷ்பாஞ்சலி நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் மாலையில் சுமங்கலி பூஜை நடந்தது.

    நேற்று மாலையில் உலக நன்மை வேண்டி, திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். தொடர்ந்து கரகாட்டம், நையாண்டி மேளம் நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் வாணவேடிக்கை நடைபெற்றது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு நையாண்டி மேளத்துடன் குற்றாலத்தில் இருந்து புனித நீர் எடுத்து வரப்படுகிறது. இரவு 8 மணிக்கு அம்மனுக்கு பட்டு உள்ளிட்ட நேர்ச்சை பொருட்கள் ஊர்வலமாக எடுத்து வரப்படுகின்றன. நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.

    நாளை (புதன்கிழமை) மதியம் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனையை தொடர்ந்து அம்மன் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். மாலை 5 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழா நாட்களில் தினமும் மாலையில் சிறுமிகள், பெண்கள் பங்கேற்ற கும்மியடி நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழா ஏற்பாடுகளை சிவகாமிபுரம் ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

    Next Story
    ×