search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விரிவாக்கப் பணி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தொடக்க விழா மின்ட் தங்க சாலை பகுதியில் இன்று மாலை நடைபெறுகிறது.
    • நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.

    சென்னை:

    ரூ.4,181 கோடி மதிப்பீட்டில், வடசென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகள் தொடக்க விழா மின்ட் தங்க சாலை பகுதியில் இன்று மாலை நடைபெறுகிறது.

    பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று தொடங்கி வைக்கிறார்.

    இதில் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், சி.எம்.டி.ஏ., பள்ளிக் கல்வித்துறை, சுகாதாரத்துறை, மீன் வளத்துறை, விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெறும் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

    சென்னை நகரின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் விக்டோரியா ஹால் புதுப்பிப்பு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரி யம் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி வீடுகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்பட முடிவுற்ற எண்ணற்ற பணிகளையும் திறந்து வைக்கிறார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.

    • இட நெருக்கடி காரணமாக 2 புதிய நடை மேடைகள் அமைக்கப்பட உள்ளது.
    • ஆரம்பக் கட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளன.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இட நெருக்கடி காரணமாக 2 புதிய நடை மேடைகள் அமை க்கப்பட உள்ளது. இதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளன.

    இதன் ஒரு பகுதியாக கடந்த சில ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் இருந்து வந்த மேம்பாலம் அகற்றப்படுகிறது. இந்தப் பாலம் ரெயில் நிலையத்தில் முன்பிருந்த ரோடு ரெயில்வே தண்டவாளம் அமைந்த காரணத்திற்காக வடிவீஸ்வரம் ஊர்மக்கள் ஊட்டுவாழ்மடம் ரேசன் கடைக்கு செல்ல வசதியாக அமைக்கப்பட்டது. ஆனால் இதன் பயன்பாடு குறைந்ததால் தற்போது நடைமேடைகள் 1,2 மற்றும் 3-க்குச் செல்ல லிப்டுக்குச் செல்லும் பாதையாக மாற்றப்பட்டது.

    இந்த சூழலில் மேம்பா லத்தின் தூண், பிட்லைன் விரிவாக்கம் செய்ய உள்ள பகுதியில் இடையூறாக இருந்து வந்தது. ஆகையால் இந்த மேம்பாலத்தின் பகுதி வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. புதிய நடைமேடைகள் (4 மற்றும் 5) அமைத்த பிறகு இந்த நடை மேம்பாலத்தை மீண்டும் அமைத்து ரெயில் நிலையம் பின்புறம் வழியாக 2-வது நுழைவு வாயில் அமைக்க வேண்டும். 4 வழி சாலை இணைக்கும் இடத்தில் நடை மேடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ரெயில் பயணி கள் சங்க தலைவர் ஸ்ரீராம் வலியுறுத்தி உள்ளார்.

    ×