search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடுதலை சிறுத்தைகள்"

    சங்கராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பஸ் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய, நகரம் சார்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தமிழ்மாறன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வக்கீல் அணி மாநில செயலாளர் பார்வேந்தன், மாநில துணை பொது செயலாளர் திருமார்பன், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

    மூங்கில்துறைப்பட்டு பகுதியில் அத்துமீறி நுழைந்து பொருட்களை சூறையாடி வன்முறையில் ஈடுபட்ட கும்பலை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும், சேதப்படுத்திய சொத்துக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், ஆதிதிராவிடர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் நிர்வாகிகள் ராமமூர்த்தி, பாலு, பொன்னிவளவன், அறிவுக்கரசு, திராவிட சந்திரன், தொல்காப்பியன், கிள்ளிவளவன், குமார், வெங்கடேசன், கண்ணன், சக்திவேல், ராதிகா, பழனியம்மாள், காந்தி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
    • வருவாய் அலுவலர் பிரியா, கிராம நிர்வாக அலுவலர் நர்மதா, நில அளவையர் பிச்சைமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட கருக்கட்டான்பட்டி ஆதி திராவிடர் குடியிருப்பு பொதுமக்கள் இந்த பகுதிக்கு கழிவறை வேண்டி பலமுறை நகராட்சியிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் இன்குலாப், நகர செயலாளர் விடுதலை மாரி, ஒன்றிய செயலாளர் பழனிசாமி, தொகுதி அமைப்பாளர் கோ.சின்னான், விவசாய அணி மாநில துணைச் செயலாளர் தென்னரசு, நிர்வாகிகள் பெரியசாமி, ராமன், பண்ணை பாண்டியன், மகளிரணி பாண்டீஸ்வரி மற்றும் பலர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீஸ் டி.எஸ்.பி. நல்லு, நகராட்சி மேலாளர் சாந்தி, வருவாய் அலுவலர் பிரியா, கிராம நிர்வாக அலுவலர் நர்மதா, நில அளவையர் பிச்சைமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • தடையை மீறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பாளை பஸ் நிலையம் அருகே பெரியார் சிலை முன்பு மனுஸ்மிருதி புத்தகங்களை வினியோகிக்க தொடங்கினர்.
    • தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக ராஜபாண்டியன் உள்ளிட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    பாளை பஸ் நிலையம் பகுதியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனுஸ்மிருதி புத்தகம் வினியோகிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணியினர் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பற்றிய துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப் போவதாகவும் அறிவித்தனர். இவற்றிற்கு போலீசார் தடை விதித்தனர்.

    மேலும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் பாளை பஸ் நிலைய பகுதியில் மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இந்நிலையில் தடையை மீறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பாளை பஸ் நிலையம் அருகே பெரியார் சிலை முன்பு மனுஸ்மிருதி புத்தகங்களை வினியோகிக்க தொடங்கினர். நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், செய்தி தொடர்பாளர் முத்துவளவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    உடனே அங்கு துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், உதவி கமிஷனர் பிரதீப், இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் புத்தகங்களை வினியோகிக்க கூடாது என்றனர். எனினும் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட கரிசல் சுரேஷ் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதற்கிடையே பாளை வ.உ.சி மைதானம் இந்து மக்கள் கட்சி தென்மண்டல செயலாளர் ராஜபாண்டியன், மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமையில் கட்சியினரும், இந்து முன்னணி நிர்வாகிகள் விமல், பிரம்ம நாயகம் தலைமையில் அமைப்பினரும் திருமாவளவன் குறித்து துண்டு பிரசுரங்களுடன் திரண்டனர்.

    அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக ராஜபாண்டியன் உள்ளிட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சாத்தான்குளத்தில் காமராஜர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ள நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் உடனே ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி பேசினர்.

    சாத்தான்குளம்:

    நீட் நுழைவுத் தேர்வை அகில இந்திய அளவில் கைவிடக் கோரியும், தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ள நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் உடனே ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சாத்தான்குளத்தில் காமராஜர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் மாவட்ட அமைப்பாளர் விடுதலைச்செழியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருவைகுண்டம் தொகுதி துணை அமைப்பாளர் இரஞ்சன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் பாரிவள்ளல், முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் ரகுவரன், சாத்தான்குளம் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மகளிர் விடுதலை இயக்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயக்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தியல் பரப்பு மாநில துணைச்செயலாளர் தமிழ்க்குட்டி, காங்கிரஸ் கட்சியின் சாத்தான்குளம் நகர தலைவர் வேணுகோபால், திமுக மாவட்ட பிரதிநிதி அலெக்ஸ் பிரிட்டோ, தொழிலாளர் விடுதலை முன்னணியின் நெல்லை தெற்கு மாவட்ட அமைப்பாளர் தோழர் இரணியன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் தொண்டரணி மாவட்ட பொறுப்பாளர் சரவணன், திருச்செந்தூர் ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் சுந்தர், விவசாய தொழிலாளர், விடுதலை இயக்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர்கள் அந்தோணி, சாமுவேல், ஆழ்வார் திருநகரி ஒன்றிய துணை அமைப்பாளர் இராமகிருஷ்ணன், இளஞ்சிறுத்தைகள் கண்ணன், முத்துக்குமார், வெற்றிக் கண்ணன், வாசு, இராஜ்குமார், ஆண்ட்ரூஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின் முடிவில் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் மாவட்ட துணை அமைப்பாளர் ராவணன் நன்றி கூறினார்.

    ×