search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசைத்தறி"

    • விசைத்தறிகளுக்கு மின்னணு பலகை பொருத்த அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டிலுள்ள சாதாரண விசைத்தறிகளில் உற்பத்தி செய்யும் போது நூலிழைகள் அறுந்து உற்பத்தி நேரம் குறைவதால் தொழிலாளர்களின் உற்பத்தி திறன் குறைகிறது.

    இதனை சீரமைத்து உற்பத்தி திறனை அதிகரிக்க விசைத்தறிகளுக்கு மின்னணு பலகை பொ ருத்தப்படும். முதற்கட்டமாக 5 ஆயிரம் விசைத்தறிகளில் மின்னணு பலகை பொருத்த 50 சதவீதம் மானியமாக ரூ. 6 கோடி வழங்கப்படும் என அமைச்சரால் சட்ட ப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இந்த திட்டத்தின் கீழ், மதுரை மற்றும் தேனி மாவட்டத்தில் 250 விசைத்தறிகளில் அரசின் 50 சதவீத மானிய உதவியில் மின்னணு பலகை பொருத்திட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கூட்டுறவு மற்றும் தனியார் விசைத்தறியாளர்கள் மூலம் விண்ணப்பம் செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சம் 5 விசைத்தறிகள் வரை மானியம் பெற முடியும். தமிழக அரசின் இலவச மின்சாரம் மூலம் பயன்பெற்றவர்கள் மற்றும் விசைத்தறிகள் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் இதற்கு முன் மானியம் பெறாதவர்கள் இந்த திட்டத்திற்கு தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

    தறிகள் இயங்கும் இடம் வாடகை கட்டிடமாக இருந்தால் வாடகை ஒப்பந்த பத்திரம் பெறப்படும். விண்ணப்பங்களை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி, தகுதி உள்ளோர் பட்டியல் வெளியிடப்படும். தகுதி உள்ளவர்கள் தங்களது பங்குத் தொகையாக தறி ஒன்றுக்கு சுமார் ரூ.12 ஆயிரம் வரை கைத்தறித்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

    கூடுதல் விபரங்களுக்கு மதுரை சரக கைத்தறித்துறை உதவி இயக்குநர் வெங்கடேசலு, மதுரை உதவி அமலாக்க அலுவலர் ரவிக்குமார் ஆகியோரை 99940 20969, 98943 18116 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வெள்ளாளபுரம் அருகே உள்ள செங்காடு ஏரி பகுதியில் குளிக்க சென்றார்.
    • மது போதையில் இருந்த அவர்கள், செங்காடு, தென்கரை மதகுப்பகுதியில் தண்ணீரில் குதித்து விளையாடிய போது பழனிசாமி தவறுதலாக ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்று விட்டார்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் கொங்கணா புரம் எட்டிக்குட்டைமேடு, இலவம்பாளையம் கிராமம் அருகே உள்ள நரி பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 32 ). விசைத்தறி தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    பழனிசாமி நேற்று தனது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த தங்கவேல், செல்வம் ஆகியோருடன் சேர்ந்து வெள்ளாளபுரம் அருகே உள்ள செங்காடு ஏரி பகுதியில் குளிக்க சென்றார். அங்கு சென்ற நண்பர்கள் அனைவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. மது போதையில் இருந்த அவர்கள், செங்காடு, தென்கரை மதகுப்பகுதியில் தண்ணீரில் குதித்து விளையாடிய போது பழனிசாமி தவறுதலாக ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். இதில் தண்ணீரில் மூழ்கிய அவர் வெளியே வரவில்லை.

    இது குறித்து தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் எடப்பாடி பகுதியில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் ஏரி பகுதியில் பழனிசாமியின் உடலை நவீன கருவிகளைக் கொண்டு தேடினர். தொடர்ந்து அப்பகுதியில் நேற்று இரவு கன மழை பெய்ததால் தண்ணீரில் மூழ்கிய பழனிசாமியை தேடும் பணி உடலை மீட்கும் பணியில் தோய்வு ஏற்பட்டது. தொடர்ந்து இன்று அதிகாலை முதல் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அப்பகுதியில் மீண்டும் பழனிசாமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஆழமான பகுதியில் இருந்து பழனிசாமி உயிரிழந்த நிலையில் அவர் உடல் மீட்கப்பட்டது. அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த கொங்கணாபுரம் போலீசார், அவர் இறப்பு குறித்து அவருடன் வந்த நண்பர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • திருமணத்திற்கு பெண் அமையாததால் மன வருத்தம் அடைந்து இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • வெள்ளகோவில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள சிவநாதபுரம், அமராவதி நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35) . விசைத்தறி தொழிலாளி .இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    பல இடங்களில் பெண்பார்த்தும் அமையாததால் மன வருத்தம் அடைந்து இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் 3ந்தேதி ஞாயிற்றுக்கிழமை தாயார் லட்சுமி (வயது68) வேலைக்கு சென்று விட்டார். பிறகு இரவு வீட்டிற்கு வந்து பார்க்கும்போது வீட்டின் விட்டத்தில் கயிறு போட்டு மகன் மணிகண்டன் தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார். இதைப்பார்த்த தாயார் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்த்த போது பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெ.ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் கே.ராஜு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ராஜபாளையத்தில், நூல் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி விசைத்தறி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் 22-வது நாளாக நீடிக்கப்பட்டது.
    • 5-ந் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் ஆவரம்பட்டி பகுதிகளில் பருத்தி கலர் சேலை உற்பத்தி செய்யும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.

    இந்த தறிகளை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

    நாள் ஒன்றுக்கு ரூ. 16 லட்சம் மதிப்புள்ள 4 ஆயிரம் நூல் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், தொழிலாளர்கள் சுமார் ரூ.5 லட்சம் வரை தினமும் ஊதியமாக பெற்று வந்தனர்.

    கடந்த ஒரு வருடத்தில் நூல் விலை சுமார் 230 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக குற்றம் சாட்டி, நூல் விலை உயர்வை ரத்து செய்யக் கோரி சிறு விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 5-ந் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த போராட்டம் 22-வது நாளை கடந்தும் அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிப்பதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

    இந்த போராட்டத்தால் வேலை இழந்துள்ள தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ரூ. 1 கோடியை தாண்டி உள்ளது. உற்பத்தி இழப்பு ரூ. 3.36 கோடியை தாண்டும் என தெரிகிறது. அரசுக்கு ஏற்பட்டுள்ள வரி இழப்பு ரூ.16.80 லட்சமாகவும் உள்ளது.

    கடந்த 22 நாட்களாக வேலையின்றி உள்ளதால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுமார் ரூ. 10 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளுக்கு பால் வாங்குவதற்கு கூட பணமின்றி தவிப்பதாகவும், கியாஸ், காய்கறி மற்றும் பலசரக்கு பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் கடன் வாங்கியும், வட்டி கட்டியும் சிரமத்தில் இருப்பதாகவும் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

    இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தொழிலாளர் நலத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவரம்பட்டியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட தவறான கணக்குகளே வழக்கத்தில் உள்ளன.
    • விசைத்தறி தொழிலில் ஆள் பற்றாக்குறை குறையும் வாய்ப்பு உள்ளது.

    திருப்பூர் :

    தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கைத்தறி மற்றும் விசைத்தறிகள் 'ஜியோ டேக்' எனும் தொழில்நுட்ப உதவியுடன் கணக்கெடுப்பு நடத்தப்படும். எலக்ட்ரானிக் பேனல் போர்டு இல்லாத 4 லட்சம் விசைத்தறிகளில் முதல் கட்டமாக 5 ஆயிரம் விசைத்தறிகளுக்கு 50 சதவீத மானியத்துடன் பேனல் போர்டு அமைக்கப்படும் என்று கைத்தறி துறை மானிய கோரிக்கையின்போது சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

    இது குறித்து திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி சங்க தலைவர் வேலுசாமி, செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கூறியதாவது:-

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2.5 லட்சம் விசைத்தறிகள் உள்பட தமிழகம் முழுவதும் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்து முழுமையான விவரங்கள் இல்லை. தொழில்நுட்ப உதவியுடன் கணக்கெடுப்பு நடத்துவது வரவேற்கத்தக்கது.

    கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட தவறான கணக்குகளே வழக்கத்தில் உள்ளன. கணக்கெடுப்பை முறையாக நடத்துவதன் மூலம், விசைத்தறிகளின் எண்ணிக்கையை கணக்கு காட்டி அரசு உதவிகளை பெற முடியும். எனவே, கணக்கெடுப்பு சரியான முறையில் நடத்தப்பட வேண்டும். இதனால், விசைத்தறி தொழில் சார்ந்து எத்தனை குடும்பங்கள் உள்ளன என்பது தெரியவரும். இதை மையப்படுத்தி மத்திய, மாநில அரசிடம் எங்களது கோரிக்கைகளை வைக்க முடியும்.

    இதேபோல 50 சதவீத மானியத்துடன் பேனல் போர்டு அமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் 12 ஆயிரம் ரூபாய் வரை அரசு மானியம் வழங்கும் என்பதால் பேனல் போர்டு இல்லாத விசைத்தறியாளர்கள் பயன் பெறுவர். திருப்பூர், கோவை மாவட்டங்களில் 75 சதவீத விசைத்தறிகளில் பேனல் போர்டுகள் உள்ளன. இதனால் துணி உற்பத்தி திறன் அதிகரிப்பதுடன் விசைத்தறி தொழிலில் ஆள் பற்றாக்குறை குறையும் வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×