search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாஸ்து குறிப்புகள்"

    • பிளாட்டில் சில வாஸ்து குறைகள் இருப்பதாக பலரும் நினைப்பதுண்டு.
    • பிளாட்களில் கதவுகள் ஒன்றை ஒன்று எதிரெதிரே அமைத்திருக்கும்.

    உயர்ந்து வரும் விலைவாசிகள் காரணமாக நகர்ப்புற வாழ்க்கையில் சொந்த தனி வீடு என்பது காஸ்ட்லியான ஒன்றாக மாறியிருக்கிறது. அதற்கு மாற்றாக அமைந்த அடுக்குமாடி குடியிருப்புகள் தனி வீடு லட்சியத்தை பலருக்கும் சாத்தியமானதாக ஆக்கியிருக்கிறது.

    பல சிரமங்களுக்கு இடையில் அடித்து பிடித்து, கையில் உள்ள தொகையை முன்பணமாக போட்டு, மீதித்தொகைக்கு லோன் போட்டு, அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பிளாட் வாங்கியிருப்பது பலருக்கும் அனுபவமாக இருக்கும். பெரும்பாலான நடுத்தர வர்க்க மக்களின் கனவுகளை பிளாட் வீடுகள் நனவாக மாற்றி இருக்கின்றன.

    அவ்வாறு வாங்கிய பிளாட்டில் சில வாஸ்து குறைகள் இருப்பதாக பலரும் நினைப்பதுண்டு. வீட்டின் நுழை வாசலுக்கு எதிராக வேறொரு வீட்டின் நுழைவாசல் இருப்பது, லிப்ட் அல்லது மாடிப்படிக்கட்டுகள் அமைந்திருப்பது போன்ற வாஸ்து குறைகள் பல இடங்களில் இருக்கும்.

     அடுக்குமாடி குடியிருப்புகளில் தலைவாசல்கள், வெவ்வேறு திசையை நோக்கி அமைக்கப்பட்டிருக்கும். நான்கு திசைகள் மற்றும் மற்ற கோண திசைகள் ஆகியவற்றிலும் தலைவாசல்கள் அமைவது உண்டு. மேற்கண்ட சிக்கல்களில் தலைவாயிலுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள குறைகளை சரி செய்வதற்கு வாஸ்து வல்லுனர்கள் தரும் டிப்ஸ் பற்றி காணலாம்.

    அடுக்குமாடி வீடுகளின் தலைவாசலுக்கு எதிராக உள்ள லிப்ட் முன்னேற்றத்தை தடுப்பதாகவும், லிப்டின் கதவுகள் அடிக்கடி திறந்து மூடுவதன் காரணமாக, எதிர்மறை சக்திகள் எதிரில் உள்ள வீட்டை பாதிப்பதாக கருதப்படுகிறது.

    மேற்கண்ட பாதிப்பை நிவர்த்தி செய்வதற்காக, தலைவாசல் கதவின் மேல்பகுதியில் குவியாடி ஒன்றை பொருத்த வேண்டும். கதவு நிலைக்கு வெளிப்புறமாக இரண்டு அங்குல அளவில் வாயில்படி போன்ற அமைப்பையும் பொருத்தலாம். அதன் காரணமாக, வீட்டுக்குள் நுழைபவர்கள் படியின்மீது ஏறி உள்ளே செல்வது போல இருக்கும்.

    பல பிளாட்களில் கதவுகள் ஒன்றை ஒன்று எதிரெதிரே அமைத்திருக்கும். அப்போது இரண்டு கதவுகளும் ஒரே அளவில் இருந்தால் பெரிய பாதிப்புகள் இல்லை என்று சொல்லப்படுகிறது.

    வீட்டுக்குள் உள்ள அறைக்கதவுகள் நேர் எதிராக இல்லாமல், சற்று விலகி இருக்கும் பட்சத்தில், கதவுகளுக்கு எதிரே உள்ள சுவரில் ஒரு நிலைக்கண்ணாடியை பொருத்துவது அவசியம்.

    ×