search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் சாவு"

    • இருசக்கர வாகனத்தில் மாராயபுரம் சாலையில் சென்றார்.
    • தனியார் நிறுவன ஆம்புலன்ஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    கன்னியாகுமரி :

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட கண்ணக்கோடு பகுதியை சேர்ந்தவர் மகீன். இவர் பழைய கார்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் மாராயபுரத்தை சேர்ந்த சுதீர் (வயது 42) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் மாராயபுரம் சாலையில் சென்றார்.

    அப்போது எதிரே வேகமாக வந்த தனியார் நிறுவன ஆம்புலன்ஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மகீன் மற்றும் சுதீர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுதீர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனது பைக்கை அடமானம் வைத்து கடன் வாங்கியுள்ளார்.
    • ஆசையாக வாங்கிய பைக்கை ஏன் அடமானம் வைத்தாய், பணம் வேண்டும் என்றால் என்னிடம் கேட்டிருக்கலாம் தானே என கூறியுள்ளார்.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ரம்யா தியேட்டர் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ். கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 1 மகள் 2 மகன்கள் உள்ளனர். முதல் மகன் வேல்முருகன் (வயது 20) கார் டிரைவாக வேலை பார்த்து வந்தார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் புதியதாக விலை உயர்ந்த மோட்டார் பைக் வாங்கினார்.

    இந்நிலையில் தனது பைக்கை அடமானம் வைத்து கடன் வாங்கியுள்ளார். கடந்த 20-ம் தேதி வேல்முருகனின் தந்தைக்கு பைக் அடமானம் வைத்து கடன் வாங்கியது தெரிய வந்தது.

    மகனிடம் ஆசையாக வாங்கிய பைக்கை ஏன் அடமானம் வைத்தாய், பணம் வேண்டும் என்றால் என்னிடம் கேட்டிருக்கலாம் தானே என கூறியுள்ளார்.

    இதனால் வேதனையடைந்த வேல்முருகன் அன்றிரவு எலி பேஸ்ட் தின்று மயக்கமடைந்தார். இதனை கண்ட குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீவிர சிகிச்சையில் இருந்தவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கடன் தொல்லையால் இறந்தாரா?
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த ஏகாம்பரநல்லூரை சேர்ந்தவர் சிவானந்தம். இவரது மகன் ஹரிஹரன் (வயது 27). இவர் சிப்காட்டில் உள்ள தனியா தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு மது போதையில் இருந்த ஹரிஹரன் முகுந்தராயபுரம் ரெயில் நிலையத்திற்கு வந்தார். ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த ரெயில் ஹரிகரன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்று காட்பாடி ெரயில்வே போலீசார் ஹரிகரன் உடலை மீட்டனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரிஹரன் கடன் தொல்லை காரணமாக ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா அல்லது தண்டவாளத்தை கடக்கும்போது எதிர்பாராத விதமாக ரெயில் மோதி இறந்தாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெட்ரோல் பங்க் பக்கத்தில் வந்த போது அந்த வழியாக வந்த வாகனம் மோதியது.
    • அதியமான்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி,

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மகன் சசிகுமார் (வயது26).

    இவர் இருசக்கர வாகனத்தில் தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அருகில் உள்ள பெட்ரோல் பங்க் பக்கத்தில் வந்த போது அந்த வழியாக வந்த வாகனம் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சசிகுமார் உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜிட்டாண்டஅள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
    • அந்த வழியாக வந்த மற்றொரு வாகனம் இவர் மீது மோதியது.

    தருமபுரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்துள்ள கருவட்டனூர் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது37). இவர் கூல்ரிங்ஸ் ஏஜென்சி நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள ஜிட்டாண்டஅள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு வாகனம் இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பழனி உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நீச்சல் தெரியாத அவர் திடீரனெ்று ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
    • நண்பர்கள் அவரை காப்பாற்ற முடியாமல் அலறினர்.

    தருமபுரி,

    கர்நாடாக மாநிலம் பெங்களூரு பொம்மசந்திரா பகுதியைச் சேர்ந்தவர் கிரண் (வயது32). இவர் தனது நண்பர்களுடன் நேற்று தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அணைக்கு வந்தனர்.

    அங்கு நண்பர்களுடன் குளிக்க கரையோர பகுதியில் குளித்து கொண்டிருந்தார். அப்போது நீச்சல் தெரியாத அவர் திடீரனெ்று ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதனை கண்ட நண்பர்கள் அவரை காப்பாற்ற முடியாமல் அலறினர்.

    இந்த சம்பவம் குறித்து நண்பர்கள் பஞ்சப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலறிந்த போலீசார் உடனே அங்கு விரைந்து சென்று கிரணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அந்த வழியாக வந்த டிராக்டர் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • ஆனஸ்ட்ராஜ் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தவளம் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன் (வயது43). இவரது மகன் ஆனட்ஸ்ராஜ் (20). இவரது நண்பர் கோவையைச் சேர்ந்த பிரசாத் (20). சம்பவத்தன்று ஆனஸ்ட்ராஜூம், பிரசாத்தும் மோட்டார் சைக்கிளில் தேன்கனிக்கோட்டை அருகே சென்றனர்.அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு ஆனஸ்ட்ராஜ் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    காயமடைந்த உடன் சென்ற பிரசாத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தனசேகரன் தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜீப் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டு அந்த வாலிபர் சர்வீஸ் ரோட்டிற்கு வந்து இறந்தது தெரிய வந்தது.
    • விபத்தை ஏற்படுத்திய ஜீப் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பவானி:

    பவானி அருகே உள்ள சித்தோடு சேலம்-கோவை பைபாஸ் ரோடு, நொச்சிப்பாளையம் பிரிவு சர்வீஸ் ரோட்டில் உடலில் பல்வேறு இடங்களில் ரத்த காயங்களுடன் ஒருவர் இறந்து கிடப்பதாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    இதனையடுத்து போலீசார் சம்பவயி டத்திற்கு வந்து பார்த்த போது இறந்து கிடந்தது சுமார் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க வட மாநில நபர் என்பதும், அவர் யார்? எந்த ஊரை சேர்ந்த வர் என தெரியவில்லை.

    அதேபோல் அருகிலுள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்ததில் அதிகா லை 5 மணியளவில் பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்த ஜீப் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டு அந்த வாலிபர் சர்வீஸ் ரோட்டிற்கு வந்து இறந்தது தெரிய வந்தது.

    இதனைத்தொடர்ந்து போலீசார் இறந்த வட மாநில வாலிபர் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தை ஏற்படுத்திய ஜீப் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அந்த வழியாக வந்த டாரஸ் லாரி ஒன்று அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
    • தூக்கி வீசப்பட்ட ரஞ்சித் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (வயது26). இவர்ஓசூர் ஆர்.டி.ஓ. சோதனை சாவடி பகுதி அருகே நேற்று தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த டாரஸ் லாரி ஒன்று அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ரஞ்சித் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் தகவலறிந்து உடனே அங்கு விரைந்து சென்று ரஞ்சித்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருசக்கர வாகனத்தில் அன்னசாகரம் சாலையில் இந்தியன் வங்கி அருகே வந்து கொண்டிருந்தார்.
    • எதிரே வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், நெல்லிநகர் அருகே உள்ள மாந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் சங்கித் குமார். (வயது 22). இவர் சிசிடிவி கேமாரா பொருத்தும் வேலை செய்து வந்தார்.

    சம்பவத்தன்று சிசிடிவி கேமரா பொருத்திவிட்டு இருசக்கர வாகனத்தில் அன்னசாகரம் சாலையில் இந்நியன் வங்கி அருகே வந்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் சங்கித் குமார் பலத்த காயமடைந்தார்.

    அந்த சாலை வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த சங்கித் குமார் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தருமபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வயரை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வீசிய போது மின்கம்பியின் மீது விழுந்துள்ளது.
    • மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதில் மாதேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே கோபிநாதம்பட்டி அடுத்துள்ள பறையப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் மாதேஷ் (வயது36). இவர் சவுண்டு சர்வீஸ் வைத்து தொழில் நடத்தி வந்தார்.

    இந்நிலையில் நேற்று விஜயன் என்பவர் வீட்டின் நிகழ்ச்சிக்காக மாதேஷ் சீரியல் போட்டுள்ளார். அப்போது வயரை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வீசிய போது மின்கம்பியின் மீது விழுந்துள்ளது. இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதில் மாதேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த கோபிநாதம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பழனியில் கோழிப்பண்ணை தொழிலாளி குளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்
    • பழனியில் வாலிபர் சாவில் மர்மம் என மனைவி புகார்

    பழனி :

    பழனியை அடுத்துள்ள நெய்க்காரபட்டியைச் சேர்ந்தவர் ரகுராமன் (வயது 30). இவர் தனது குடும்பத்துடன் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள தனியார் கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்தார்.

    பழனியில் உறவினர் வீட்டு விசேஷத்துக்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்தார். நண்பர்களுடன் கலிக்கநாயக்கன்பட்டி குளத்தில் குளிக்கச் சென்ற ரகுராமன் அங்கு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் பழனி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதால் உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் என அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


    ×