search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாஜ்பாய்"

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இரங்கல் தெரிவித்த இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, அவருடனான தனது நட்பு குறித்த நினைவலைகளை பகிந்து கொண்டார். #RIPVajpayee #Wickremesinghe
    கொழும்பு :

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திற்கு சென்ற அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் பதிவேட்டில் கையொப்பமிட்டார்.

    அதைத்தொடர்ந்து, வாஜ்பாய் குறித்த நினைவலைகளை பகிர்ந்துகொண்ட ரணில், இலங்கையின் உண்மையான நண்பராக இருந்த வாஜ்பாய், இந்தியாவை ஆண்ட சிறந்த பிரதமர்களில் ஒருவர் என தெரிவித்தார்.

    மேலும், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் குறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

    இலங்கையின் பிரதமராக நான் இருந்த சமயம் விடுதலை புலிகள் மிகவும் பலம் பொருந்தியவர்களாக இருந்தனர். அப்போது, இலங்கையின் பொருளாதரம் மிகவும் பலவீனமாக இருந்தது.

    எனினும், இலங்கையின் பொருளாதாரத்தை வளர்ச்சியை நோக்கி மீட்டெடுக்கவும், நீட்டிக்கப்பட்ட ராணுவ பயிற்சி அளிக்கவும் வாஜ்பாய் மிகவும் உதவிகரமாக இருந்தார். விடுதலை புலிகளின் கடற்பிரிவான கடற்புலிகளை இலங்கை ராணுவத்தால் கட்டுப்படுத்த முடிந்தற்கு வாஜ்பாய் செய்த உதவிகள் தான் முக்கிய காரணம்.

    கடந்த 1977-ம் ஆண்டில் வாஜ்பாய் இந்திய வெளியுறவுத் துறை மந்திரியாக இருந்த நேரம் நானும் இலங்கை வெளியுறவுத் துறை மந்திரியாக பதவி வகித்தேன்.

    அப்போது அவருடன் எனக்கு நல்ல நட்பு ஏற்பட்டது, பிறகு வாஜ்பாய் பிரதமர் ஆனதும் அவரது தனிப்பட்ட செல்போன் நம்பரை எனக்கு அளித்ததால் அவருடனான எனது நட்பு தொடர்ந்து  நீடித்தது.

    இவ்வாறு அவர் மறைந்த வாஜ்பாய் குறித்த நினைவலைகளை பகிர்ந்துகொண்டார்.
    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஜப்பானின் நல்ல நண்பர் என குறிப்பிட்டு அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே இரங்கல் தெரிவித்துள்ளார். #RIPAtalBihariVajpayee #ShinzoAbe

    டோக்யோ :

    டெல்லியில் உள்ள ஸ்மிருதி ஸ்தல் திடலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. 

    இந்நிலையில், மறைந்த வாஜ்பாய்க்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ள இரங்கல் குறிப்பை மத்திய வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர் ராவேஷ் குமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    அதில், ஜப்பானின் நல்ல நண்பர் வாஜ்பாய், அவரது மறைவை கேட்டு தாம் மிகவும் வேதனையடைந்ததாக ஷின்சோ அபே குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், அதில் குறிப்பிட்டுள்ளதாவது :-

    வாஜ்பாய் மறைவினால் வாடும் இந்திய மக்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், ஜப்பான் மக்கள் மற்றும் அரசின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

    கடந்த 2001-ம் ஆண்டு ஜப்பானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட வாஜ்பாய் இருநாட்டு உறவுகள் மேம்பட மிக முக்கிய பங்காற்றினார். 

    தற்போதுள்ள இந்தியா-ஜப்பான் நல்லுறவுக்கு அடித்தளமாக விளங்கியவர் வாஜ்பாய், அவரது ஆத்மா சாந்தி அடைய இதயத்தின் அடித்தளத்தில் இருந்து இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன்.

    இவ்வாறு ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். #RIPAtalBihariVajpayee #ShinzoAbe

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் இன்று மாலை 4 மணி அளவில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது. #AtalBihariVajpayee #RIPVajpayee
    புதுடெல்லி:

    பாஜகவை தோற்றுவித்தவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் (93) டெல்லி எய்மஸ் மருத்துவமனையில்  நேற்று  மாலை 5 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கலை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட உடலுக்கு  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

    வாஜ்பாய் வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும் அவரது உடலுக்கு இன்று காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக் கப்படுவார்கள். அதன்பிறகு உடல் அங்கிருந்து, டெல்லி தீன்தயாள் உபாத்யாய் மார்க் பகுதியில் உள்ள பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு காலை 9 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

    பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முடிந்ததும், மதியம் 1 மணிக்கு வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் புறப்படுகிறது. வாஜ்பாயின் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அங்கிருந்து ஊர்வலமாக காந்தி சமாதி மற்றும் இந்திரா காந்தி சமாதி அருகே உள்ள ‘ராஷ்ட்ரீய ஸ்மிரிதி ஸ்தல்’ என்ற இடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
     

    அங்கு மாலை 4 மணி அளவில் முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்படுகிறது.

    வாஜ்பாயின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பல்வேறு மாநிலங்களின் முதல்- மந்திரிகள், கட்சி தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

    வாஜ்பாய் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மசாரியாக வாழ்ந்தவர். அவருக்கு நமீதா கவுர் பட்டாச்சார்யா என்ற வளர்ப்பு மகள் மட்டும் உள்ளார்.  #AtalBihariVajpayee #RIPVajpayee
    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி பாரதிய ஜனதா கட்சியின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். #RIPVajpayee #BJP
    புதுடெல்லி :

    பாஜகவை தோற்றுவித்தவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் (93) டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் நேற்று மாலை 5 மணியளவில் காலமானார்.

    மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட வாஜ்பாய் உடலுக்கு ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    வாஜ்பாய் மறைவையொட்டி மத்திய அரசு நிகழ்சிகள் அனைத்தும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், நாடுமுழுவதும் உள்ள மத்திய அரசு நிறுவனங்களுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், வரும் 18,19-ம் தேதிகளில் டெல்லியில் நடைபெற இருந்த பாரதிய ஜனதா கட்சியின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் அமித் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #RIPVajpayee #BJP
    உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடலுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி இருவரும் அஞ்சலி செலுத்தினர். #AtalBihariVajpayee #RIPVajpayee #MKStalin
    புதுடெல்லி :

    பா.ஜ.க கட்சியின் பிதாமகனும், இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் தனது 93-வது வயதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மிகச்சிறந்த பேச்சாளரும், கவிஞரும், மாபெரும் அரசியல் தலைவருமான இவரது மறைவுக்கு இந்திய நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது.

    வீட்டில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் உடலுக்கு பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

    மேலும், பல மாநில முதல்வர்களும், மத்திய மந்திரிகளும் அஞ்சலி செலுத்த வருகை தந்துள்ளனர்.

    இந்நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி இருவரும் வாஜ்பாய் உடலுக்கு இன்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.



    இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் அவர்களிடம் கூறுகையில், ’கருணாநிதியுடன் நெருக்கமாக இருந்தவர் வாஜ்பாய் அவரது மறைவு வருத்தமளிக்கிறது.

    தனது ஆட்சிக்கு ஆபத்து வரும் என்ற நிலை வந்த போது அரசியல் சாசனத்தை காத்தவர் வாஜ்பாய். அவரது மறைவினால் நாட்டு மக்கள் அடைந்துள்ள துயரத்தில் நானும் பங்குகொள்கிறேன்’ என தெரிவித்தார். #AtalBihariVajpayee #RIPVajpayee   
    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் அவரது தந்தை கிருஷ்ணா பிஹாரி வாஜ்பாய் இருவரும் ஒன்றாக கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்றுள்ளனர். #AtalBihariVajpayee #Vajpayee #RIPVajpayee
    புதுடெல்லி :

    மத்தியப்பிரதேசம் மாநிலம் குவாலியரில் 1924-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி வாஜ்பாய் கிருஷ்ணா தேவி மற்றும் கிருஷ்ணா பிஹாரி வாஜ்பாயிக்கு பிறந்தார் அடல் பிஹாரி வாஜ்பாய். குவாலியரின் விக்டோரியா கல்லூரியில் படித்த அவர் இந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் தனி தகுதியுடன் பட்டம் பெற்றார்.

    1946-ம் ஆண்டு கான்பூரில் உள்ள டி.ஏ.வி. கல்லூரியில் சேர்ந்த வாஜ்பாய் எம்.ஏ., அரசியல் அறிவியல் துறையில் முதல் வகுப்பு பட்டம் பெற்றார்.

    பின்னர் அதே கல்லூரியில் தனது தந்தை கிருஷ்ன பிகாரி வாஜ்பாயுடன் சேர்ந்து 1948-ம் ஆண்டு இருவரும் ஒன்றாக சட்டம் பயின்றனர்.

    இதனால், வாஜ்பாய் மற்றும் அவரது தந்தை இருவரும் கல்லூரியில் ஒன்றாக சேர்ந்து படிப்பதை பற்றிய பேச்சாகவே அக்காலகட்டத்தில் கான்பூர் எங்கும் இருந்தது.  

    மேலும், கல்லூரி விடுதியில் உள்ள அறை ஒன்றில் இருவரும் சேர்ந்து தங்கியவாறு கல்லூரிக்கு சென்றுள்ளனர். வகுப்புக்கு வாஜ்பாய் தாமதமாக வந்தால் அதற்கான காரணத்தை அவரது தந்தையிடம் கேட்பதை கல்லூரி ஆசிரியர்கள் வழக்கமாக வைத்திருந்தனர் .

    ஆனால், ஆர்.எஸ்.எஸ் இயக்க பிரச்சார கூட்டங்களில் தீவிரமாக பணியாற்ற வேண்டி இருந்த காரணத்தால் சட்டப்படிப்பை பாதியிலேயே நிறுத்த வேண்டிய சூழ்நிலை வாஜ்பாய்க்கு ஏற்பட்டது.

    எனினும், கான்பூர் பல்கலைக்கழகத்தில் 1993-ம் ஆண்டு சேர்ந்த வாஜ்பாய், அங்கு தத்துவத்தில் பி.எச்.டி பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  #AtalBihariVajpayee #Vajpayee #RIPVajpayee                          
    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #AtalBihariVajpayee #RIPVajpayee
    புதுடெல்லி :

    பாஜகவை தோற்றுவித்தவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் (93) டெல்லி எய்மஸ் மருத்துவமனையில்  நேற்று மாலை 5 மணியளவில் காலமானார்.

    மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட வாஜ்பாய் உடலுக்கு ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், வாஜ்பாய் மறைவிற்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், அண்டை நாடுகளின் தலைவர்கள் பலரும் வாஜ்பாய் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். விரைவில் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான் கான், வாஜ்பாய் மறைவையொட்டி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ’அடல் பிகாரி வாஜ்பாய் இந்திய துணை கண்டத்தின் மிகப்பெரிய அரசியல் ஆளுமை, அவர் வெளியுறவு மந்திரியாக பொறுப்பு வகித்த போது இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் பொறுப்பை ஏற்றார்.  இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேம்பட அவர் எடுத்த முயற்சிகள் என்றும் நினைவு கூறப்படும்’ என  தெரிவித்துள்ளார்.

    வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் வாஜ்பாய் மறைவை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும், அவரின் நல்லாட்சி மற்றும் பிராந்திய அமைதியை மேம்படுத்திய விதம் போன்றவற்றை நினைவு கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், 1971-ம் ஆண்டு வங்கதேச விடுதலையில் வாஜ்பாய் முக்கிய பங்காற்றியுள்ளார். இன்றைய தினம் வங்கதேச மக்களுக்கு சோகமான தினம் என தனது இரங்கல் குறிப்பில் ஹசினா குறிப்பிட்டுள்ளார்.



    ’முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவினால் சிறந்த தலைவரை இந்தியா இழந்துவிட்டது. அவரது உறவினர்களுக்கும், இந்திய மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்’ என இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்‌ஷே கூறியுள்ளார்.

    ’இந்திய மக்களுக்காக தன்னலமற்ற சேவை புரிந்ததற்காக நினைவு கூறப்படும் வாஜ்பாய், நேர்மை மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய தொலைநோக்கு பார்வை கொண்ட ராஜதந்திரியாவார்’ என நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஓலி வாஜ்பாய்க்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

    இந்தியாவிற்கான ரஷியா, ஜப்பான், அமெரிக்கா
    பிரிட்டன் மற்றும் சீன தூதர்களும் வாஜ்பாய் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.  #AtalBihariVajpayee #RIPVajpayee
    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். #AtalBihariVajpayee #RIPVajpayee
    புதுடெல்லி:

    பாஜகவை தோற்றுவித்தவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் (93) டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் இன்று மாலை 5 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கலை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட உடலுக்கு குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடலில் தேசியக்கொடி போர்த்தப்பட்டு அஞ்சலிக்காக கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்கள் முதலில் அஞ்சலி செலுத்தினர்.

    இதனை அடுத்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.



    மேலும், மத்திய மந்திரிகள், மாநில முதல்வர்கள், தேசிய கட்சிகளின் தலைவர்கள் முன்னாள் மந்திரிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

    நாளை காலை பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் அஞ்சலிக்காக வாஜ்பாயின் உடல் வைக்கப்பட உள்ளது. பின்னர், விஜய் காட் பகுதியில் அவருக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட உள்ளது. 
    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். #AtalBihariVajpayee #RIPVajpayee
    புதுடெல்லி:

    பாஜகவை தோற்றுவித்தவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் (93) டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் இன்று மாலை 5 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கலை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட உடலுக்கு குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடலில் தேசியக்கொடி போர்த்தப்பட்டு அஞ்சலிக்காக கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்கள் முதலில் அஞ்சலி செலுத்தினர்.

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பாஜக மூத்த தலைவர் அத்வானி, பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா , மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். 



    மேலும், பல மாநில முதல்வர்களும், மத்திய மந்திரிகளும் அஞ்சலி செலுத்த வருகை தந்துள்ளனர். 

    நாளை காலை பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் அஞ்சலிக்காக வாஜ்பாயின் உடல் வைக்கப்பட உள்ளது. பின்னர், விஜய் காட் பகுதியில் அவருக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட உள்ளது. 
    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு குடும்பத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. #AtalBihariVajpayee #RIPVajpayee
    புதுடெல்லி:

    பாஜகவை தோற்றுவித்தவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் (93) டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் இன்று மாலை 5 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கலை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட உடலுக்கு குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடலில் தேசியக்கொடி போர்த்தப்பட்டு அஞ்சலிக்காக கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டுள்ளது. 

    அவரது உடலுக்கு பிரதமர், ஜனாதிபதி அஞ்சலி செலுத்துவார்கள். நாளை காலை பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் அஞ்சலிக்காக வாஜ்பாயின் உடல் வைக்கப்பட உள்ளது.

    பின்னர், விஜய் காட் பகுதியில் அவருக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட உள்ளது. பின்னர், அங்கு அவருக்கான நினைவிடம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, 1.5 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளது.
    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக புதுச்சேரி, பீகார், ஜார்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் நாளை பொதுவிடுமுறை அறிவித்துள்ளன. #Atal Bihari Vajpayee #RIPVajpayee
    புதுடெல்லி:

    பாஜகவை தோற்றுவித்தவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் (93) டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் இன்று மாலை 5 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கலை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக புதுச்சேரி, பீகார், ஜார்கண்ட், பஞ்சாப், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஒருவாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளன. மேலும், நாளை ஒருநாள் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி சமாதி அமைந்ந்துள்ள விஜய் காட் பகுதியில் வாஜ்பாய்க்கு நினைவிடம் அமைக்க அரசு 1.5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #Atal Bihari Vajpayee #RIPVajpayee
    புதுடெல்லி:

    பாஜகவை தோற்றுவித்தவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் (93) டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் இன்று மாலை 5 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கலை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    டெல்லியில் உள்ள இல்லத்துக்கு கொண்டு செல்லப்படும் அவரது உடலுக்கு குடும்பத்தினர், பிரதமர், ஜனாதிபதி அஞ்சலி செலுத்துவார்கள். நாளை காலை பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் அஞ்சலிக்காக வாஜ்பாயின் உடல் வைக்கப்பட உள்ளது.

    பின்னர், விஜய் காட் பகுதியில் அவருக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட உள்ளது. பின்னர், அங்கு அவருக்கான நினைவிடம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, 1.5 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளது.
    ×