search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளர்மதி"

    • சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.
    • இரு வழக்குகளும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தன.

    சென்னை:

    கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு, ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக கடந்த 2012-ம் ஆண்டு, அ.தி.மு.க. ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னையில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.

    இதேபோல 2001-2006ம் ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து வளர்மதி உள்ளிட்டோரை விடுவித்து ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு, 2012-ம் ஆண்டு உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.

    இந்த இரு வழக்குகளும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தன.

    இந்த 2 வழக்குகளுக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை, அமைச்சர் ஐ .பெரியசாமி, முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 12-ந்தேதிக்கு தள்ளி வைத்து உள்ளார்.

    • தமிழகத்தை சேர்ந்த வளர்மதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
    • இஸ்ரோ ராக்கெட் ஏவும்போது அதுகுறித்த தகவல்களை வர்ணனை செய்து வந்தார்.

    இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ விண்ணில் ராக்கெட்களை ஏவும்போது அவை குறித்த தகவல்களை வர்ணனை செய்து வந்த தமிழகத்தை சேர்ந்த வளர்மதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "இஸ்ரோ விண்ணில் ராக்கெட்களை ஏவும்போது அவை குறித்த தகவல்களை வர்ணனை செய்து வந்த Mission Range Speaker திருமதி. வளர்மதி அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்."

    "மிகவும் சவாலான ஒரு பணியைத் திறம்படக் கையாண்டு. இஸ்ரோவின் முக்கியத் திட்டப் பணிகளுடைய வெற்றித் தருணங்களின் குரலாக ஒலித்த திருமதி வளர்மதி அவர்களது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் அவரது பணியிடத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    • கொள்ளையர்களை கோட்டையை விட்டு வெளியேற்றும் போராட்டத்தை அ.தி.மு.க. தொடங்கி இருக்கிறது.
    • மீண்டும் அம்மாவின் ஆட்சியை கோட்டையில் அமர்த்துவோம்.

    அ.தி.மு.க. மாநாட்டில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தலைமையில் கவியரங்கம் நடந்தது. இதில் கவிஞர் முத்துலிங்கம் உள்பட கவிஞர்கள் கவிதை வாசித்தார்கள்.

    கவியரங்கை தொடங்கி வைத்து பா.வளர்மதி பேசியதாவது:-

    இந்த உணர்ச்சிமிகு எழுச்சி மாநாட்டை நடத்த ஆகஸ்டு மாதத்தை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்ததிலும் ஒரு முக்கியத்துவம் உண்டு.

    இதே ஆகஸ்டு மாதத்தில் தான் செய் அல்லது செத்து மடி என்ற முழக்கத்துடன் மகாத்மா காந்தி வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை தொடங்கினார். இதே ஆகஸ்டு மாதத்தில் தான் வெள்ளையனை வெளியேற்றி சுதந்திரம் பெற்றோம்.

    இப்போது கொள்ளையர்களை கோட்டையை விட்டு வெளியேற்றும் போராட்டத்தை அ.தி.மு.க. தொடங்கி இருக்கிறது. இதே உணர்ச்சி யோடும், எழுச்சியோடும் இந்த முழக்கத்தை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்வோம். மீண்டும் அம்மாவின் ஆட்சியை கோட்டையில் அமர்த்துவோம் என்றார்.

    • வெற்றிமாறன் இயக்கத்தில் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியான படம் விடுதலை.
    • இப்படம் ஓடிக் கொண்டிருந்த திரையரங்கில் பாதியில் படம் நிறுத்தப்பட்டது.

    இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி-விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியான படம் விடுதலை. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் 'ஏ' சான்றிதழ் பெற்றிருந்தது. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஐநாக்ஸ் திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்த இப்படத்தை போலீசார் பாதியில் நிறுத்தி 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே பார்க்க வேண்டும் என்பதால் சிறுவர்களை அனுமதிக்க முடியாது என்று கூறி படம் பார்க்க வந்த சிறுவர்களை வெளியே செல்ல கேட்டுக்கொண்டனர்.

     

    விடுதலை

    விடுதலை

    இதனால் கோபமடைந்த பெற்றோர்கள் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டனர். அப்போது வளர்மதி என்ற பெண் தங்கள் குழந்தைகளுக்கு எந்த மாதிரியான படத்தை காண்பிக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு தெரியும் என்றும், இப்படம் ஆபாச காட்சிகளுக்காக 'ஏ' சான்றிதழ் வழங்கவில்லை மாறாக வன்முறை காட்சிகள் இடம்பெற்றிருப்பதாலே 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.


    வாக்குவாத்தில் ஈடுப்பட்ட வளர்மதி
    வாக்குவாத்தில் ஈடுப்பட்ட வளர்மதி

    இந்நிலையில் திரையரங்கில் 'ஏ' சான்று வழங்கப்பட்ட 'விடுதலை'படத்தை, தனது குழந்தைகளுடன் பார்க்க அனுமதிக்குமாறு வாக்குவாதம் செய்த வளர்மதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொது இடத்தில் இடையூறு ஏற்படுத்துதல், அத்துமீறி உள்ளே நுழைதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    ×