search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லம்பி வைரஸ்"

    • கால்நடைகளுக்கு பரவி வரும் லம்பி நோயானது அம்மை காய்ச்சலாகும்.
    • நோய் பரவலை கட்டுப்படுத்த கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

    குடிமங்கலம்:

    திருப்பூர், கோவை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு லம்பி எனும் புதிய வகை வைரஸ் நோய் தொற்று பரவி வருகிறது.கடந்த சில மாதங்களில் ஆடுகளுக்கு மர்மக்காய்ச்சல் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது கறவை மாடுகளுக்கு நோய் பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளது. இந்நோய் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து கோவை மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் பெருமாள்சாமி கூறியதாவது:-

    கால்நடைகளுக்கு பரவி வரும் லம்பி நோயானது அம்மை காய்ச்சலாகும். கொசு, ஈ மற்றும் உண்ணிகள் வாயிலாக இந்நோய் பரவுகிறது. இந்நோய் பாதித்தால் கால்நடைகளுக்கு உடலில் கட்டிகள் ஏற்படும். தாய் பசுவிடம் இருந்து பால் குடித்தால் கன்றுகளுக்கும் பரவும் தன்மை கொண்டது.நோய் பரவலை கட்டுப்படுத்த கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

    • சட்டசபை நோக்கி சென்ற பாஜகவினரை போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர்.
    • பாஜக எம்எல்ஏ சுரேஷ் சிங் ராவத், நேற்று பசுவை சட்டமன்றத்திற்கு அழைத்து வந்தார்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் கால்நடைகளுக்கு லம்பி ஸ்கின் நோய் எனப்படும் தோல் கட்டி நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த லம்பி ஸ்கின் நோயால் ௧௧ லட்சத்துக்கும் அதிகமான கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 57 ஆயிரம் கால்நடைகள் உயிரிழந்துள்ளன

    லம்பி நோயை கட்டுப்படுத்த மாநில அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜக குற்றம்சாட்டியதுடன், இது தொடர்பாக ஜெய்ப்பூரில் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. லம்பி நோய் பாதிப்பு, வேலையின்மை, மின் கட்டண உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக கூறி முழக்கம் எழுப்பினர்.

    பாஜக அலுவலகத்தில் இருந்து சட்டசபை நோக்கி பேரணியாக செல்ல திட்டமிட்டிருந்தனர். அங்கு போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. சட்டசபை நோக்கி சென்ற அவர்களை போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் தடுப்புகளை உடைத்துக்கொண்டு சென்றதுடன், போலீசாருடனும் மோதலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    பசுக்களுக்கு பரவி வரும் லம்பி ஸ்கின் நோய் குறித்து அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக வந்த பாஜக எம்எல்ஏ சுரேஷ் சிங் ராவத், நேற்று பசுவை சட்டமன்றத்திற்கு அழைத்து வந்தார். லம்பி ஸ்கின் நோயை கட்டுப்படுத்த வலியுறுத்தி ராஷ்டிரிய லோக்தந்த்ரிக் கட்சி எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

    ×