search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லஞ்ச ஒழிப்பு போலீசார்"

    • சென்னையில் உள்ள எலக்ட்ரிக்கல் நிறுவனங்கள் பலவற்றிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு உள்ளனர்.
    • சென்னையில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது கல்லூரி தொடர்புடைய 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

    சென்னையில் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 10 இடங்களில் சோதனை நடைபெற்றது. கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் மெயின் ரோட்டில் உள்ள கே.சி.பி. என்ஜினீயர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இன்று காலை 7 மணியில் இருந்து சோதனை நடந்து வருகிறது.

    இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக சந்திரபிரகாஷ் உள்ளார். இவர் எஸ்.பி.வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக ஆர்.சந்திரசேகர் உள்ளார். இவருக்கு சொந்தமான இடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

    அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரில் உள்ள சபரி எலக்ட்ரிக்கல்ஸ் உரிமையாளர் ராதாகிருஷ்ணன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்பி வேல்முருகன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் ஞானமூர்த்தி நகர் பவுனம்மாள் தெருவில் சுதன் கனக்‌ஷன் ஆசைத்தம்பி என்பவரின் வீட்டில் ஆய்வாளர் செந்தில் குமார் தலைமையில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் முருகன் எலக்ட்ரிக்கல் டிரேடர்ஸ் நிறுவனம் உள்ளது. இங்கும் இன்று காலையில் சோதனை நடைபெற்றது. இதன் பங்குதாரராக பரசுராமன் என்பவர் உள்ளார்.

    வேளச்சேரி மெயின்ரோட்டில் ஓரியன்ட் போல்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் பங்குதாரராக விஜயகுமார் என்பவர் உள்ளார். இந்த இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது.

    கோடம்பாக்கம் ஒத்தவாடை தெருவில் உள்ள ஆர்.கே.எம். எலக்ட்ரிக்கல்ஸ் கடையிலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் உரிமையாளராக மணிவண்ணன் உள்ளார்.

    சென்னையில் உள்ள இதுபோன்ற எலக்ட்ரிக்கல் நிறுவனங்கள் பலவற்றிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு உள்ளனர்.

    சென்னையில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது கல்லூரி தொடர்புடைய 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அடையாறு எஸ்.பி. ரோட்டில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு, தனியார் கல்லூரிக்கு சொந்தமான ஈஞ்சம்பாக்கம் மற்றும் நந்தனத்தில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னையில் 15 இடங்களில் சோதனை நடைபெற்ற நேரத்தில் தாம்பரம், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

    தாம்பரத்தில் 2 இடங்களிலும், ஆவடி பகுதியில் 3 இடத்திலும், திருவள்ளூர், செங்கல்பட்டில் தலா ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்றுள்ளது.

    தனியார் மருத்துவக் கல்லூரிக்கு சொந்தமான பல்லாவரத்தில் உள்ள பல்கலைக்கழகத்திலும், தாம்பரம் கடப்பேரி ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள எல்.டி. பல்புகள் வினியோகம் செய்யும் தனியார் நிறுவனத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு கோகுலாபுரத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான கணேஷ்குமார் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது.

    நெடுஞ்சாலை ஒப்பந்ததாரரான இவரது வீட்டில் முறைகேடு புகார் தொடர்பாக சோதனை நடந்து வருகிறது.

    திருவள்ளூரை அடுத்த படூர் கிராமத்தில் ஜே.சி.பி. உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. கலைச்செல்வன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • திருமண பதிவிற்காக லஞ்சம் அதிக அளவில் பெறப்படுவதாக வந்த புகாரின் பேரில்தான் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
    • லஞ்சம் பெற்றதாக சார்பதிவாளர் சந்திரகுமார் மற்றும் ஊழியர்களிடம் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ.2.26 லட்சம் பணம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரபதிவு, திருமணம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அலுவலகத்தில் பொதுமக்களிடையே பத்திரப்பதிவு மற்றும் திருமணத்திற்கு பதிவு செய்வதற்காக அதிக அளவில் லஞ்சம் கேட்பதாக தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு புகார்கள் சென்றுள்ளன.

    இதனைத் தொடர்ந்து, மதுராந்தகம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று இரவு திடீரென மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி இமானுவேல் சேகர் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டு அதிரடி சோதனை நடத்தினர்.

    இந்த சோதனை இரவு 7.30 மணிக்கு தொடங்கி தொடர்ந்து 4 மணி நேரம் நடைபெற்றது. நேற்று ஒரே நாளில் மட்டும் உள்ளூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என 23 திருமணங்கள் நடைபெற்று பதிவு செய்துள்ளனர். இந்த திருமண பதிவிற்காக லஞ்சம் அதிக அளவில் பெறப்படுவதாக வந்த புகாரின் பேரில்தான் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதையடுத்து லஞ்சம் பெற்றதாக சார்பதிவாளர் சந்திரகுமார் மற்றும் ஊழியர்களிடம் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ.2.26 லட்சம் பணம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தொடர்ந்து பத்திரப்பதிவு அலுவலக பணியாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இது சம்பந்தமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும், சார் பதிவாளர் சந்திரகுமார் உள்ளிட்ட அலுவலக பணியாளர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தின் பிரதான நகரமான மதுராந்தகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை நடத்தியது. அரசு அலுவலக வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நாமக்கல்லில் 28 இடங்கள், திருப்பூர் மற்றும் மதுரையில் தலா ஓரிடம் என மொத்தம் 30 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
    • சோதனையில் ரூ.26 லட்சத்து 52 ஆயிரத்து 660 மற்றும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்து உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர். இவர் லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். அத்துடன் தனது பெயரிலும், தனது மனைவி பெயரிலும் பல்வேறு நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில், எம்.எல்.ஏ.வாக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக பாஸ்கர் சொத்துகளை வாங்கிக் குவித்ததாக எழுந்த புகாரின் பேரில் , வருமானத்தைவிட 315 சதவீதம் அதிகமாக, அதாவது ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளதாக பாஸ்கர் மீது நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கின் அடிப்படையில், நாமக்கல்லில் உள்ள பாஸ்கரின் வீடு, அலுவலகம் மற்றும் அவரது உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். நாமக்கல், மதுரை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அலுவலகங்களில் நேற்று ஒரே நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

    சேலம், நாமக்கல், தருமபுரி, மதுரை, ஈரோடு, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 80 பேர் தனித்தனி குழுக்களாக பிரிந்து இந்த சோதனையில் ஈடுபட்டனர். காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு 7 மணி வரை நடந்தது. மொத்தம் 13 மணிநேரம் இந்த சோதனை நடந்துள்ளது.

    இந்த சோதனையில் நாமக்கல்லில் உள்ள பாஸ்கரின் சகோதரி வீடு, முன்னாள் நகராட்சி துணைதலைவர் சேகர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மயில்சுந்தரம், ஸ்ரீதேவி எக் சென்டர் உரிமையாளர் மோகன், முன்னாள் நகராட்சி பொறியாளர் கமலநாதன், புதுச்சத்திரம் ஒன்றிய செயலாளர் கோபிநாத், நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை பொறியாளர் கணேசன், கொண்டிசெட்டிப்பட்டி பைனான்ஸ் அதிபர் சங்கரன், நல்லிபாளையம் பைனான்ஸ் அதிபர் விஜி உள்பட அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

    நேற்று ஒரே நாளில் நாமக்கல்லில் 28 இடங்கள், திருப்பூர் மற்றும் மதுரையில் தலா ஓரிடம் என மொத்தம் 30 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் ரூ.26 லட்சத்து 52 ஆயிரத்து 660 மற்றும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்து உள்ளது.

    மேலும் 4 சொகுசு கார்கள், பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், கடன் பத்திரங்கள், வங்கிக் கணக்குகளையும் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இவை தவிர, 1 கிலோ 680 கிராம் தங்க நகைகள், 6 கிலோ 625 கிராம் வெள்ளிப் பொருட்கள், 20 லட்சம் மதிப்புள்ள கிரிப்டோ கரன்சி முதலீடுகள், முக்கிய கணினிப் பதிவுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டு உள்ளன.

    மொத்தம் வழக்குக்கு தொடர்புடைய ரூ.14 லட்சத்து 96 ஆயிரத்து 900 மற்றும் 214 ஆவணங்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த ஆவணங்கள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் ஆய்வு செய்து வருகிறார்கள், அந்த சொத்துகள் எப்படி வாங்கப்பட்டன, அதற்கு யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்கள். இதில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள் யார், யார் என்பது குறித்தும் விரிவாக ஆய்வு நடத்தி வருகறார்கள். ஆய்வு முடிந்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். இதனால் இதில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

    • பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கூத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தன்ராஜ்.
    • திருச்சி மண்டல நகர்ப்புற வளர்ச்சிக்குழும இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

    அரியலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கூத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தன்ராஜ் (வயது 57). அரியலூரை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொண்ட அவர் அங்கேயே குடியேறினார்.

    இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒருவர் டாக்டராகவும், மற்றொருவர் என்ஜினீயராகவும் உள்ளனர். அரசு அதிகாரியான இவர் திருச்சி மண்டல நகர்ப்புற வளர்ச்சிக்குழும இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

    ஏற்கனவே தன்ராஜ் கடலூர், சென்னை, கோவை, கரூர் ஆகிய ஊர்களில் வேலை பார்த்துள்ளார். தற்போது தஞ்சையில் உள்ள அலுவலகத்திற்கு சென்று வருகிறார்.

    இவருக்கு சொந்தமாக அரியலூர்-திருச்சி மெயின் ரோட்டில் ஸ்டேட் பேங்க் காலனியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பிரமாண்ட பங்களா, அரியலூர் புறவழிச்சாலையில் திருமண மண்டபம், மினரல் வாட்டர் நிறுவனம் மற்றும் அரியலூர் கலெக்டர் பங்களா எதிரில் மிகப்பெரிய ஸ்கேன் சென்டர் உள்ளது.

    கடந்த சில ஆண்டுகளில் தன்ராஜ் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. மேலும் அரசியல் கட்சியினருடன் தொடர்பு வைத்துக்கொண்டு பல கோடி மதிப்பிலான சொத்துக்களை தொடர்ந்து தன்ராஜ் வாங்கி குவித்து வருவதாகவும் புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் தலைமையில் இன்று காலை அரியலூர் ஸ்டேட் பேங்க் காலனியில் உள்ள தன்ராஜ் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்தனர்.

    வீட்டின் நுழைவு வாயில் கேட்டை பூட்டிய லஞ்ச ஒழிப்பு போலீசார், அடுத்த வினாடி வீட்டில் இருந்தவர்களிடம் உள்ள செல்போன்களை கைப்பற்றினர். மேலும் தொலைபேசி இணைப்பையும் அதிரடியாக துண்டித்தனர். வெளியாட்கள் யாரும் உள்ளே வரவும், வீட்டில் இருந்தவர்கள் வெளியில் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.

    இதையடுத்து வீட்டின் ஒவ்வொரு அறையையும் அங்குலம், அங்குலமாக சல்லடை போட்டு சோதனை நடத்தி லஞ்ச ஒழிப்பு போலீசார் பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், நகைகளை பறிமுதல் செய்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

    தொடர்ந்து தன்ராஜூக்கு சொந்தமான ஸ்கேன் சென்டர், மினரல் வாட்டர் கம்பெனி, திருமண மண்டபங்களிலும் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டு உள்ளனர். குறுகிய காலத்தில் பல கோடி மதிப்புள்ள சொத்துகளை குவிக்க அவருக்கு உறுதுணையாக இருந்த அரசியல்வாதி யார், தன்ராஜூக்கு உடந்தையாக இருந்து செயல்பட்ட அதிகாரிகள் யார், யார் என்ற பட்டியலையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தயார் செய்து வருகிறார்கள். அரியலூரில் இன்று நடைபெற்று வரும் இந்த அதிரடி சோதனை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சமீர் அகமதுகான் அம்மாநிலத்தில் 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.
    • 2018-ம் ஆண்டு குமாரசாமி அரசில் சமீர் அகமதுகான் மந்திரியாக பதவி வகித்தவர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் சமீர் அகமது கான். இவர் மீது புகார்கள் எழுந்ததை தொடர்ந்து அவருக்கு சொந்தமான 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினார்கள். கண்டோன்மன்ட் ரெயில் நிலையம் அருகே சில்வர் ஓக் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது வீடு, சதாசிவ நகரில் உள்ள கெஸ்ட் அவுஸ், பனசன்காரியில் இருக்கும் அவரது அலுவலகம் உள்பட 5 இடங்களில் இந்த சோதனை நடந்தது. லஞ்ச ஒழிப்பு போலீசார் பல குழுக்களாக பிரிந்து இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

    பல்வேறு ஆவணங்கள் தொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். சமீர் அகமதுகான் அம்மாநிலத்தில் 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். 2018-ம் ஆண்டு குமாரசாமி அரசில் மந்திரியாக பதவி வகித்தவர்.

    இதற்கு முன்பு இவர் மீது மோசடி புகார் எழுந்ததை தொடர்ந்து பலமுறை இவர் அமலாக்கதுறை அலுவலகம் முன்பு ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×