search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகாவில் காங். எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான 5 இடங்களில் சோதனை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கர்நாடகாவில் காங். எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான 5 இடங்களில் சோதனை

    • சமீர் அகமதுகான் அம்மாநிலத்தில் 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.
    • 2018-ம் ஆண்டு குமாரசாமி அரசில் சமீர் அகமதுகான் மந்திரியாக பதவி வகித்தவர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் சமீர் அகமது கான். இவர் மீது புகார்கள் எழுந்ததை தொடர்ந்து அவருக்கு சொந்தமான 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினார்கள். கண்டோன்மன்ட் ரெயில் நிலையம் அருகே சில்வர் ஓக் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது வீடு, சதாசிவ நகரில் உள்ள கெஸ்ட் அவுஸ், பனசன்காரியில் இருக்கும் அவரது அலுவலகம் உள்பட 5 இடங்களில் இந்த சோதனை நடந்தது. லஞ்ச ஒழிப்பு போலீசார் பல குழுக்களாக பிரிந்து இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

    பல்வேறு ஆவணங்கள் தொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். சமீர் அகமதுகான் அம்மாநிலத்தில் 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். 2018-ம் ஆண்டு குமாரசாமி அரசில் மந்திரியாக பதவி வகித்தவர்.

    இதற்கு முன்பு இவர் மீது மோசடி புகார் எழுந்ததை தொடர்ந்து பலமுறை இவர் அமலாக்கதுறை அலுவலகம் முன்பு ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×