search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் சேவைகள்"

    தஞ்சாவூர்-திருச்சி இடையே முன்பதிவில்லாத தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் புதன்கிழமை முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.
    சென்னை

    பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    தெற்கு ரெயில்வே செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

    சென்னை எழும்பூர்-மதுரை (வண்டி எண்:12635) இடையே மதியம் 1.40 மணிக்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் புதன்கிழமை எழும்பூர்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 

    இந்த ரெயில் செங்கல்பட்டிலிருந்து மதியம் 2.40 மணிக்கு இயக்கப்படும். 

    காரைக்குடி-எழும்பூர் (12606) இடையே காலை 5.05 மணிக்கு புறப்படும் 
    எக்ஸ்பிரஸ் ரெயில் புதன்கிழமை செங்கல்பட்டு-எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 

    இந்த ரெயில் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும். 

    தஞ்சாவூர்-திருச்சி (06869) இடையே காலை 6.45 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் புதன்கிழமை முதல் மீண்டும் இயக்கப்படுகிறது. 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் அதிக ரெயில் சேவைகள் தொடங்க திட்டமிட்டுள்ளதாக மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
    நெய்வேலி:

    நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தமிழகத்தில் விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் சூரிய ஒளி மின்நிலையத்தை அமைத்துள்ளது.

    இந்த 300 மெகாவாட் சூரிய ஒளிமின் நிலையத்தை மத்திய மந்திரி பியூஷ் கோயல் நெய்வேலியில் நடந்த விழாவில் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

    இதை தொடர்ந்து, என்.எல்.சி. இந்தியா நிறுவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை, அண்ணா பல்கலைக்கழக ஆற்றல் ஆய்வுத்துறையுடன் இணைந்து மேற்கொள்ள இருக்கும் ஆராய்ச்சி பணிக்கான ஒப்பந்தம் மத்திய மந்திரி பியூஷ் கோயல் முன்னிலையில் கையெழுத்தானது.

    அதன்பின்னர் மத்திய மந்திரி பியூஷ் கோயல் நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்.எல்.சி. நிலக்கரி நிறுவனத்தில் இருந்து வடமாநிலத்துக்கு ரெயில் மூலம் நிலக்கரி எடுத்து செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் விழுப்புரம்-கடலூர் ஆகிய மாவட்டங்களில் அதிக ரெயில் சேவைகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு இயக்கப்படும் அந்த் தோதியா ரெயில் கடலூர் மாவட்டத்தில் நின்று செல்ல வேண்டும் என என்.எல்.சி.நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த ரெயில் கடலூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    என்.எல்.சி.க்கு வீடு, நிலம் கொடுத்தவர்கள் வேலை கேட்கிறார்கள். வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு 4 மடங்கு இழப்பீடு தொகை என்.எல்.சி.நிர்வாகம் வழங்கி வருகிறது. இதனால் வேலை அவர்களுக்கு உறுதியானது அல்ல. என்.எல்.சி.யில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிர்வாகம் சார்பில் போதிய ஊதியம் வழங்கவில்லை என கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சராசரி ஊதியத்தை விட அதிகமாக வழங்கி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews

    ×