search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜ்யசபா தேர்தல்"

    • வேட்பாளர்களுக்கு எங்கள் இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
    • இந்தியரின் உரிமை, பாரம்பரியத்தை காக்க அவர்கள் சிறப்பாக பணியாற்றட்டும்.

    மேற்கு வங்க மாநிலத்தில் ராஜ்யசபா தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்தது.

    இது குறித்த அறிவிப்பில், "வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தல் (ராஜ்யசபா) தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக கீழ்க்கண்ட 4 பேர் போட்டியிடுகிறார்கள்."


     

    "பத்திரிக்கையாளர் சகாரிகாகோஸ், கட்சியின் தலைவர் சுஷ்மிதா தேவ், எம்.டி. நதிமுல்ஹக் மற்றும் மம்தா பாலா தாக்கூர் ஆகியோர் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுதாக்கல் செய்வார்கள் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பை தெரிவித்துக் கொள்கிறோம்."

    "வேட்பாளர்களுக்கு எங்கள் இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் நமது கட்சியின் சார்பில் ஒவ்வொரு இந்தியரின் உரிமை, பாரம்பரியத்தை காக்க அவர்கள் சிறப்பாக பணியாற்றட்டும்," இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இது குறித்து எக்ஸ் தளத்திலும் கட்சியின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.


    • டெல்லியில் ஜனவரி 19 ம் தேதி ராஜ்ய சபா தேர்தல் நடைபெற உள்ளது
    • ஆம் ஆத்மியின் மூன்று வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்

    டெல்லியில் காலியாக உள்ள ராஜ்ய சபா இடங்களுக்கு மூன்று பேரை ஆம் ஆத்மி பரிந்துரை செய்ய வேண்டும். தற்போது ஆம் ஆத்மியின் ராஜ்ய சபா உறுப்பினர்களாக உள்ள சஞ்சய் சிங் மற்றும் என்.டி.குப்தா வின் பதவி காலம் ஜனவரி 27 அன்று முடிவடைகிறது. இருவரையும் மேலவை உறுப்பினர்களாக நியமனம் செய்ய ஆம் ஆத்மியின் அரசியல் விவகாரக் குழு முடிவு செய்துள்ளது. அதனைத்தொடர்ந்து மூன்றாவது வேட்பாளராக டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவராக உள்ள ஸ்வாதி மாலிவாலை ராஜ்ய சபா தேர்தலில் வேட்பாளராக ஆம் ஆத்மி நியமித்துள்ளது.

    டெல்லியில் ஜனவரி 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் ஜனவரி 3-ம் தேதி தொடங்கியது. வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி இன்றுடன்(ஜன.12) முடிவடைந்த நிலையில், இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் ஆம் ஆத்மியின் மூன்று வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

    ×