search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஷித்கான்"

    இந்தியா - ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியின் போது ஆப்கான் வீரர்களையும் இந்திய வீரர்கள் கோப்பை வழங்கப்படும் போது அழைத்ததை பிரதமர் மோடி பாராட்டி பேசியுள்ளார். #MannKiBaat #PMModi #INDvAFG
    புதுடெல்லி:

    கடந்த வாரம் இந்தியா - ஆப்கானிஸ்தான் விளையாடிய டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணிக்கு இது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி என்பதால், கோப்பை வழங்கப்பட்ட பின்னர், போட்டோவுக்கு போஸ் கொடுக்கையில், இந்திய அணி கேப்டன் ரஹானே, ஆப்கான் வீரர்களையும் அழைத்தார்.

    இந்த செயல் அனைவராலும் பாராட்டை பெற்றது. இந்நிலையில், இன்று மன்கிபாத் நிகழ்ச்சியில் பேசிய மோடி, இந்திய அணியின் இந்த செய்கையை பாராட்டி பேசினார். சமுதாயத்தை ஐக்கியப்படுத்தவும், இளைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தவும் விளையாட்டு சிறந்த வழியாகும் என அவர் கூறினார்.



    மேலும், ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுக்கு எதிராக விளையாடியதற்கு நாம் பெருமை பட வேண்டும். அந்த அணியின் வீரர் ரஷித்கான் உலக கிரிக்கெட்டின் சொத்து, அவர் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக விளையாடியிருந்தார் என மோடி பேசினார்.

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சியாச்சின் உச்சி, போர்க்கப்பல்கள், ஆகாயம் மற்றும் நீர் என அனைத்து இடங்களிலும் நமது வீரர்கள் யோகா செய்தது இந்தியர்களுக்கு பெருமை அளிக்கும் விஷயம் எனவும் மோடி கூறினார். 
    சமீபத்தில் முடிந்த ஐபிஎல் சீசனில் ஐதராபாத் அணியில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான், வங்காள தேசத்திற்கு எதிரான டி20 போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். #RashidKhan

    கடந்த இரண்டு ஐபிஎல் சீசனில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். 2017 சீசனில் அவருக்கு பெரிதாக விளையாடுவதற்கான வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை. நடந்து முடிந்த சீசனில் அனைவரும் வியந்து பாராட்டும் வண்ணம் அவரது ஆட்டம் இருந்தது.

    சுழற்பந்து வீச்சாளரான அவர் 17 ஆட்டங்களில் விளையாடி 21 விக்கெட்டுகளை அள்ளினார். ரன்கள் குறைவாக கொடுப்பது டி20 போட்டிகளில் முக்கியம் என்பதால், அவர் இந்த விஷயத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளார். 19 வயதான அவருக்கு கிரிக்கெட்டில் மிகப்பெரிய எதிர்காலம் இருப்பதாக பல ஜாம்பவான்கள் வாழ்த்தியுள்ளனர்.

    இந்நிலையில், நேற்று டேராடூனில் நடந்த வங்காளதேசத்திற்கு எதிரான டி20 போட்டியிலும் ரஷித்கான் தனது வித்தையை காண்பித்தார். 3 ஓவர்கள் வீசி 13 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். அவரது சிறப்பான பந்துவீச்சு ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு முக்கிய காரணமானது.

    போட்டி நிலவரம்:-

    டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்ய ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மொகமது ஷசாத், உஸ்மான் கனி ஆகியோர் களமிறங்கினர். கனி 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ருபெல் பந்தில் போல்டானார். அவரைத்தொடர்ந்து அஸ்கார் ஸ்டானிக்சாய் களமிறங்கினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷசாத் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து வந்த நஜிபுல்லா சத்ரான் 2 ரன்னிலும், மொகமது நபி டக் அவுட்டும் ஆகினார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 91 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது.

    அதன்பின் ஸ்டானிக்சாய் உடன் சமியுல்லா ஷென்வாரி ஜோடி சேர்ந்தார். ஷென்வாரி 36 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷபிகுல்லா ஷபிக் அதிரடியாக விளையாடி 8 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்டானிக்சாய் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. வங்காளதேச அணி பந்துவீச்சில் அபுல் ஹசன், மஹ்மதுல்லா ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.

    அதைத்தொடர்ந்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம் இக்பால், லிட்டன் தாஸ் ஆகியோர் களமிறங்கினர். தமிம் முஜீப் வீசிய முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ஷகிப் அல் ஹசன் களமிறங்கினார். அவர் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடி வந்த லிட்டன் தாஸ் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    அதன்பின் களமிறங்கிய முஷ்பிகுர் ரஹிம் 20 ரன்னிலும், மஹ்மதுல்லா 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதைத்தொடர்ந்து வந்த வீரர்கள் ஆப்கானிஸ்தான் அணியினரின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் வங்காளதேச அணி 19 ஓவர்களில் 122 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஷபூர் சத்ரான், ரஷித் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்களும், மொகமது நபி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 

    இதன்மூலம் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடக்கிறது.
    ×