search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோசடி வழக்கு"

    • தனியார் நிறுவனம் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் டெபாசிட் தொகைக்கு 15 சதவீதம் வட்டி தருவதாக அறிவிப்பு வெளியிட்டது.
    • முதலீட்டாளர்களை வளைப்பதற்காக ஏஜெண்டுகளையும் நியமித்து பண வசூலில் ஈடுபட்டது.

    சென்னை:

    சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று அதிக வட்டி ஆசையை காட்டி 10 ஆயிரம் பேரிடம் ரூ.800 கோடி வரை சுருட்டிய வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    "ஹிஜாயூ அசோசியேட் பிரைவேட் லிமிடெட்" என்ற பெயரில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனம் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் டெபாசிட் தொகைக்கு 15 சதவீதம் வட்டி தருவதாக அறிவிப்பு வெளியிட்டது.

    இதையடுத்து முதலீட்டாளர்களை வளைப்பதற்காக ஏஜெண்டுகளையும் நியமித்து பண வசூலில் ஈடுபட்டது. இதன்படி இந்த நிறுவனத்தில் பலர் ஏஜெண்டுகளாக பணிபுரிந்து பொது மக்களிடமிருந்து பணத்தை வசூலித்து கட்டினார்கள்.

    இது தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதுதொடர்பாக நேரு, குரு மணிகண்டன், முகமது ஷெரீப் ஆகிய 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் கூடுதல் நடவடிக்கையாக சாந்தி, கல்யாணி, சுஜாதா ஆகிய 3 பெண்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.800 கோடி மோசடி வழக்கில் மொத்தம் 21 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். இவர்களில் 6 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் மீதமுள்ள 15 பேரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் ஏமாந்துள்ளனர்.
    • தகவல் கொடுப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும்.

    சென்னை :

    போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் சார்பில் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழகத்தின் பல பகுதிகளில் நிதி நிறுவனங்கள் என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டு, அந்த நிறுவனங்கள் அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி பொதுமக்களிடம் முதலீட்டு தொகைகளை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளன.

    அந்த வகையில் ஆரூத்ரா கோல்டு டிரேடிங் லிமிடெட் என்ற நிறுவனம், ஹிஜாவு அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், எல்.என்.எஸ். சர்வதேச நிதி சேவை என்ற நிறுவனம் போன்றவை முக்கியமானவை ஆகும். இந்த நிறுவனங்கள் பொதுமக்களிடம் பெறப்படும் முதலீட்டு தொகைக்கு மாத வட்டியாக 10 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை தருவோம் என்று கவர்ச்சிகரமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

    பொதுமக்களிடம் முதலீடுகளை பெறுவதற்காக முகவர்களையும், பணியாளர்களையும் மேற்கண்ட நிறுவனங்கள் நியமித்துள்ளன. தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் கூட்டங்கள் நடத்தி, பொது மக்களை கவரும் வகையில் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர். ஆனால் முதலீட்டாளர்களுக்கு தாங்கள் அறிவித்தபடி, மாதந்தோறும் வட்டித்தொகையையும் மற்றும் முதலீட்டு தொகையையும் முறையாக திரும்பித்தரவில்லை என்று புகார்கள் வந்தன.

    புகார்களின் அடிப்படையில் ஆரூத்ரா கோல்டு நிறுவனம் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஒரு வழக்கை பதிவு செய்தனர். விசாரணை அடிப்படையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், செங்கல்பட்டு, விருதுநகர், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் அரியலூர் ஆகிய ஊர்களில் 37 இடங்களில் ஆரூத்ரா நிறுவனம் சம்பந்தமாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் சோதனை நடத்தப்பட்டது.

    இந்த நிறுவனம் தொடர்பாக திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சுமார் 1 லட்சத்து 9 ஆயிரத்து 255 பேர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. பொதுமக்கள் செலுத்திய மொத்த முதலீட்டு தொகை சுமார் ரூ.2 ஆயிரத்து 438 கோடி ஆகும்.

    ஆரூத்ரா கோல்டு நிறுவனம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் 8 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அவர்களில் பாஸ்கர், மோகன்பாபு உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த வழக்கில், ராஜசேகர், ஹரிஷ், மைக்கேல் ராஜ், நாராயணி போன்றோர் தலைமறைவாக உள்ளனர்.

    இதேபோல், எல்.என்.எஸ். சர்வதேச நிதி சேவை என்ற நிறுவனம் சம்பந்தமாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக காஞ்சீபுரம், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, ஈரோடு, கோவை உள்ளிட்ட 21 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

    இதன் மூலம் திரட்டப்பட்ட தகவல் அடிப்படையில் சுமார் 1 லட்சம் பொது மக்கள் இந்த நிறுவனங்களில் முதலீடு செய்தது தெரியவந்துள்ளது. முதலீட்டு தொகையாக மொத்தம் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் பொதுமக்களிடம் இருந்து திரட்டப்பட்டதாகவும் தெரிய வந்திருக்கிறது.

    இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லட்சுமி நாராயணன், வேதநாராயணன், ஜனார்த்தனன், மோகன்பாபு ஆகியோர் தலைமறைவாக இருக்கின்றனர். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

    அதேபோல், சென்னை கீழ்ப்பாக்கத்தில் செயல்பட்ட 'ஹிஜாவு அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் மீதும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். இந்த வழக்கு தொடர்பாக 21 இடங்களில் சமீபத்தில் சோதனை நடத்தப்பட்டது.

    சோதனை மூலம் திரட்டப்பட்ட தகவல்கள் அடிப்படையில், 4 ஆயிரத்து 500 பொது மக்களிடம் முதலீட்டு தொகை பெற்று, சுமார் ரூ.600 கோடி அளவுக்கு வசூல் நடந்திருக்கிறது. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

    சவுந்தர்ராஜன் என்பவரும், அவர் மகன் அலெக்சாண்டர் என்பவரும் வழக்கில் தலைமறைவு குற்றவாளிகளாக உள்ளனர். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

    மேற்கண்ட 3 நிறுவனங்களில் முதலீட்டு தொகை செலுத்தி ஏமாந்த பொது மக்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கலாம். இந்த 3 நிறுவனங்கள் மீதும் தொடரப்பட்ட வழக்குகள் அடிப்படையில் தலைமறைவு குற்றவாளிகளாக இருப்பவர்கள் பற்றி தகவல் தெரிந்த பொதுமக்கள் பொருளாதார குற்றப்பிரிவுக்கு தெரிவிக்கலாம்.

    பொதுமக்கள் தெரிவிக்கும் தகவல், உறுதியாக இருப்பின் அவர்களுக்கு தக்க சன்மானம், ரொக்கப்பரிசு வழங்கப்படும். தகவல் கொடுப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று இரவு கூறும்போது, 'இதுபோன்ற மோசடி நிறுவனங்களில் அதிக வட்டிக்கு ஆசைபட்டு, பொது மக்கள் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். மேற்கண்ட 3 மோசடி நிறுவனங்களிலும் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் முதலீடு செய்து ஏமாந்துள்ளது தெரியவந்துள்ளது. சுமார் 9 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளதாகவும் கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நியாயமான நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். முதலீட்டு தொகையை இழந்த பொது மக்களுக்கு அவற்றை திருப்பி பெற்றுத்தர உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.

    • போலீசார் தேடி வந்த வேளையில் பிரவீனா பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது.
    • பிரவீனா ஈரோட்டில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    கோவை:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி பிரவீனா. சேகர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    பிரவீனா பல்லடத்தில் அழகு நிலையம் நடத்திவந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரவீனாவின் தாய் பிலோமீனாள் பல்லடம் போலீசில் புகார் அளித்தார். அதில் தனது மகளை 2 நாட்களாக காணவில்லை. அவரை கண்டுபிடித்து தருமாறு கூறியிருந்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீனாவை தேடி வந்தனர். போலீசார் தேடி வந்த வேளையில் பிரவீனா பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது.

    அந்த வீடியோ பதிவில், எனது அழகு நிலையத்திற்கு வந்த பல்லடம் வேலப்ப கவுண்டன் பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் (38) என்பவர் டெக்ஸ்டைல் தொழில் செய்யலாம் என சொல்லி தனது பெயரில் உள்ள வீட்டு பத்திரத்தை வாங்கி வங்கியில் அடமானம் வைத்து ரூ.75 லட்சம் கடன் வாங்கினார்.

    வீட்டு பத்திரம் ஏலத்திற்கு வந்த நிலையில் பணத்தை திருப்பி கேட்டபோது தொழில் விஷயமாக வெளியூர் அழைத்து சென்று திருச்சி பகுதியில் தன்னை அடைத்து வைத்து சில பத்திரங்களில் கையெழுத்து பெற்று கொண்டதாக திடுக்கிடும் தகவலை கூறியிருந்தார்.

    மேலும் தனது தாய், தந்தைக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தி விட்டனர். என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள். அவன் தினமும் என்னை சித்ரவதை செய்கிறான் என கண்ணீர் மல்க கூறியிருந்தார். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த வீடியோ பல்லடம் போலீசாருக்கும் கிடைத்தது. வீடியோவில் இருந்த ஆதாரங்களை திரட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் வீடியோவில் பிரவீனா திருச்சியில் இருப்பதாக கூறியதால் அங்கும் தனிப்படை விரைந்தது.

    தொடர்ந்து அவரை தேடி வந்த நிலையில், பிரவீனா ஈரோட்டில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் ஈரோட்டுக்கு சென்று பிரவீனா இருப்பதாக கூறிய வீட்டிற்கு சென்று பார்த்தனர்.

    அப்போது போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் பிரவீனா வீடியோவில் தன்னை கடத்தியதாக கூறிய சிவக்குமாரும், அவரும் ஒன்றாக அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். இதனால் இருவரும் சேர்ந்து வேறு செயலில் ஈடுபட்டு இருப்பதை தெரிந்து கொண்ட போலீசார் அவர்களை பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    அங்கு வைத்து விசாரணை நடத்தியதில் 2 பேரும் கணவன், மனைவி போல நடித்து கோவையை சேர்ந்த தொழில் அதிபரிடம் மோசடியில் ஈடுபட்ட திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.

    போலீசாரின் தொடர் விசாரணையில், பிரவீனாவுக்கும், சிவக்குமாருக்கும் பழக்கம் இருந்துள்ளது. இவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த தொழில் அதிபரான குமரேசன் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அப்போது பிரவீனா, சிவக்குமார் மற்றும் அவரது நண்பர் தமிழரசு ஆகியோர் குமரேசனிடம், உங்களை தொழிலில் பங்குதாரராக சேர்த்து கொள்வதாகவும், வங்கியில் கடன் பெற்று தருவதாகவும் கூறி உள்ளனர்.

    இதனை குமரேசன் உண்மை என நம்பி, தனது சொத்து ஆவணங்களை கொடுத்தார். அதனை ஈரோடு பகுதியிலுள்ள அரசு வங்கியில் வைத்து ரூ.2 கோடி கடன் பெற்றனர். ஆனால் அதில் குமரசேனுக்கு எந்தவித பங்கும் கொடுக்கவில்லை. டெக்ஸ்டைல்ஸ் தொழில் எதுவும் செய்யவில்லை. இதனால் பணத்தை திருப்பி கொடுக்கும்படி தொடர்ந்து குமரேசன் கேட்டு வந்தார். ஆனால் அவர்கள் எந்தவித பதிலும் கூறாமல் இருந்து வந்துள்ளனர்.

    இதற்கிடையே கடந்த மார்ச் மாதம் வங்கியில் இருந்து கடன் பெற்ற தொகைக்கு அசலும், வட்டியும் கட்டச்சொல்லி குமரேசனுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வந்துள்ளது. இதையடுத்து குமரேசன் மீண்டும் சிவக்குமார், பிரவீனா ஆகியோரை தொடர்பு கொண்டபோது அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை.

    இதையடுத்து அவர்கள் மீது குமரேசன் பல்லடம் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே சிவக்குமார், பிரவீனாவுக்கு தெரியாமலேயே அவரது சொத்து பத்திரங்களையும் வைத்து கடன் பெற முயன்றது தெரிய வந்தது.

    இதனால் இந்த வழக்கில் இருந்தும், சிவக்குமாரிடம் இருந்து தப்பிப்பதற்காக பிரவீனா யோசித்துள்ளார்.

    அப்போது தான் அவருக்கு தன்னை சிவக்குமார் கடத்தி விட்டதாக கூறினால் நாம் இதில் இருந்து தப்பித்து விடலாம் என நினைத்தார்.

    அதன்படி பிரவீனா, தன்னை சிவக்குமார் கடத்திவைத்து சித்ரவதை செய்வதாக நாடகமாடி சமூக வலைதளங்களில் வீடியோவை பரப்பியதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் பிரவீனா மற்றும் சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள தமிழரசுவை தேடி வருகின்றனர்.

    • மதுரையில் வீடு வாங்குவது தொடர்பாக மோசடி நடந்துள்ளது.
    • 2 பெண்கள் உள்பட 4 பேர்மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை தனக்கன்குளம் கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் சின்னசாமி. இவர் திருநகர் போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில், "நான் சண்முகம் தெருவில் உள்ள ஒரு வீட்டை விலைக்கு வாங்க விரும்பினேன். இதற்காக குணசேகரன், ராஜபாண்டி, குணசேகரன் மனைவி பாண்டி மீனா, ராஜபாண்டி மனைவி பிரியா ஆகியோரிடம் ஒப்பந்தம் செய்திருந்தேன்.

    அப்போது செக் பவுன்ஸ் மூலம் எனக்கு வீட்டை விற்காமல் மோசடி செய்து விட்டனர். எனவே போலீசார் இது தொடர்பாக போலீசார் விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சின்னசாமியிடம் மேற்கண்ட 4 பேரும் ஒப்பந்தம் வாயிலாக பணம் மோசடி செய்தது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து மேற்கண்ட 4 பேரையும் திருநகர் போலீசார் கைது செய்தனர்.

    • உரிமையாளர்கள் உள்பட 6 பேருக்கு தலா 10 ஆண்டுகள் ஜெயில் சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.
    • அபராதமாக ரூ. 3,95 கோடியை செலுத்த வேண்டுமென சிறப்பு நீதிபதி ரவி தீா்ப்பு வழங்கினார்.

    நாமக்கல்:

    நாமக்கல் டவுன் சேலம் சாலையில் எஸ்.ஆா்.ஒய். என்ற பெயரில் ஈமு நிறுவனம் 2012-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. இங்கு ஈமு கோழிப் பண்ணையாளா் திட்டம், விஐபி திட்டம் போன்ற திட்டத்தை நடத்தி வந்த ஐம்புகுமாா், சம்பத், ஸ்ரீதா், திருப்பதி, முபாரக் பாஷா, மேகநாதன், இனுக் ஆன்ட்ரூஸ், சந்தோஷ் ஆகியோா் பொதுமக்களை ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகாா் எழுந்தது.

    இதனைத் தொடா்ந்து, நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதில் தொடா்புடையவா்கள் கைது செய்யப்பட்டனா். 172 முதலீட்டாளா்களிடம் இருந்து ரூ. 4,24 கோடி மோசடி செய்ததாக எஸ்.ஆா்.ஒய் ஈமு நிறுவனம் மீதும், அதில் தொடா்புடைய 8 போ் மீதும் கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளா்கள் நலன் பாதுகாப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

    இவ்வழக்கு விசாரணை முடிவு பெற்றதை அடுத்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட எஸ்.ஆா்.ஒய். ஈமு நிறுவனம், ஜம்புகுமாா், சம்பத், ஸ்ரீதா், திருப்பதி மற்றும் இனுக் ஆன்ட்ரூஸ் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதமாக ரூ. 3,95 கோடியை செலுத்த வேண்டுமென சிறப்பு நீதிபதி ரவி தீா்ப்பு வழங்கினார்.

    இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முபாரக் பாஷா, மேகநாதன் ஆகியோா் விடுதலை செய்யப்பட்டனா். இத்தகவலை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனா்.

    ×