search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈமு கோழிப் பண்ணை மோசடி வழக்கு
    X

    ஈமு கோழிப் பண்ணை மோசடி வழக்கு

    • உரிமையாளர்கள் உள்பட 6 பேருக்கு தலா 10 ஆண்டுகள் ஜெயில் சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.
    • அபராதமாக ரூ. 3,95 கோடியை செலுத்த வேண்டுமென சிறப்பு நீதிபதி ரவி தீா்ப்பு வழங்கினார்.

    நாமக்கல்:

    நாமக்கல் டவுன் சேலம் சாலையில் எஸ்.ஆா்.ஒய். என்ற பெயரில் ஈமு நிறுவனம் 2012-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. இங்கு ஈமு கோழிப் பண்ணையாளா் திட்டம், விஐபி திட்டம் போன்ற திட்டத்தை நடத்தி வந்த ஐம்புகுமாா், சம்பத், ஸ்ரீதா், திருப்பதி, முபாரக் பாஷா, மேகநாதன், இனுக் ஆன்ட்ரூஸ், சந்தோஷ் ஆகியோா் பொதுமக்களை ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகாா் எழுந்தது.

    இதனைத் தொடா்ந்து, நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதில் தொடா்புடையவா்கள் கைது செய்யப்பட்டனா். 172 முதலீட்டாளா்களிடம் இருந்து ரூ. 4,24 கோடி மோசடி செய்ததாக எஸ்.ஆா்.ஒய் ஈமு நிறுவனம் மீதும், அதில் தொடா்புடைய 8 போ் மீதும் கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளா்கள் நலன் பாதுகாப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

    இவ்வழக்கு விசாரணை முடிவு பெற்றதை அடுத்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட எஸ்.ஆா்.ஒய். ஈமு நிறுவனம், ஜம்புகுமாா், சம்பத், ஸ்ரீதா், திருப்பதி மற்றும் இனுக் ஆன்ட்ரூஸ் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதமாக ரூ. 3,95 கோடியை செலுத்த வேண்டுமென சிறப்பு நீதிபதி ரவி தீா்ப்பு வழங்கினார்.

    இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முபாரக் பாஷா, மேகநாதன் ஆகியோா் விடுதலை செய்யப்பட்டனா். இத்தகவலை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனா்.

    Next Story
    ×