search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெக்கானிக்"

    • தென்காசியை அடுத்த இலத்தூர் அருகே உள்ள இடைகாலை சேர்ந்தவர் சங்கரநாராயணன் ஒர்க்‌ஷாப் உரிமையாளர்.
    • நேற்று கடைக்கு புறப்பட்டுக்கொண்டிருந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    தென்காசியை அடுத்த இலத்தூர் அருகே உள்ள இடைகாலை சேர்ந்தவர் சங்கரநாராயணன்(வயது 36). இவரது மனைவி தங்கம்மாள்.

    ஒர்க்‌ஷாப் உரிமையாளர்

    இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. சங்கரநாராயணன் கடையநல்லூர் அருகே உள்ள துரைச்சாமியாபுரத்தில் ஒர்க்‌ஷாப் நடத்தி வந்தார்.இந்நிலையில் நேற்று கடைக்கு புறப்பட்டுக்கொண்டிருந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே அங்கிருந்த மருந்து கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்ட அவர் மீண்டும் கடைக்கு புறப்பட்டு சென்றார்.

    ஆனால் அவருக்கு மீண்டும் நெஞ்சு வலி அதிகரித்ததால் அவரை கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக இலத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மில் காவலாளி

    தென்காசியை அடுத்த காசிமேஜர்புரம் அண்ணா நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(வயது 56). இவர் புளியரையை அடுத்த கட்டளை குடியிருப்பு பகுதியில் உள்ள மில்லில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று அதிகாலை மில்லில் தூங்கி கொண்டிருந்த அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அவரை சக தொழிலாளி ஆட்டோவில் அழைத்து சென்று செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அத்திக்குளம் சாவடி தெருவைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் ஈஸ்வரன் (வயது 18). இவர் ராஜபாளையத்தில் செயல்பட்டு வரும் கார் ஷோரூமில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் ராஜ பாளையம் வந்த ஈஸ்வரன் திடீரென விஷம் குடித்து விட்டு பஸ்சில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்றுள்ளார். இதுபற்றி அவர் தன்னுடன் வேலை பார்க்கும் சார்லஸ் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து ஈஸ்வரனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து ஈஸ்வரனின் பெற்றோர் மகனை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அதன் பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஈஸ்வரன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுபற்றி ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஈஸ்வரனின் தாய் தங்கம்மாள் புகார் ெசய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    • தனியார் திருமண மண்டபத்தில் மின்சாரம் தாக்கி மதுரையை சேர்ந்த மெக்கானிக் பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான ஷாருத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முடங்கியார் ரோட்டில் பொன்விழா மைதானம் பகுதியில் தனியார் திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. கட்டிடப்பணிகள் முடிவடைந்த நிலையில் அங்கு ஏ.சி. பொருத்து வதற்கான பணிகள் நடைபெற்றது.

    மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் ஷாருத் (வயது 24) என்பவர் இன்று காலை ஏ.சி. பொருத்துவதற்கான பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் ஏறி நின்ற ஏணி நிலைத்தடுமாறியதால் மின் கம்பி மீது அவரது கைகள் பட்டதால் மின்சாரம் அவர் மீது பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுபற்றி ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான ஷாருத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கம்ப்யூட்டர் என்ஜினீயரின் காரை திருடிய மெக்கானிக் கைது செய்யப்பட்டார்.
    • திருடுபோன அந்த காரில் ஜி.பி.எஸ் கருவிகள் இருந்தது.

    மதுரை

    மதுரை சின்ன சொக்கிகுளத்தைச் சேர்ந்த லோகநாதன் (33) என்பவர் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த காரை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்தார்.

    இதில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மதுரை வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. லோகநாதனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    அவர் கூறுகையில், நான் பெங்களூருவில் கம்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறேன். சில நாட்களுக்கு முன்பு மதுரைக்கு வந்தேன். மதுபான கடைக்குச் சென்று அளவுக்கு அதிகமாக மது அருந்தினேன். அதன் பிறகு காரை வீட்டின் முன்பாக நிறுத்தி விட்டு, அங்கு படுத்து தூங்கினேன். அங்கு வந்த வாலிபர் என்னை கீழே தள்ளி விட்டு காரை கடத்திச் சென்று விட்டார் என்று தெரிவித்து உள்ளார்.

    திருடுபோன அந்த காரில் ஜி.பி.எஸ் கருவிகள் இருந்தது. போலீசார் தொழில்நுட்ப உதவியுடன் தேடிப் பார்த்தனர். அந்த கார், ஒத்தக்கடை நோக்கி செல்வது தெரியவந்தது. போலீசார் ஜீப்பில் விரட்டி சென்று காரை மடக்கிப்பிடித்தனர்.

    காரில் இருந்த வாலிபரை தல்லாகுளம் போலீஸ் நிலையத்திற்கு கூட்டிச்சென்று விசாரித்தனர். அவர் ஒத்தக்கடையை சேர்ந்த ரமேஷ்(30), கார் மெக்கானிக் என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

    ×