search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முத்தாரம்மன் கோவில்"

    • கொடை விழா கடந்த 6-ந்தேதி காலை கணபதி ஹோமம், யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
    • விழாவில் சுவாமிக்கு சிறப்பு பால்குட அபிஷேகம் நடந்தது.

    உடன்குடி:

    உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட பரமன்குறிச்சி ஊராட்சி வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் ஐப்பசி வருடாந்திர பெருங்கொடை விழா கடந்த 6-ந்தேதி காலை கணபதி ஹோமம், யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

    மறுநாள் இரவு 7 மணிக்கு நாடு நலம் பெற வேண்டியும், நல்ல மழை பொழிந்து வறுமை நீங்கி செழுமை வேண்டி பாடல்கள் பாடியும், 108 திருவிளக்கு பூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, உச்சினிமாகாளி அம்மன் சிம்ம வாகனத்தில் தெருபவனி நடந்தது.

    நேற்று காலை 108 பால்குட ஊர்வலம் முக்கிய தெருக்கள் வழியாக மேளதாளத்துடன் பவனி வந்து கோவிலை அடைந்ததும், பின்பு சுவாமிக்கு சிறப்பு பால்குட அபிஷேகம் நடந்தது. வில்லிசை, நண்பகல் 1 மணிக்கு சிறப்பு பூஜையுடன் கும்பம் தெருவீதி வருதல், இரவு 8 மணிக்கு சுமங்கலிபூஜை, நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார பூஜையுடன் சந்தனமாரியம்மன் கிளி வாகனத்தில் பவனி நடந்தது.

    இன்று நண்பகல் 1 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடி வீதியுலா, இரவு7 மணிக்கு கரகாட்டம், 10 மணிக்கு மாவிளக்கு பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு முத்தாரம்மன் அலங்கரிக்கப்பட்டபூஞ் சப்பரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் கொடுத்தல், நாளை 10-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு கலக்கல் கண்ணன் குழுவினரின் இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்மக்கள் செய்துள்ளனர்.

    • பெருங்கொடை விழாவையொட்டி நேற்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலைபூஜை நடந்தது.
    • செல்வ விநாயகர், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு ஆலங்கார பூஜை நடைபெற்றது.

    உடன்குடி:

    உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட பரமன்குறிச்சி ஊராட்சி வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் ஐப்பசி வருடாந்திர பெருங்கொடை விழாவையொட்டி நேற்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலைபூஜை நடந்தது.

    தொடர்ந்து யாக சாலை பூஜையில் இருந்து புனித நீர் எடுத்து கோவில் கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டது. செல்வ விநாயகர், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு ஆலங்கார பூஜை, வருஷாபிஷேகம் நடைபெற்றது.

    பகல் 11 மணிக்கு சிறப்பு புஷ்பாஞ்சலியும், அலங்கார பூஜையும், பிற்பகல் ஒரு மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை நடைபெற்றது.

    இன்று இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, உச்சினிமாகாளி அம்மன் சிங்க வாகனத்தில் பவனி, நாளை (செவ்வாய் கிழமை) காலை 8 மணிக்கு 108 பால்குட ஊர்வலம், இரவு 8 மணிக்கு சுமங்கலி பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார பூஜை, சந்தனமாரியம்மன் கிளி வாகனத்தில் பவனி நடக்கிறது.

    9-ந் தேதி (புதன்கிழமை) பகல் 12 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடி வீதியுலா, இரவு 7 மணிக்கு கரகாட்டம், 10 மணிக்கு மாவிளக்கு பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு முத்தாரம்மன் பூஞ் சப்பரத்தில் பவனி, 10-ந் தேதி (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர்மக்கள் செய்துள்ளனர்.

    • தேவி முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது
    • சாத்தான்குளம் அனைத்து பகுதிகளுக்கு நகர் வலமாக சென்று நேற்று மதியம் சப்பரம் கோவிலுக்கு வந்தடைந்தது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் தேவி முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ம் திருவிழாவான கடந்த 5-ந் தேதி காலை மஞ்சள் பெட்டி எடுத்து ஊர்வலம், அலங்கார கும்பம் ரதவீதி ஊர்வலம் வருதல், இரவு முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வருதல், சுவாமி அக்னி சட்டி ஏந்தி ரதவீதி வருதல், இரவு 12மணிக்கு அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடைபெற்றது.

    சாத்தான்குளம் அனைத்து பகுதிகளுக்கு நகர் வலமாக சென்று நேற்று மதியம் சப்பரம் கோவிலுக்கு வந்தடைந்தது. இதையடுத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. அனைத்து பகுதியிலும் சப்பரத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு பக்தர்கள் அர்ச்சனை சாத்தி வழிப்பட்டனர். மேலும் 10நாட்களும் பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து வந்து காணிக்கை பிரித்து அம்மனுக்கு செலுத்தினர்.

    • ஆண்டுதோறும் ஆவணி மாதம் கடைசி செவ்வாய்கிழமை கொடை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்து கால் நாட்டு விழா நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் தென் திருப்பேரை பேரூராட்சி மாவடி பண்ணை முத்தாரம்மன் கோவிலில் கொடை விழா நேற்று நடைபெற்றது.

    மாவடிபண்ணை 18பங்கு நாடார்களுக்கு பாத்தியப்பட்ட முத்தாரம்மன் கோவிலில் சிவன், சக்தி மற்றும் முத்தாரம்மன் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அமர்ந்து அருள்பாலித்து வருகிறார்கள்.

    ஆண்டுதோறும் ஆவணி மாதம் கடைசி செவ்வாய்கிழமை கொடை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொடை விழாவை முன்னிட்டு கடந்த 6-ந் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து கோவிலில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்து கால் நாட்டு விழா நடைபெற்றது.அன்று முதல் பக்தர்கள் விரதம் கடைபிடித்து வருகின்றனர். திங்கட்கிழமை இரவு குடி அழைப்பு மற்றும் அம்மனுக்கு தீபாராதனை பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை 10 மணிக்கு மேள வாத்தியங்களுடன் சாமி ஊர்வலத்துடன் பால்குடம் எடுத்து வருதல், மதியம் 1 மணிக்கு சிறப்பு பூஜை அலங்காரத்துடன் மதியக் கொடை, இரவு 8 மணிக்கு முளைப்பாரி எடுத்து வருதல், நேர்த்தி கடன் ஆகியவை நடைபெற்றது. இரவில் வில்லிசை நிகழ்ச்சி, நாதஸ்வரம், கரகாட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    காலை, மதியம் மற்றும் இரவு அன்னதானம் நடைபெற்றது. இரவு 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை தீபாராதனையும், அதை தொடர்ந்து முத்தாரம்மன் பொன் சப்பரத்தில் எழுந்தருளி வாண வேடிக்கையுடன் வீதிஉலா செல்லும் முக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது.

    இன்று மதியம் பொங்கலிடுதல் மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்காக ஏற்பாடுகள் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    • காலையில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது.
    • நண்பகலில் சிறப்பு அலங்காரபூஜை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடி வடக்கு காலன்குடியிருப்பு முத்தாரம்மன் கோவிலில் ஊர் மக்கள் சார்பில் வருஷாபிஷேக விழா மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதையொட்டி காலையில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது. பல்வேறு மந்திரங்கள் ஒதப்பட்டது.

    தொடர்ந்து யாகசாலையில் இருந்துபுனித நீர் எடுத்து முத்தாரம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், கோபுர கலசங்களுக்கும் ஊற்றப்பட்டது.

    நண்பகல் 1 மணிக்கு சிறப்பு அலங்காரபூஜை நடந்தது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. ஊர் மக்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.

    ×