search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுமங்கலி பூஜை"

    • 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு
    • பகல் 11.30 மணிக்கு 7001 பொங்கல் வழிபாடு ஆகியவை நடைபெற்றது.

    மணவாளக்குறிச்சி :

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணி அஸ்வதி பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று மாலை சுமங்கலி பூஜை நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று காலை கணபதி ஹோமம், உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், உஷபூஜை, நண்பகல் 12 மணிக்கு உச்சபூஜை ஆகி யவை நடந்தது. மாலை 6 மணியளவில் சுமங்கலி பூஜை நடந்தது. கோவில் தந்திரி சங்கர நாராயணன், பகவதி குருக்கள் ஆகியோர் பூஜையை நடத்தினர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மண்டைக் காட்டில் குவிந்து சுமங்கலி பூஜையில் கலந்துகொண்ட னர்.

    சிறப்பு கட்டணம் செலுத்திய இவர்களுக்கு சில்வர் தட்டு, மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, வெற்றிலை பாக்கு, சேலை, ஜாக்கெட் துணி மற்றும் பழ வகைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜை ஆகியவை நடந்தது. 2-ம் நாளான இன்று காலை 7 மணிக்கு பஜனை, 10 மணிக்கு ராஜமேளம், பகல் 11.30 மணிக்கு 7001 பொங்கல் வழிபாடு ஆகியவை நடைபெற்றது.

    பொங்கல் வழிப்பாட்டி லும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பெண்கள் குவிந்து பொங்க லிட்டனர். பக்தர்களின் வசதிக்காக தக்கலை, குமாரகோவில் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 12.30 மணிக்கு பொங்கலுக்கு தீர்த்தம் தெளித்தல், மதியம் 1 மணிக்கு தீபாராதனை, தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது.

    நாளை (செவ்வாய்க்கி ழமை) 3-ம் நாள் மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, 6 மணிக்கு தங்கரதம் பவனி, 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு சமய வகுப்பு மாண வர்களுக்கு பரி சளிப்பு, இரவு 8 அத்தாழ பூஜையுடன் ஆவணி அஸ்வதி பொங்கல் விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • அத்தனூர் அம்பிகைக்கு 108 வலம்புரி சங்காபிஷேகம், சுமங்கலி பிரார்த்தனை நடந்தது.
    • சென்னிமலை முருகன் கோவில் அர்ச்சகர்கள் பெரும் திரளாக குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை மார்க்கண்டேய கோத்திரத்தை சேர்ந்த மூன்றாம் பங்காளிகள் சார்பாக ஆடி வெள்ளியினை முன்னிட்டு சென்னிமலை அடுத்துள்ள முகாசிப்பிடாரியூர், அத்தனூர் அம்மன் கோவிலில் அத்தனூர் அம்பிகைக்கு 108 வலம்புரி சங்காபிஷேகம், நவசக்தி அர்ச்சனை, சுமங்கலி பிரார்த்தனை நடந்தது.

    சென்னிமலை ஆதி சைவ அறக்கட்டளை தலைவர் மதி குருக்கள் தலைமையில் 30 வருடங்களுக்கு பிறகு இந்த பூஜையானது சிறப்பாக நடந்தது.

    இதில் சென்னிமலை முருகன் கோவில் அர்ச்சகர்கள் பெரும் திரளாக குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    • இந்நிகழ்ச்சியினை மாநில அமைப்பு செயலாளர் ராமன், திருவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
    • 108 திருவிளக்கு பூஜையும், சுமங்கலி பூஜைகள் நடந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் உள்ள பெரியமாரியம்மன் கோயில் நேற்று 108 திருவிளக்கு மற்றும் சுமங்கலி பூஜைகள் நடந்தது.

    கிருஷ்ணகிரி விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள், மாத்ருசக்தி, துர்வாகினி அமைப்புகள் சார்பில், சென்னை சாலை உள்ள பெரியமாரியம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜையும், சுமங்கலி பூஜைகள் நடந்தது. இந்நிகழ்ச்சியினை மாநில அமைப்பு செயலாளர் ராமன், திருவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மாத்ருசக்தி மாவட்ட அமைப்பாளர் அமுதாகோபி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாலு, துணைத் தலைவர் கந்தன், பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளர்

    சோமசேகர், ஆசைகுமார், துர்காவாகினி மாவட்ட அமைப்பாளர் தமிழரசி, வி.எச்.பி. சத்தியநாராயணன், பூசாரி பாபு மற்றும் பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிப்பட்டனர்.

    • கொடை விழா கடந்த 6-ந்தேதி காலை கணபதி ஹோமம், யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
    • விழாவில் சுவாமிக்கு சிறப்பு பால்குட அபிஷேகம் நடந்தது.

    உடன்குடி:

    உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட பரமன்குறிச்சி ஊராட்சி வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் ஐப்பசி வருடாந்திர பெருங்கொடை விழா கடந்த 6-ந்தேதி காலை கணபதி ஹோமம், யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

    மறுநாள் இரவு 7 மணிக்கு நாடு நலம் பெற வேண்டியும், நல்ல மழை பொழிந்து வறுமை நீங்கி செழுமை வேண்டி பாடல்கள் பாடியும், 108 திருவிளக்கு பூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, உச்சினிமாகாளி அம்மன் சிம்ம வாகனத்தில் தெருபவனி நடந்தது.

    நேற்று காலை 108 பால்குட ஊர்வலம் முக்கிய தெருக்கள் வழியாக மேளதாளத்துடன் பவனி வந்து கோவிலை அடைந்ததும், பின்பு சுவாமிக்கு சிறப்பு பால்குட அபிஷேகம் நடந்தது. வில்லிசை, நண்பகல் 1 மணிக்கு சிறப்பு பூஜையுடன் கும்பம் தெருவீதி வருதல், இரவு 8 மணிக்கு சுமங்கலிபூஜை, நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார பூஜையுடன் சந்தனமாரியம்மன் கிளி வாகனத்தில் பவனி நடந்தது.

    இன்று நண்பகல் 1 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடி வீதியுலா, இரவு7 மணிக்கு கரகாட்டம், 10 மணிக்கு மாவிளக்கு பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு முத்தாரம்மன் அலங்கரிக்கப்பட்டபூஞ் சப்பரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் கொடுத்தல், நாளை 10-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு கலக்கல் கண்ணன் குழுவினரின் இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்மக்கள் செய்துள்ளனர்.

    • ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    • மூன்று நாள் நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணித் திருவிழா இன்று (12-ந் தேதி) தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. முதல் நாளான இன்று சுமங்கலி பூஜை, நாளை அஸ்வதி பொங்காலை, நாளை மறுநாள் திருவிளக்கு பூஜை மற்றும் பரிசளிப்பு விழா என மூன்று நாளும் நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    இதையொட்டி இன்று காலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, 9 மணிக்கு பஜனை, 10.30 மணிக்கு சத்சங்கம், மதியம் 12 மணிக்கு உச்சபூஜை போன்றவை நடந்தது.

    மாலை 5.15 மணிக்கு சுமங்கலி பூஜை நடக்கிறது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சுமங்கலி பூஜை செய்கின்றனர்.

    மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜையும் நடக்கிறது. இரண்டாம் நாளான நாளை (13-ந் தேதி) காலை 9 மணிக்கு மங்கள வாத்தியம், 10 மணிக்கு பஜனை, 10.45 மணிக்கு 5001 பொங்கல் வழிபாடு நடக்கிறது.

    12.30 மணிக்கு பொங்கலுக்கு தீர்த்தம் தெளித்தல், 1 மணிக்கு தீபாராதனை, தொடர்ந்து அன்னதானம் போன்றவை நடக்கிறது. மூன்றாம் நாள் 14-ந் தேதி மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, 6 மணிக்கு தங்கரதம் பவனி, 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு கோயில் சமய வகுப்பு மாணவர்கள் மற்றும் மண்டைக்காடு தேவஸ்தான மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ஆகியோருக்கு பரிசு வழங்குதல், 8 மணிக்கு அத்தாழ பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • லலிதா சகஸ்ர நாம ஹோமம், மஹா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
    • காமாட்சி அம்மன், ஏகாம்பரம் நாதர் திருக்கல்யாணம் நடைபெற்றது.

    பாப்பாரப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் சித்தி விநாயகர் ஆலயத்தில் அமைந்திருக்கும் காமாட்சி அம்மனுக்கு 1008 பெண்கள் கலந்து கொள்ளும் மாங்கல்ய பூஜை நடைபெற்றது.

    முன்னதாக காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், லலிதா சகஸ்ர நாம ஹோமம், மஹா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் காமாட்சி அம்மன், ஏகாம்பரம் நாதர் திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு 1008 பெண்கள் கலந்து கொள்ளும் மாங்கல்ய பூஜை 1008 லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது.

    இதில் ஏராளமான பெண் களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    • கொடுமுடி அருகே கருக்கம்பாளையத்தில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் சுமங்கலிபூஜை நடைபெற்றது.
    • இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது,

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே கருக்கம்பாளையத்தில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் சுமங்கலிபூஜை நடைபெற்றது.இதனையொட்டி கிராமத்து பெண்கள் அனைவரும் கோவிலில் கூடினர். அம்மனுக்கு சிறப்பு அபிசேகம், ஆராதனை நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து உற்சவ மூர்த்தியான அம்மன் விக்கிரகத்துக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டு அம்மன் சிலைக்கு முன்பாக வைக்கப்பட்டு பெண்கள் அனைவரும் பக்தி பாடல்களை பாடி வழிபட்டனர்.

    அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது,

    • சிங்கம்புணரி பத்ரகாளி அம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை நடந்தது.
    • ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று சிறப்பு பூஜை நடந்தது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் 3-வது வார்டில் உள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் பெண்கள் சுமங்கலி பூஜை செய்து வழிபாடு செய்தனர்.

    ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று நடந்த சிறப்பு பூஜையில் கலச பிரதிஷ்டை செய்து விக்னேஸ்வர பூஜை, லலிதா சகஸ்ரநாமம் மிருத்தஞ்சய பூஜை உள்ளிட்ட பூஜைகள் நிறைவு பெற்று சுமங்கலி பூஜை செய்தனர். 1008 போற்றிகள் உள்ளடங்கிய லலிதா சகஸ்ரநாமம் சொல்லப்பட்டு குங்குமத்தால் ரவிக்கைத்துணி மற்றும் தேங்காய் பாலுடன் கூடிய மஞ்சள் பிள்ளையாருக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்தனர்.

    கணவர் நோய் நொடியின்றி வாழவும், மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், சுமங்கலி பூஜையில் பெண்கள் பங்கேற்று வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ×