search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை
    X

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை

    • 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு
    • பகல் 11.30 மணிக்கு 7001 பொங்கல் வழிபாடு ஆகியவை நடைபெற்றது.

    மணவாளக்குறிச்சி :

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணி அஸ்வதி பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று மாலை சுமங்கலி பூஜை நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று காலை கணபதி ஹோமம், உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், உஷபூஜை, நண்பகல் 12 மணிக்கு உச்சபூஜை ஆகி யவை நடந்தது. மாலை 6 மணியளவில் சுமங்கலி பூஜை நடந்தது. கோவில் தந்திரி சங்கர நாராயணன், பகவதி குருக்கள் ஆகியோர் பூஜையை நடத்தினர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மண்டைக் காட்டில் குவிந்து சுமங்கலி பூஜையில் கலந்துகொண்ட னர்.

    சிறப்பு கட்டணம் செலுத்திய இவர்களுக்கு சில்வர் தட்டு, மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, வெற்றிலை பாக்கு, சேலை, ஜாக்கெட் துணி மற்றும் பழ வகைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜை ஆகியவை நடந்தது. 2-ம் நாளான இன்று காலை 7 மணிக்கு பஜனை, 10 மணிக்கு ராஜமேளம், பகல் 11.30 மணிக்கு 7001 பொங்கல் வழிபாடு ஆகியவை நடைபெற்றது.

    பொங்கல் வழிப்பாட்டி லும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பெண்கள் குவிந்து பொங்க லிட்டனர். பக்தர்களின் வசதிக்காக தக்கலை, குமாரகோவில் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 12.30 மணிக்கு பொங்கலுக்கு தீர்த்தம் தெளித்தல், மதியம் 1 மணிக்கு தீபாராதனை, தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது.

    நாளை (செவ்வாய்க்கி ழமை) 3-ம் நாள் மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, 6 மணிக்கு தங்கரதம் பவனி, 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு சமய வகுப்பு மாண வர்களுக்கு பரி சளிப்பு, இரவு 8 அத்தாழ பூஜையுடன் ஆவணி அஸ்வதி பொங்கல் விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×