search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவன் மாயம்"

    • சின்னசேலம் அருகே வீட்டை விட்டு சென்ற 10-ம் வகுப்பு மாணவன் மாயமானார்.
    • வெகு நேரமாகியும் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பெருமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஐயங்குட்டி. விவசாயி. இவரது மகன் முனியன் (வயது 15)பெருமங்கலத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் கடந்த 26. 7. 2022 ஆம் தேதி அன்று வழக்கம் போல் காலை காலைக்கடன் முடிப்பதற்கு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு எங்கு தேடியும் கிடைக்காததால் கீழ்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து மாணவன் முனியனை போலீசார் தேடி வருகின்றனர். 

    • சிதம்பரத்தில் கடைக்கு சென்ற 7-ம் வகுப்பு மாணவன் மாயமானர்.
    • சந்தேகம் அடைந்த பெற்றோர் பல்வேறு பகுதிகளில் தேடியும் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் மேல புதுத் தெருவை சேர்ந்தவர் சபரிநாதன். அவரது மகன் சதீஷ்குமார் (வயது 12). இவர் சிதம்பரத்தில் உள்ள ஆறுமுகநாவலர் மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 19-ந் தேதி அன்று மாலை வீட்டின் அருகே உள்ள பெட்டிக் கடையில் மாவு வாங்கி வரச் சென்றார்.ஆனால் கடைக்கு சென்ற சதீஷ்குமார் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் பல்வேறு பகுதிகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து இவர் தந்தை சபரிநாதன் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுவனை தேடி வருகின்றனர்.

    • மாணவனை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை தேடி வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே பஞ்சப்பள்ளி யில் காரிமங்கலத்தை அடுத்த சொன்னாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் சபரி (14).

    இவர் பஞ்சப் பள்ளியில் உள்ள அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கி அதே பகுதியில் உள்ள பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த 8-ம் தேதி பள்ளிக்குச் சென்ற சபரி இல்லம் திரும்பவில்லை. தகவல் அறிந்த இல்ல கண்காணிப்பாளர் சுந்தர மூர்த்தி மாணவனை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் பஞ்சப்பள்ளி போலீசாரிடம் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் பஞ்சப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை தேடி வருகின்றனர்.

    • வளசரவாக்கம், திருநகர் விரிவு பகுதியை சேர்ந்தவர் குமார்.
    • பள்ளி முடிந்ததும் தினசரி மாலையில் ராமாபுரத்தில் உள்ள கராத்தே பயிற்சி பள்ளிக்கு செல்வது வழக்கம்.

    போரூர்:

    வளசரவாக்கம், திருநகர் விரிவு பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் ஜெயபிரகாஷ் (வயது17). நெசப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். அவர் பள்ளி முடிந்ததும் தினசரி மாலையில் ராமாபுரத்தில் உள்ள கராத்தே பயிற்சி பள்ளிக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று மாலை கராத்தே பள்ளிக்கு சென்ற ஜெயபிரகாஷ் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை வளசரவாக்கம் போலீசார் தேடி வருகிறார்கள்.

    ×