search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவன் மாயம்"

    • சரியாக படிக்காததால் மாணவனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் வெளியே சென்ற மாணவன் திடீரென மாயமானார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவனை தேடி வருகின்றனர்.

    வருசநாடு:

    ஆண்டிபட்டி அருகே எட்டப்பராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் மகன் சூர்யா (வயது13). இவர் ஜி.உசிலம்பட்டி அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.சரியாக படிக்காததால் பெற்றோர் கண்டித்துள்ளனர்.

    இதனால் சூர்யா திடீரென மாயமானார். அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடை க்காததால் கண்டமனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை தேடி வருகின்றனர்.

    • ரெயில் நிலையத்தில் சிறுவனின் பைக் நின்று கொண்டு இருந்தது
    • பெற்றோர் போலீசார் விசாரணை

    வேலூர்:

    காட்பாடி விஜி ராம் நகரை சேர்ந்தவர் 15 வயது சிறுவன். இவர் காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் சிறுவன் வீட்டில் இருந்த பைக் மற்றும் ரூ.20 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு டியூஷன் செல்வதாக பெற்றோர்களிடம் கூறிவிட்டு சென்றார்.

    அதன்பின்னர் சிறுவன் வீடு திரும்பவில்லை. மகன் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர்.அப்போது காட்பாடி ரெயில் நிலையத்தில் சிறுவன் ஓட்டி சென்ற பைக் நின்று கொண்டு இருந்தது. ஆனால் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் காட்பாடி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை தேடி வருகின்றனர்.

    • அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான்
    • மகன் எடுத்துச்சென்ற செல்போனில் ரிங் சென்றதாகவும், அதன்பிறகு சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது

    ராஜாக்கமங்கலம் :

    வெள்ளிச்சந்தை அருகே உள்ள வெள்ளமோடி பகுதியை சேர்ந்தவர் சுயம்பு லிங்கம், கட்டிட தொழிலாளி. இவரது மகன் சுதன் (வயது 15). இவன் அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரு கிறான்.

    கடந்த 2 நாட்களாக சுதன் பள்ளிக்கு செல்லவில்லையாம். இதனை அறிந்த சுயம்புலிங்கம் கண்டித்துள் ளார். இந்த நிலையில் நேற்று காலை சுதன் திடீரென மாயமாகி விட்டான். அவர் தனது தந்தையின் செல் போனையும் எடுத்துச் சென்றுள்ளான்.

    மகனை பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்கா ததால் வெள்ளிச்சந்தை போலீசில் சுயம்புலிங்கம் புகார் செய தார். அதில் மதியம் வரை மகன் எடுத்துச்சென்ற செல்போனில் ரிங் சென்றதாகவும், அதன்பிறகு சுவிட்ச் ஆப் ஆகி உள்ளதாகவும் குறிப் பிட்டுள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீஸ் நிலையத்தில் புகார்
    • தீவிரமாக தேடி வருகின்றனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை காரை கூட்ரோட்டில் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லம் உள்ளது. இந்த சிறுவர் இல்லத்திலிருந்து மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இல்லத்திலிருந்து பள்ளிக்கு சென்ற மதுரையை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் பாலமுருகன் (15) இவர் 10-ம் வகுப்பு செல்லவில்லை. திரும்ப இல்லத்திற்கும் வரவில்லை.

    இதை தொடர்ந்து இல்லத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையம், வாலாஜா ரோடு ரெயில் நிலையம் என பல்வேறு இடங்களில் தேடியும் மாணவன் கிடைக்கவில்லை.

    இதனையடுத்து சிறுவர் இல்ல கண்காணிப்பாளர் (பொறுப்பு) கண்ணன் ராதா நேற்று ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் ராணிப்பேட்டை போலீசாரர் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • தலைமுடியை மட்டும் மாடலாக வெட்டிக் கொண்டு வந்துள்ளாய் என தந்தை கண்டித்தார்.
    • வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டை விட்டு பள்ளி மாணவன் வெளியேறி தலைமறைவாகி விட்டார்.

    பாலக்கோடு,

    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கணவனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி மாதப்பன் இவரது மகன் நித்திஷ் (15). கோட்டூர் அரசு மேல்நிலை பள்ளியில் 10- ம் வகுப்பு படித்து வருகிறார். அரையாண்டு தேர்வு விடுமுறையில் வீட்டிலிருந்த மாணவன் தலைமுடி மாடலாக வெட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்துள்ளான்.

    படிப்பில் சரியாக கவனம் செலுத்துவதில்லை. ஆனால் தலைமுடியை மட்டும் மாடலாக வெட்டிக் கொண்டு வந்துள்ளாய் என தந்தை கண்டித்தார்.

    வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டை விட்டு பள்ளி மாணவன் வெளியேறி தலைமறைவாகி விட்டார். இதனால் அவரை கடந்த ஏழு நாட்களாக உறவினர், நண்பர்கள் என பல்வேறு பகுதிகளில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து மாரண்டஹள்ளி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் மாயமான மாணவனை போலீசார் ேதடி வருகின்றனர்.

    • தீயணைப்பு வீரர்கள் ட்ரோன் மற்றும் ரப்பர் படகு மூலம் இன்று 2வது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.
    • அண்ணா பல்கலைக்கழக குழுவினரின் ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடுதடல் பணி நடைபெற்றது.

    சென்னை, சைதாப்பேட்டை பகுதியில் உள்ள அடையாறு ஆற்றில் மூழ்கி 9ம் வகுப்பு மாணவன் நேற்று மாயமானான். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் மாணவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால், மாணவன் இன்னும் கிடைக்காத நிலையில் தீயணைப்பு வீரர்கள் ட்ரோன் மற்றும் ரப்பர் படகு மூலம் இன்று 2வது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    தீயணைப்பு வீரர்கள் 18 மணி நேரமாக மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

    அண்ணா பல்கலைக்கழக குழுவினரின் ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடுதல் பணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் 2வது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • தீயணைப்பு வீரர்கள் 15 மணி நேரமாக மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னை, சைதாப்பேட்டை பகுதியில் உள்ள அடையாறு ஆற்றில் மூழ்கி 9ம் வகுப்பு மாணவன் நேற்று மாயமானான்.

    இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் மாணவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால், மாணவன் இன்னும் கிடைக்காத நிலையில் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் 2வது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தீயணைப்பு வீரர்கள் 15 மணி நேரமாக மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரசு பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வருகிறார்.
    • விடுதியை விட்டு வெளியே சென்ற மணிகண்டன் அதன்பிறகு விடுதிக்கு திரும்பவில்லை.

    கிருஷ்ணகிரி,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேயுள்ள போச்சாரம்பள்ளி பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவரது மகன் மணிகண்டன் (வயது 17).கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் உள்ள அரசு பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று விடுதியை விட்டு வெளியே சென்ற மணிகண்டன் அதன்பிறகு விடுதிக்கு திரும்பவில்லை.இது குறித்த தளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல பர்கூர் பகுதியை சேர்ந்த ஜாஹீர் பாஷா என்பவரது மகளான 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கடந்த 14-ந்தேதி முதல் மாயமாகிவிட்டார்.இது குறித்து பெறப்பட்ட புகாரின்பேரில் பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    • பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்ற மாணவன் பள்ளி நேரம் முடிந்தும் வீடு திரும்பவில்லை.
    • இது குறித்து அவரது தந்தை பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பிரகாஷ். இவரது மகன் கன்னிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

    இவர் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்ற மாணவன் பள்ளி நேரம் முடிந்தும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இது குறித்து அவரது தந்தை பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொன்னேரி அடுத்த காட்டாவூர் தனியார் கொய்யா பண்ணையில் ஒடிசாவை சேர்ந்த கொரியாபா வேலை செய்து வருகிறார்.
    • பொன்னேரி போலீஸ் நிலையத்தில் கொய்யா பண்ணை சூப்பர்வைசர் திலகவதி புகார் கொடுத்தார்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த காட்டாவூர் தனியார் கொய்யா பண்ணையில் ஒடிசாவை சேர்ந்த கொரியாபா வேலை செய்து வருகிறார். இவரது மகன் ராஜ் பால் பாக் (வயது 15). நேற்று முன்தினம் தனது தந்தை திட்டியதால் கோபம் அடைந்து ராஜ்பால்பாக் பண்ணையை விட்டு வெளியே சென்றான். இதுவரை வீடு திரும்பாததால் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் கொய்யா பண்ணை சூப்பர்வைசர் திலகவதி புகார் கொடுத்தார்.

    போலீசார் காணாமல் போன ராஜ் பால் பாக்கை தேடி வருகின்றனர்.

    • நேற்று வீட்டை விட்டு வெளியே சென்ற இவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
    • உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள தொகரப்பள்ளி ஆடாளம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது18). இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    நேற்று வீட்டை விட்டு வெளியே சென்ற இவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து அவரது தந்தை மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.

    • பல்வேறு இடங்களில் விசாரித்தும் முகமது சுபான் குறித்து எந்த வித தகவலும் கிடைக்கவில்லை.
    • இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசில் அப்துல் ஷெரிப் புகார் செய்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி டவுன் போலீசார் சரகர் தசரதராமன் தெருவை சேர்ந்தவர் அப்துல் ஷெரிப். இவரது மகன் முகமது சுபான் (வயது16).

    அதே பகுதியில்உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த 25-ந் தேதி பள்ளிக்கு செல்வதாக கூறி புறப்பட்டு சென்ற முகமது சுபான் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

    பல்வேறு இடங்களில் விசாரித்தும் முகமது சுபான் குறித்து எந்த வித தகவலும் கிடைக்கவில்லை.

    இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசில் அப்துல் ஷெரிப் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் வழக்குப்பதிந்து மாயமான மாணவனை தேடி வருகின்றனர்.

    ×