ரூ.20 ஆயிரத்துடன் டியூஷன் சென்ற மாணவன் மாயம்

ரெயில் நிலையத்தில் சிறுவனின் பைக் நின்று கொண்டு இருந்தது பெற்றோர் போலீசார் விசாரணை
ரூ.20 ஆயிரத்துடன் டியூஷன் சென்ற மாணவன் மாயம்
Published on

வேலூர்:

காட்பாடி விஜி ராம் நகரை சேர்ந்தவர் 15 வயது சிறுவன். இவர் காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் சிறுவன் வீட்டில் இருந்த பைக் மற்றும் ரூ.20 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு டியூஷன் செல்வதாக பெற்றோர்களிடம் கூறிவிட்டு சென்றார்.

அதன்பின்னர் சிறுவன் வீடு திரும்பவில்லை. மகன் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர்.அப்போது காட்பாடி ரெயில் நிலையத்தில் சிறுவன் ஓட்டி சென்ற பைக் நின்று கொண்டு இருந்தது. ஆனால் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் காட்பாடி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com