என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னேரியில் தந்தை திட்டியதால் மாணவன் மாயம்
    X

    பொன்னேரியில் தந்தை திட்டியதால் மாணவன் மாயம்

    • பொன்னேரி அடுத்த காட்டாவூர் தனியார் கொய்யா பண்ணையில் ஒடிசாவை சேர்ந்த கொரியாபா வேலை செய்து வருகிறார்.
    • பொன்னேரி போலீஸ் நிலையத்தில் கொய்யா பண்ணை சூப்பர்வைசர் திலகவதி புகார் கொடுத்தார்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த காட்டாவூர் தனியார் கொய்யா பண்ணையில் ஒடிசாவை சேர்ந்த கொரியாபா வேலை செய்து வருகிறார். இவரது மகன் ராஜ் பால் பாக் (வயது 15). நேற்று முன்தினம் தனது தந்தை திட்டியதால் கோபம் அடைந்து ராஜ்பால்பாக் பண்ணையை விட்டு வெளியே சென்றான். இதுவரை வீடு திரும்பாததால் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் கொய்யா பண்ணை சூப்பர்வைசர் திலகவதி புகார் கொடுத்தார்.

    போலீசார் காணாமல் போன ராஜ் பால் பாக்கை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×