என் மலர்
நீங்கள் தேடியது "Student illusion"
- பரணிஸ்ரீ (வயது 20). இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. தமிழ் 3-ம் ஆண்டு படித்து வருகின்றார்.
- கல்லூரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை.மாணவியின் தாய் கமலா போலீ!ஸ்நிலையத்தில் புகார் கொடுத்தார்
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஆண்டிப்பாளை யத்தை சேர்ந்தவர் பாரதி. இவரது மகள் பரணிஸ்ரீ (வயது 20). இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. தமிழ் 3-ம் ஆண்டு படித்து வருகின்றார். இவர் கடந்த 14-ந்தேதி கல்லூரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை
இவரை பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் மாணவியின் தாய் கமலா புகார் கொடுத்தார். இதில் அங்குசெட்டி பாளையத்தை சேர்ந்த பரணிதரன் என்பவர் ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்றதாக கூறியுள்ளார்.இது குறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்த காணாமல் போன கல்லூரி மாணவி பரணிஸ்ரீ யை தேடி வருகின்றனர்.
- போலீஸ் நிலையத்தில் புகார்
- தீவிரமாக தேடி வருகின்றனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை காரை கூட்ரோட்டில் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லம் உள்ளது. இந்த சிறுவர் இல்லத்திலிருந்து மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இல்லத்திலிருந்து பள்ளிக்கு சென்ற மதுரையை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் பாலமுருகன் (15) இவர் 10-ம் வகுப்பு செல்லவில்லை. திரும்ப இல்லத்திற்கும் வரவில்லை.
இதை தொடர்ந்து இல்லத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையம், வாலாஜா ரோடு ரெயில் நிலையம் என பல்வேறு இடங்களில் தேடியும் மாணவன் கிடைக்கவில்லை.
இதனையடுத்து சிறுவர் இல்ல கண்காணிப்பாளர் (பொறுப்பு) கண்ணன் ராதா நேற்று ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் ராணிப்பேட்டை போலீசாரர் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.






