வெள்ளிச்சந்தையில் 9-ம் வகுப்பு மாணவன் மாயம்

அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான்மகன் எடுத்துச்சென்ற செல்போனில் ரிங் சென்றதாகவும், அதன்பிறகு சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது
வெள்ளிச்சந்தையில் 9-ம் வகுப்பு மாணவன் மாயம்
Published on

ராஜாக்கமங்கலம் :

வெள்ளிச்சந்தை அருகே உள்ள வெள்ளமோடி பகுதியை சேர்ந்தவர் சுயம்பு லிங்கம், கட்டிட தொழிலாளி. இவரது மகன் சுதன் (வயது 15). இவன் அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரு கிறான்.

கடந்த 2 நாட்களாக சுதன் பள்ளிக்கு செல்லவில்லையாம். இதனை அறிந்த சுயம்புலிங்கம் கண்டித்துள் ளார். இந்த நிலையில் நேற்று காலை சுதன் திடீரென மாயமாகி விட்டான். அவர் தனது தந்தையின் செல் போனையும் எடுத்துச் சென்றுள்ளான்.

மகனை பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்கா ததால் வெள்ளிச்சந்தை போலீசில் சுயம்புலிங்கம் புகார் செய தார். அதில் மதியம் வரை மகன் எடுத்துச்சென்ற செல்போனில் ரிங் சென்றதாகவும், அதன்பிறகு சுவிட்ச் ஆப் ஆகி உள்ளதாகவும் குறிப் பிட்டுள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com