சிதம்பரத்தில் கடைக்கு சென்ற 7-ம் வகுப்பு மாணவன் மாயம்

சிதம்பரத்தில் கடைக்கு சென்ற 7-ம் வகுப்பு மாணவன் மாயமானர்.சந்தேகம் அடைந்த பெற்றோர் பல்வேறு பகுதிகளில் தேடியும் கிடைக்கவில்லை.
சிதம்பரத்தில் கடைக்கு சென்ற 7-ம் வகுப்பு மாணவன் மாயம்
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் மேல புதுத் தெருவை சேர்ந்தவர் சபரிநாதன். அவரது மகன் சதீஷ்குமார் (வயது 12). இவர் சிதம்பரத்தில் உள்ள ஆறுமுகநாவலர் மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 19-ந் தேதி அன்று மாலை வீட்டின் அருகே உள்ள பெட்டிக் கடையில் மாவு வாங்கி வரச் சென்றார்.ஆனால் கடைக்கு சென்ற சதீஷ்குமார் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் பல்வேறு பகுதிகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து இவர் தந்தை சபரிநாதன் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுவனை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com