search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாஞ்சோலை"

    • ராதாபுரம், சேரன்மகாதேவி, களக்காடு ஆகிய இடங்களில் லேசான மழை பெய்துள்ளது.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினத்தில் 45 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று அதிகாலை திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் 2 மாவட்டங்களிலும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

    மேலும் பெரும்பாலான இடங்களில் வானம் மேக மூட்டமாக காட்சியளித்த தோடு குளிர்ந்த காற்றும் வீசியது. தொடர்ந்து நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரையிலும் ஒருசில இடங்களில் மிதமான சாரல் மழை பெய்தது. தூத்துக்குடியில் மாநகர பகுதி, கடற்கரையோரங்கள் மற்றும் உப்பளங்கள் உள்ள பகுதிகளில் இன்று அதிகாலையில் சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் இன்றும் அதிகாலையில் சாரல் மழை பெய்தது. இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக ஊத்து எஸ்டேட்டில் 20 மில்லிமீட்டர், மாஞ்சோலையில் 16 மில்லிமீட்டர் மழை பெய்தது. காக்காச்சி மற்றும் நாலுமுக்கு எஸ்டேட்டில் தலா 5 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    மாவட்டத்தில் புறநகர் பகுதிகளான ராதாபுரம், சேரன்மகாதேவி, களக்காடு ஆகிய இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. அதிக பட்சமாக ராதாபுரத்தில் 10 மில்லிமீட்டர் மழை பெய்து ள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினத்தில் 45 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. குலசேரகன்பட்டினத்தில் 10 மில்லி மீட்டரும், ஸ்ரீவைகுண்டத்தில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளில் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. பாபநாசம் அணையில் நீர் இருப்பு 68.45 அடியாகவும், சேர்வலாறில் 80.90 அடியாகவும், மணி முத்தாறில் 97.31 அடியாகவும் நீர் இருப்பு குறைந்துள்ளது.

    இந்நிலையில் தற்போது பெய்த லேசான மழை தண்ணீர் இருப்பை அதிகரிக்காவிட்டாலும், பூமியை சற்று குளிர செய்யும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் கூறுகின்றனர்.

    • தடியடியில் உயிர் தப்பிப்பதற்காக தாமிரபரணி ஆற்றில் 17 பேர் குதித்து இறந்தனர்.
    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஸ்ரீராம், மோகன் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மாஞ்சோலையில் பணியாற்றிய தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு கடந்த 1999-ம் ஆண்டு ஜூலை 23-ந்தேதி ஊர்வலம் சென்றனர்.

    நினைவு தினம்

    அப்போது நடந்த தடியடியில் உயிர் தப்பிப்பதற்காக தாமிரபரணி ஆற்றில் 17 பேர் குதித்து இறந்தனர். இதன் 24-வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதனை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் தாமிரபரணி ஆற்றுக்கு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி னர்.

    பா.ஜனதா சார்பில் நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமையில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்டத் தலைவர் மகாராஜன், மாவட்ட பொதுச்செயலாளர் வேல் ஆறுமுகம், சுரேஷ் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

    மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் சார்பில் நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் பிரேம்குமார், பாலமுருகன், முத்து கருப்பன் உள்பட ஏராள மானோர் வந்து அஞ்சலி செலுத்தினர்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலா ளர் லட்சுமணன் தலைமை யில் காசி விஸ்வநாதன் உள்பட பலர் மலரஞ்சலி செலுத்தினர். தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகே சன் மற்றும் நிர்வாகிகள் மாரித்துரை, சிந்தா சுப்பிரமணியன், திருமலை மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஸ்ரீராம், மோகன், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். தமிழர் உரிமை மீட்புகளம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் லெனின் கென்னடி தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்பில் சுந்தர்ராஜ், ரமேஷ் மற்றும் பலர் வந்து அஞ்சலி செலுத்தினர்.

    தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்

    தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நெல்லை மாவட்டத் தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாநிலத் துணைப் பொதுச் செயலா ளர்கள் சண்முக சுதாகர், நெல்லையப்பன், மாநகர் மாவட்ட செயலாளர் துரைப்பாண்டியன், மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்து பாண்டி யன், மகளிர் அணி நளினி சாந்தகுமாரி, மாநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் மணிமாறன், மேலப்பாளையம் பகுதி தலைவர் டிக் முத்து, மேலப் பாளையம் பகுதி இணைச் செயலாளர் முருகேஷ், மேலப்பாளையம் பகுதி இளைஞரணி செய லாளர் உலகநாதன், சிந்து, பேராச்சி, காட்டுராணி, கருப்பசாமி, பாலசந்தர், மணி, இசை செல்வா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆதித்தமிழர் கட்சி சார்பில் மாவட்ட செய லாளர் கலைக்கண்ணன் தலைமையிலும், ஆதித்தமி ழர் பேரவை சார்பில் மாவட்ட செயலாளர் ராம மூர்த்தி தலைமையிலும், திராவிட தமிழர் கட்சி சார்பில் கதிரவன் தலைமை யிலும் மரியாதை செலுத்தப் பட்டது. நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பா ளர் சத்யா உள்பட திரளான நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

    தமிழர் விடுதலைக் களம் நிறுவனத் தலைவர் ராஜ்குமார் தலைமையில் மாவட்ட செயலாளர் முத்துக்குமார், வண்ணை முருகன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.


    தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்டத் தலைவர் கண்மணி மாவீரன் மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்திய காட்சி.

    தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்டத் தலைவர் கண்மணி மாவீரன் மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்திய காட்சி.


     


    • நாளை நெல்லை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் அடிப்படை ஊதியத்திற்காகவும், உரிமைகளுக்காகவும் போராடி உயிர்நீத்த 17 மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு வீரவணக்க நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது.
    • மாலையில் புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி தலைமையில் வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் வக்கீல் கனகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதிய தமிழகம்

    தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்துதரப்பு மக்களின் நலனுக்காக தொடர்ந்து போராடி வரும் இயக்கமாக புதிய தமிழகம் கட்சி உள்ளது.

    நாளை (சனிக்கிழமை) நெல்லை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் அடிப்படை ஊதியத்திற்காகவும், உரிமைகளுக்காகவும் போராடி உயிர்நீத்த 17 மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு வீரவணக்க நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது.

    வருடம்தோறும் இந்த வீரவணக்க நினைவஞ்சலி புதிய தமிழகம் கட்சி சார்பில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    இதன்படி, இந்தாண்டிற்கான வீரவணக்க நினைவஞ்சலி, வீரவணக்க பேரணி மற்றும் அதனைத்தொடர்ந்து அன்று மாலையில் புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி தலைமையில் வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து புதிய தமிழகம் கட்சியினர் திரளாக சென்று பங்கேற்றிட வேண்டும் என்று ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் முழுஒத்துழைப்பு தந்து சிறப்பித்திட வேண்டும்.

    எனவே மாவட்டம் முழுவதும் உள்ள புதிய தமிழகம் தொண்டர்கள், கட்சியினர் அனைவரும் குடும்பத்துடன் அணி திரண்டு வந்து பங்கேற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×