search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாசி மாத பிறப்பு"

    • தீர்த்த நீராடலுக்கு முக்கியத்துவம் தரும் விழா மாசி மகம் ஆகும்.
    • மாசி மாத சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு.

    * தீர்த்த நீராடலுக்கு முக்கியத்துவம் தரும் விழா மாசி மகம் ஆகும். மாசி மாதத்தில் பவுர்ணமியை ஒட்டிவரும் மகம் நட்சத்திரத்தில் இவ்விழா நடக்கும். தீர்த்தங்களுடன் அமைந்த பெரும்பாலான கோவில்களில் இந்நாளில் தெப்பத் திருவிழா நடக்கும்.

    * மாசி மாதத்தில் சிறுவர்களுக்கு உபநயனம் செய்வது, மந்திர உபதேசம் செய்வது சிறப்பு.

    * சிவபெருமான், குழந்தை வடிவில் வந்து தமது திருவிளையாடல்கள் மூலம் அருள்புரிந்தது மாசி மாதத்தில் தான் என்பதும் புராணக்கூற்று. பிரகலாதனைக் கொல்வதற்காக நயவஞ்சகமாக வந்த அரக்கி, தீயில் வெந்து சாம்பலான நிகழ்ச்சி மாசி மாதத்தில் தான் நடந்தது.

    * மாசி மாத சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பிக்கப்படுகிறது. அன்று விரதம் கடைப்பிடித்து விநாயகரை வழிபட்டால் எல்லாவிதமான தோஷங்களும் விலகும் என்பர்.

    * மாசி மகத்தன்று தான் மகா விஷ்ணு, வராக அவதாரம் எடுத்து, அசுரனை வதம் செய்து பூமியை மீட்டுக் கொண்டு வந்தார்.

    * மாசி மாதத்திற்கு அதிதேவதை மகாவிஷ்ணு. அதனால் மகாவிஷ்ணுவை இம்மாதம் முழுவதும் துளசியால் அர்ச்சித்து வழிபட்டால், இல்லத்தில் சுபகரியங்கள் தடையின்றி நிறைவேறும்.

    * மாசி மகத்தன்று திருவண்ணாமலையார், `பள்ளி கொண்டாப்பட்டு' என்னும் ஊருக்கு எழுந்தருளி, வல்லாள மகாராஜனுக்கு மகனாகக்காட்சி கொடுத்து, நீத்தார் கடனுக்குரிய வழிபாட்டினை நடத்தினார். வல்லாள மகாராஜனுக்கு வாரிசு இல்லாததால் சிவபக்தனான மகாராஜனுக்கு சிவன், நீத்தார் கடன் அளித்ததாக புராணங்கள் சொல்கின்றன.

    * மாசி வளர்பிறை சதுர்த்தி திதியில் நடைபெறும் முழுக்கு, தேவர்கள் செய்யும் பூஜை என்பது ஐதீகம்.

    * மன்மதன் சிவபெருமானால் எரிக்கப்பட்டதும் மாசி பவுர்ணமியில்தான்.

    * மாசி மாதத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாகக் கருதப்படுகிறது.

    * குலசேகர ஆழ்வார், மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில்தான் அவதரித்தார்.

    * அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம் தான்.

    * மாசி மாத பூச நட்சத்திர தினத்தன்று தான் முருகப்பெருமான், சுவாமி மலையில் தன் தந்தை சிவபெருமானுக்கு பிரணவப் பொருளை உபதேசம் செய்தார்.

    * பிரம்மஹத்தி போன்ற பெரும் பாவங்களைப் போக்கி, பேய்க்கும் நற்கதி கொடுக்கும் இரு ஏகாதசிகள் வருவது மாசி மாதத்தில்தான்.

    * உயர் படிப்பு விரும்புபவர்கள், ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசி மக நாளில் அவற்றைத் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.

    * அகத்தியர் தன் விருப்பங்கள் நிறைவேற தவம் இருந்து அருள் பெற்றது மாசி மாதத்தில்தான்.

    * காரடையான் நோன்பும், சாவித்ரி விரதமும் இம்மாதத்தில் வரும் விசேஷ விரதங்கள்.

    * மாசி மகம் அன்றுதான் காம தகன விழா நடைபெறுகிறது.

    * மாசி மாதத்தில் வீடு குடிபோனால் வாடகை வீடாக இருந்தாலும் அவ்வீட்டில் அதிக நாட்கள் வாழ்வார்கள். எனவே இம்மாதத்தில் புது வீடு கிரகப்பிரவேசம் நடத்தலாம்.

    * மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர் ஜகத்தை ஆள்வர் என்பதும், மாசிக் கயிறு பாசி படியும் என்பதும் பழமொழி. இம்மாதத்தில் பெண்கள் புது மாங்கல்ய சரடு கட்டிக்கொள்வது சிறப்பானது.

    * மாசி மகத்தன்று நெல்லையப்பர் கோவில் பொற்றாமரை தீர்த்தத்தில் திருநாவுக்கரசருக்கு தெப்ப விழா நடத்துவர். இதற்கு `அப்பர் தெப்பம்' எனப் பெயர்.

    * மாசி மாதத்தில் அதிகாலை எழுந்து குளித்தபின் துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால், வைகுண்டத்தில் இடம் கிடைக்கும்.

    * மாசி மக நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு, இன்பமும் வெற்றியும் தேடி வரும்.

    * மாசி மாத சுக்ல பட்ச பஞ்சமியில் சரஸ்வதி தேவியை மணமுள்ள மலர்களால் அலங்கரித்து வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்கலாம்.

    • விஷ்ணு வழிபாட்டுக்கு உரிய முக்கியமான தினம்.
    • பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தவை.

    12 ராசிகளில் சூரியன் எந்த ராசியில் நுழைகிறதோ, அந்த ராசிதான் அந்த மாதத்தின் பெயராக வழங்கப்படுகிறது. உத்திராயணத்தின் முதல் ராசியானமகர ராசியில், சூரியன் நுழையும் காலம், விஷ்ணுபதி புண்ணிய காலம். அதாவது, விஷ்ணு வழிபாட்டுக்கு உரிய மிக முக்கியமான தினம் ஆகும்.

    வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி ஆகிய மாதங்களின் முதல்நாள் விஷ்ணுபதி புண்ணியகாலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தவை. விஷ்ணுபதி புண்ணியகாலத்தில் பெருமாள் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். குறிப்பாக, சங்கு சக்ரதாரியாகப் பெருமாள் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று பெருமாளை வழிபட வேண்டும்.

    பெருமாள் சந்நதியை 27 முறை பிரதட்சிணம் வருவது விசேஷம். ஆலயங்களில் இந்த நாளில் நடக்கும் அபிஷேக ஆராதனைகளைக் கண்டு வழிபாடு செய்ய, மனம் அமைதி பெறும். இந்தநாளில் மகாலட்சுமி பூஜை, கோபூஜை ஆகியன செய்வது மிகவும் பலன் தரும்.

    ×