search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனநல காப்பகம்"

    • சிறப்பு மருத்துவ முகாமை திருத்துறைப்பூண்டி நம்பிக்கை மனநல காப்பகத்தில் நடத்தியது.
    • காப்பகத்தில் உள்ள 46 நபர்களுக்கும் கண் பரிசோதனை மற்றும் பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உத்தர வின்படி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா அறிவுரையின்படி பொது சுகாதார துறை மூலம் நடமாடும் மருத்துவ வாகன வசதி மற்றும் ஆலத்தம்பாடி ஆரம்ப சுகாதார நிலையம் மாவட்ட காசநோய் தடுப்பு பிரிவு இணைந்து சிறப்பு மருத்துவ முகாமை திருத்துறைப்பூண்டி நம்பிக்கை மனநல காப்பகத்தில் நடத்தியது.

    முகாமில் டாக்டர்கள், சித்தா டாக்டர்கள், பல் மருத்துவர்கள், பிசியோ தெரபி , எக்ஸ்ரே எடுக்கும் நிபுணர், செவிலியர்கள் உதவியாளர்கள் என மொத்தம் 35 பேர் கொண்ட குழு மருத்துவ வசதி வாகனங்களுடன் நம்பிக்கை மனநல காப்பதற்கு வந்து காப்பகத்தில் உள்ள 46 நபர்களுக்கும் கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், சுகர் பரிசோதனை, நடமாடும் வாகனத்தில் எக்ஸ்ரே எடுத்து அனைவருக்கும் கண் பரிசோதனைகளும் பல் சம்பந்தப்பட்ட பரிசோதனைகளும் எடுக்கப்பட்டது. அனைவரையும் டாக்டர்கள் தனித்தனியே நன்கு பரிசோதித்து மருந்து மாத்திரை தேவையான வர்களுக்கு வழங்கினர்.காப்பகத்தில் உள்ள அனைவரும் பயன்பெற்றனர்.

    இம்முகாமல் நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சௌந்தர்ராஜன் அனைவரும் வரவேற்று அறிமுகப்படுத்தினார். மாவட்ட மனநல மருத்துவர் டாக்டர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். டாக்டர் முகைதீன் முன்னிலை வகித்தார்.

    முகாமில் காப்பக பணியாளர்கள் பிரியா, வள்ளி, சரவணன், சங்கர், மைக்கேல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் நம்பிக்கை மனநல காப்பக செவிலியர் சுதா நன்றி கூறினார்.

    • ஏர்வாடி மனநல காப்பகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு நடத்தினார்.
    • அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறதா?என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் அரசு நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் மனநல காப்பகத்தை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் திடீர் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது கலெக்டர் மனநல காப்பகத்திற்கு சென்று பதிவேடுகளை பார்வையிட்டு மனநல காப்பகத்தில் தங்கி சிகிச்சை பெற்று வரும் விவரம் குறித்து கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து அங்குள்ள 22 பெண்கள், 28 ஆண்கள் மொத்தம் 50 பேர் தங்கி வருவது குறித்து அறிந்து கொண்டதுடன், அவர்களை சந்தித்து சரியாக உணவு வழங்கப்படுகிறதா? மற்றும் மருத்துவ சிகிச்சை, மருத்துவ ஆலோசனை வழங்குவது குறித்தும் கேட்டறிந்தார்.

    தற்பொழுது அங்குள்ள நபர்கள் சுயதொழில் செய்யும் அளவிற்கு குணமடைந்ததையொட்டி, கடல்பாசியில் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் வயர் கூடை, தயாரிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு அவர்களிடம் உங்களை நன்றாக பராமரிக்கிறார்களா, உங்களுக்கு மேலும் கூடுதல் வசதிகள் செய்து கொடுக்க வேண்டுமா என்று கேட்டறிந்தார்.காப்பகத்தை பராமரிக்கும் நிறுவனத்திடம் இங்கு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு சரியான முறையில் சிகிச்சை வழங்கி பூரண குணமடைந்து அவர்களது உறவினர்கள் அழைத்துச் செல்லும் வரை நன்றாக பாதுகாத்திட வேண்டுமென அறிவுரை வழங்கினார்.

    இந்த ஆய்வில் கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், மாவட்ட மாற்றுத்திறனாளி நல உதவி அலுவலர் ஜெய்சங்கர், கீழக்கரை வட்டாட்சியர் சரவணன், கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 41 பயனாளிகளுக்கு அதற்குரிய மருந்து மாத்திரைகள் பரிந்துரைத்து மருத்துவ அறிவுரைகள்.
    • காப்பகத்தில் உள்ள வேற்று மொழி பயனாளிகளிடம் டாக்டர்கள் அவரவரது மொழியில் பேசி கேட்டறிந்தார்கள்.

    திருத்துறைப்பூண்டி:

    மாற்றுத்திறனாளிகள் நாளை முன்னிட்டு நம்பிக்கை மனநல காப்பகத்தில் பில்லியன் ஆர்ட்ஸ் பீட்டிங் பவுண்டேஷன் இணைந்து பொது மருத்துவ முகாம் நம்பிக்கை மனநல காப்பகத்தில் நடைபெற்றது

    திருத்துறைப்பூண்டி நகர் மன்ற உறுப்பினரும், காங்கிரஸ் தலைவருமான எழிலரசன் தலைமை வகித்தார். நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சௌந்தர்ராஜன், அப்போலோ மருத்துவமனை குழுமம் சார்பில் மூத்த அலுவலர் ஆனந்தபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    காப்பக திட்ட மேலாளர் விஜயா அனைவரையும் வரவேற்று பேசினார் .மூத்த டாக்டர் வர்கீஸ், உதவி பேராசிரியர் டாக்டர் சருண், தசை இயக்க டாக்டர் கருணாநிதி மற்றும் செவிலியர்கள் உடல் எடை, உயரம், இரத்த அழுத்தம், சுகர் நிலை, உடல் இயக்கங்கள், கை நடுக்கம், ரத்த சோகை, தலைவலி, போன்ற பல்வகை வியாதிகளுக்கு உண்டான பரிசோதனைகள் செய்து நம்பிக்கை மனநல காப்பகத்தில் உள்ள 41 பயனாளிகளுக்கு அதற்குரிய மருந்து மாத்திரைகள் பரிந்துரைத்து மருத்துவ அறிவுரைகள் ஆலோசனைகள் வழங்கினார்கள் .

    காப்பகத்தில் உள்ள வேற்று மொழி பயனாளிகளிடம் டாக்டர்கள் அவரவரது மொழியில் பேசி கேட்டறிந்தார்கள். மனநலம் பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் டாக்டர்களிடம் நன்றாக சாப்பிடுகின்றோம் சந்தோஷமாக இருக்கிறோம். என்று சொன்னதை கேட்டு டாக்டர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். மேலும் இவர்களை சந்தோஷமாக மகிழ்விக்க பணியாளர்கள் அனைவருக்கும் உதவி பேராசிரியர் டாக்டர் சருண் ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கினார்.

    காப்பக பணியாளர்கள் சரவணன், கோகிலா, சக்தி பிரியா, வள்ளி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இறுதியில் அப்போலோ மருத்துவமனை சார்பில் ஆனந்த் பாபு நன்றி கூறினார்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் மனநலம் பாதிக்கப்பட்டோர் காப்பகத்தில் உணவு வழங்கப்படுகிறது.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழாவை முன்னிட்டு வழங்கப்படுகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழாவை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை சார்பில் ஜீவக்கல் ஆதரவற்றோர் மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    பேரவையின் மாநில துணைச் செயலாளர் பரலோகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நில உரிமை மீட்பு இயக்க மாவட்ட அமைப்பாளர் புனிதன், நகர துணை செயலாளர் அறிவுமிக்கேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்வில் 150-க்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டோர் ஆதரவற்றோர் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் காலை உணவு வழங்கப்பட்டது.

    ×