search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபார்கள்"

    • 500 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளதே தவிர புதிதாக எங்கும் கடைகள் திறக்கப்படவில்லை.
    • அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் 1045 குளங்களில் 920 குளங்களுக்கு சோதனையோட்டம் முடிக்கப்பட்டுள்ளது

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று பல்வேறு திட்டப்பணிகளுக்கு அமைச்சர் சு.முத்துசாமி அடிக்கல் நாட்டினார். பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் டாஸ்மாக்கில் பணியாளர்களுக்கு பாரபட்சம் இல்லாமல் சீனியாரிட்டி அடிப்படையில் 2000 நபர்களுக்கு பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளது.

    டாஸ்மாக்கில் இரண்டு மாதத்தில் அனைத்தும் கணினி மயமாக்கப்படும் பணிகள் நிறைவு பெறும்.இதன் மூலம் ரசீது உள்பட மதுபானம் விற்பனை அனைத்தும் கண்காணிக்க முடியும்.

    500 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளதே தவிர புதிதாக எங்கும் கடைகள் திறக்கப்படவில்லை. பள்ளி, கோவில் மற்றும் மக்களின் புகாரின் அடிப்படையில் கடைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதே தவிர புதிய கடைகள் திறக்கவில்லை.

    டாஸ்மாக் தொழிற்சாலைகள் கொடுத்த 49 கோரிக்கைகளில் 39 கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஊதிய பேச்சுவார்த்தை என்பது நிதி துறை உள்பட மற்ற துறைகளையும் ஒப்பிட்டு செய்யவேண்டிய பணி அனைத்து கோரிக்கைகளுக்கும் தீர்த்து வைக்க வேண்டும் என்பது தான் எங்களது எண்ணம்.

    அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் 1045 குளங்களில் 920 குளங்களுக்கு சோதனையோட்டம் முடிக்கப்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தால் மீதமுள்ள குளங்களுக்கு சோதனையோட்டம் செய்ய முடியவில்லை. அடிப்படை கால தாமதத்திற்கு காரணம் திட்டத்தின் முகப்பின் நிலம் கையகப்படுத்தல் செய்யாததாலும் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 26 விவசாயிகள் வீட்டிற்கு சென்று பேசி நிலம் கையகப்படுத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மதுவிலக்கு துறையில் தினமும் ரூ. 10 கோடிக்கு ஊழல் நடந்து கொண்டிருக்கிறது என்ற எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு கூறியுள்ளார். அதுகுறித்து உங்கள் கருத்து என்ன? என்று நிருபர்கள் அமைச்சர் முத்துசாமிடம் கேட்டபோது,

    அதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் முத்துசாமி, 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை பற்றி எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். தமிழகத்தில் சட்டவிரோதமாக மதுபான பார்கள் ஒரு இடத்தில் கூட இல்லை.

    அவ்வாறு இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்க திறந்த மனதோடு தயாராக இருக்கின்றோம் என்றார்.

    • பல இடங்களில் அனுமதி இன்றி மதுக்கடை அருகே பார் செயல்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.
    • சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 3 பார்களை ஆரம்பாக்கம் போலீசார் பூட்டி சீல் வைத்தனர்.

    திருவள்ளூர்:

    விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பெண்கள் உள்பட மொத்தம் 22 பேர் இறந்தனர். இந்த சோகம் நீங்குவதற்குள் தஞ்சாவூர் அருகே மதுகுடித்த 2 பேர் பலியானார்கள். அவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்து இருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பல இடங்களில் அனுமதி இன்றி மதுக்கடை அருகே பார் செயல்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, ஆர்.கே.பேட்டை ஆகிய 7 தாலுகாக்களில் மொத்தம் 137 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன.

    இந்த கடைகளுக்கு, காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள, திருவள்ளூர் மேற்கு மாவட்ட டாஸ்மாக் குடோனில் இருந்து, பீர் வகைகள், மது பானங்கள், தினமும் லாரிகள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன.

    மொத்தம் உள்ள 137 டாஸ்மாக் கடைகளில், 56 கடைகளுக்கு அருகில் மட் டும், 'பார்' நடத்த அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. மீதி உள்ள கடைகளுக்கு அருகில் பார்கள் செயல்பட அனுமதியில்லை. ஆனால் சிலர் அனுமதி இன்றி 'பார்'கள் நடத்தி வருவது விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணைப் போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன் மேற்பார்வையில் போலீசார் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடை அருகில் இயங்கி வந்த பார்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

    திருவள்ளூர் டோல்கேட் அருகில் திருப்பாச்சூர் ஊராட்சியில் செயல்பட்ட மதுபாரில் திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் கமலஹாசன் தலைமையிலான தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். இதில் அந்த பார் அனுமதியின்றி இயங்கி வந்தது தெரிந்தது. இதையடுத்து திருப்பாச்சூர் வி.ஏ.ஓ., லோகநாதன் முன்னிலையில், போலீசார் மற்றும் கலால் துறையினர் அந்த மதுபாருக்கு சீல் வைத்தனர். இதேபோல் தலக்காஞ்சேரி, பெரியகுப்பம் மற்றும் திருவள்ளூர் பஸ் நிலையம் அருகே அனுமதியின்றி இயங்கிய மதுபாருக்கு சீல் வைக்கப்பட்டது.

    பொன்னேரி வெண்பாக்கம் லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு அனுமதி இல்லாமல் செயல்பட்ட 7 பார்களுக்கு கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. கிரியா சக்தி தலைமையில் கலால் தாசில்தார் குமார் துணை வட்டாட்சியர் தேன்மொழி வருவாய் ஆய்வாளர் ஜெயபிரபா முன்னிலையில் பொன்னேரி போலீசார் அனுமதி இல்லாமல் செயல்பட்ட பார்களுக்கு பூட்டு போட்டனர். இதேபோல் கும்மிடிப்பூண்டி, எளாவூர் பகுதியில் உள்ள இரண்டு பார்கள் மற்றும் சுண்ணாம்பு குளத்தில் உள்ள ஒரு பார் உட்பட சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 3 பார்களை ஆரம்பாக்கம் போலீசார் பூட்டி சீல் வைத்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் அனுமதி இன்றி செயல்பட்ட மொத்தம் 71 மதுபார்களுக்கு அதிரடியாக சீல் வைக்கப்பட்டு உள்ளது.

    இவ்வளவு நாட்கள் அனுமதி இன்றி இந்த மதுபார்கள் செயல்பட்டது எப்படி? அதிகாரிகள் உடந்தையாக உள்ளனரா? மதுபார்கள் யாரின் கட்டுப் பாட்டில் செயல்பட்டது என்பது குறித்து போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் அனுமதியின்றி செயல்படும் மதுபார்கள் பற்றிய விபரங்களை சேகரித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 71 மதுபார்கள் ஒரே நாளில் சீல்வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • புத்தாண்டு கொண்டாட்டத்துக்கும் புதுவை தயாராகி வருகிறது.
    • நகர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் உள்ள ஓட்டல், விடுதிகள், ரெஸ்டாரண்டுகளில் அனைத்து அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

    ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை, புத்தாண்டு, பொங்கல் என தொடர் நிகழ்வுகளும் விடுமுறையும் இருப்பது சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க செய்கிறது.

    அதோடு இந்த மாதங்களில் புதுவை குளிர்பிரதேசம் போல் சில்லென்ற குளிர்ந்த காற்றுடன் வரவேற்பது சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் உற்சாகத்தை தருகிறது. இதனால் புதுவை நகரமே சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகிறது.

    புத்தாண்டு கொண்டாட்டத்துக்கும் புதுவை தயாராகி வருகிறது. நகர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் உள்ள ஓட்டல், விடுதிகள், ரெஸ்டாரண்டுகளில் அனைத்து அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டு என்றாலே மது விருந்துதான். பிரெஞ்சு ஆட்சி காலத்தில் இருந்தே மது வகைகளுக்கு புகழ்பெற்ற பகுதியாக புதுவை விளங்குகிறது. விலை குறைவு மட்டுமல்லாது விதவிதமான மதுவகைகள், வெளிநாட்டு மதுபானங்கள் போன்றவை தான் மது பிரியர்களை புதுவையை நோக்கி இழுக்கிறது.

    இதனை கூடுதலாக்கும் நோக்கில் இந்த முறை புத்தாண்டையொட்டி மதுபார்கள் புதுபொலிவாக மாற்றப்பட்டு வருகிறது. பார்களின் உள் அமைப்புகள் மதுபிரியர்களை கவரும் வகையில் மின்னொலியில் ஜொலிக்கின்றன.

    மேலும் வெளிநாடுகளில் இருந்தும் வெளிமாநில மாநிலங்களில் இருந்தும் 50-க்கும் மேற்பட்ட புதிய மதுவகைகள் புதுவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ன.

    ஜப்பானிய விஸ்கி, மெக்சிக்கோ டக்கீலா, லண்டன் ஜின், பிரான்ஸ் ஒயின், இத்தாலி பீர், அமெரிக்கன் ஓட்கா மற்றும் கோவா பென்னி என விதவிதமான மதுவகைகள் வரிசை கட்டி மதுபிரியர்களை வரவேற்க காத்திருக்கிறது.

    மது வகைகளை போல புதிய சைடிஷ்களும் தயாராகியுள்ளன. கடற்கரை பகுதியாக புதுவை இருப்பதால் கடல் உணவுகள், சிக்கன், மட்டன் வகைகள் சிறப்பு சலுகைகளுடன் தயாராகி வருகிறது.

    புதுவையில் 1400 வகையான மதுவகைகள் ஏற்கனவே சந்தையில் உள்ளது. அத்துடன் புத்தாண்டை குறிவைத்து 50 புதிய மதுவகைகள் களத்தில் இறங்கியுள்ளது.

    ×