search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண் சாலை"

    • மண் சாலைகள் தார் சாலைகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • இந்தப்பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் சாலைகள் பல ஆண்டுகளாக மண் சாலைகளாகவே இருந்து வந்தது. நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் பதவியேற்றவுடன் நகரில் அடிப்படை வசதிகள் செய்யப்படும் என்று உறுதியளித்தார். அதன்படி நகராட்சி பகுதியில் உள்ள 93 மண் சாலைகளை ரூ. 653.95 லட்சம் மதிப்பில் தார் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளார். இந்தப்பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    23-வது வார்டில் நடந்து வரும் சாலை பணிகளை நகர் மன்றத்தலைவர் சுந்தரலிங்கம், நகர் மன்ற உறுப்பினர் தனலட்சுமி, நல்லுப்பாண்டி ஆகியோர் பார்வையிட்டனர். 

    • அபிராமம் அருகே சிமெண்டு சாலை அமைத்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • சாலைகள் மண் சாலைகளாக உள்ளதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியம். அபிராமம் அருகே உள்ள உடையநாதபுரம், பள்ளபச்சேரி, அம்பேத்கார் நகர், ஏ. புதூர், அருந்ததியர் காலனி உள்ளிட்ட பகுதிகள் உடையநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியாகும். இங்கு சுமார் 140-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள சாலைகள் மண் சாலைகளாக உள்ளதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

    இதுகுறித்து அம்பேத்கார் நகர் பொதுமக்கள் கூறுகையில், இந்த சாலைகளை சிமெண்டு சாலையாக மாற்றித் தர வேண்டும். தெருவிளக்குகள் கூடுதலாக அமைத்து தர வேண்டும். 2015-16-ம் நிதியாண்டில் கட்டப்பட்ட கழிவறை சேதமடைந்து செயல்படாமல் உள்ளது. அதை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றனர்.

    இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேலுவிடம் கேட்ட போது, இந்த பணிகளுக்கு ஏ.எஸ். கிடைத்தவுடன் பணிகள் தொடங்கும் என்றார்.

    • மழைக்காலங்களில் நடந்து கூட செல்ல முடியாத அவல நிலையில் தான் மக்கள் வாழ்ந்து வந்தனர்.
    • மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க சாலையின் அருகில் வடிகால் வாய்க்காலும் அமைக்கப்பட்டு வருகிறது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கரியாபட்டினம் 1-வது வார்டில் கூட்டுறவு வங்கிக்கு அருகில் வடக்கு நோக்கி செல்லும் சாலை மண்சாலையாக இருந்தது.

    சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் இந்த மண் சாலையை தான் போக்குவரத்துக்கு அப்பகுதி மக்கள்பயன்ப டுத்தி வந்தனர். மழைக்கால ங்களில் சுமார் நான்கடி தண்ணீர் இந்த சாலையில் தேங்கி இருக்கும். இதனால் மழைக்காலங்களில் நடந்து கூட செல்ல முடியாத அவல நிலையில் எப்போது மக்கள் வாழ்ந்து வந்தனர்.இதுகுறித்து அப்பகுதி ஒன்றிய கவுன்சிலர் நடராஜன் பொதுமக்களின் நலன் கருதி வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து ஒருங்கிணைந்த ஒப்படைக்க ப்பட்ட வருவாய் நீரில் இருந்து ரூ. 14 லட்சத்து 27 ஆயிரம் நிதி பெற்று மண் சாலையை தார்சாலையாக போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காாமல் இருக்க சாலையின் அருகில் வடிகால் வாய்க்காலும் அமைக்கப்பட்டு வருகிறது. 75 ஆண்டு காலத்திற்கு பிறகு தார் சாலையை காண போகும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×