search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொடுகுத்தொல்லை"

    • பொடுகு இல்லாத கூந்தல் வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும்.
    • நீங்களும் கூந்தல் அழகியாக சில டிப்ஸ்

    கூந்தல் பராமரிப்பில் பலருக்கும் உள்ள சிக்கல் தங்களின் வறண்ட கூந்தலை எப்படி சரி செய்வது என்பதுதான். குறிப்பாக இந்த வகை கூந்தல் உள்ளவர்களுக்கு முடி எளிதில் உடையும். அதிகமாக உதிரும். முடியில் ஈரப்பதம் நிச்சயம் தேவையான ஒன்று. அதை எப்படி தக்க வைத்துக் கொள்வதென இங்கு பார்ப்போம்.

    எல்லா பெண்களும் அடிக்கடி முடி உதிராத, நீண்ட, பளபளப்பான, பொடுகு இல்லாத கூந்தல் வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். நீங்களும் கூந்தல் அழகியாக சில டிப்ஸ்:

    அவகேடா, தேன் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்ந்த ஹேர் மாஸ்க் வறண்ட கூந்தலுக்கு சிறந்த ஒன்று. இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் மென்மையான பட்டு போன்ற கூந்தல் கிடைக்கும்.

    ஒரு கையளவு வேப்பிலை எடுத்து 4 கப் தண்ணீரில் நன்கு கொதிக்கவிடுங்கள். ஆறியதும் அந்த தண்ணீரால் தலையை அலசி வந்தால் பொடுகு வராமல் தடுக்கலாம். வினிகரை தலையில் தடவி குளித்து வந்தாலும் பொடுகு தொல்லை குறையும்.

    வெந்தயம், வேப்பிலை, கறிவேப்பிலை, பாசிபருப்பு, ஆவாராம் பூ ஆகியவற்றை வெயிலில் காய வைத்து மெஷினில் நன்கு பொடித்துக்கொள்ளுங்கள். இந்த பொடியை ஷாம்புக்கு பதிலாக வாரம் இருமுறை கூந்தலில் தேய்த்து அலசி குளியுங்கள். உங்கள் கூந்தல் பளப்பளக்க தொடக்கிவிடும்.

     ஹேர் டிரையரை அதிகம் உபயோகிக்காதீர்கள். அப்படி செய்தால் தலை வறண்டு, முடியின் வேர்களும் பழுதடைந்து போய்விடும். மேலும், அதிக கெமிக்கல் நிறைந்த ஷாம்பூ, ஹேர் கலர் ஆகியவற்றை பயன்படுத்தாதீர்கள்.

    இரவு படுக்கைக்கு செல்லுமுன் ஆலிவ் ஆயிலை தலையில் தடவி ஊறவிட்டு, மறுநாள் காலையில் குளித்து வந்தால் பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

    தலைக்கு குளித்த பின்னர், ஒரு கப் தண்ணீரில் 1/2 கப் வினிகரை கலந்து தலையில் தேய்த்து அலசவும். பின் அப்படியே துண்டால் தலையில் கட்டிக் கொள்ளவும். 15 நிமிடத்திற்கு ஊற விடுங்கள். பின்பு, பேன் சீப்பால் சீவினால் தலையில் இருக்கும் ஈறு எல்லாம் வந்துவிடும். 2 வாரத்திற்கு ஒருமுறை இப்படி செய்து வந்தாலே போதும். பேன் தொல்லையிலிருந்து முற்றிலும் விடுபடலாம்.

    முட்டையின் வெள்ளைக் கருவை நன்கு அடித்து, தலையில் தேய்த்து ஊறவைத்து, மாதம் 2 முறை அவ்வாறு செய்து குளித்து வந்தால் போதும். கூந்தல் பளபளக்க ஆரம்பித்து விடும்.

    கறிவேப்பிலை, மருதாணி இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் இளநரையை தடுக்கலாம். மாதம் இரு முறை இவ்வாறு செய்தாலே போதும்.

    • பொடுகு இருப்பவர்கள் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் தேய்ப்பதை தவிர்க்க வேண்டும்
    • தலைக்கு குளித்து அழுக்கின்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    பொடுகில் வெளியே வெள்ளை நிறத்தில் உதிரும் வகை மற்றும் மண்டைப்பகுதியில் மெழுகு மாதிரி படிந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத என இரண்டு வகை உண்டு. இவற்றில் உங்களுக்கு எந்தவிதமான பொடுகு என்றாலும் அதில் இருந்து நிவாரணம் பெற எளிய சிகிச்சை ஒன்று உள்ளது.

    நாட்டு மருந்து கடைகளில் பொடுதலைப் பொடி, நீலி அவுரி பொடி இரண்டையும் வாங்கிக் கொள்ளுங்கள். தவிர, ஆலிவ் ஆயில், டீட்ரீ ஆயில் மற்றும் ரோஸ்மெரி ஆயில் போன்றவற்றையும் ஆன்லைனிலோ, கடைகளிலோ வாங்கிக் கொள்ளுங்கள். டீட்ரீ ஆயில் மற்றும் ரோஸ்மெரி ஆயில் இரண்டும் அரோமா ஆயில்கள். இந்த அரோமா ஆயில்களை கலப்பதற்கு தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் தவிர்த்து பாதாம் ஆயில், சூரியகாந்தி ஆயில், ஆலிவ் ஆயில் என எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

     பொடுகுத் தொல்லை இருப்பவர்கள், கூடியவரையில் தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் உபயோகிப்பதைத் தவிர்ப்பது சிறந்தது.

    30 மில்லி ஆலிவ் ஆயிலில் தலா 100 சொட்டு டீட்ரீ ஆயில் மற்றும் ரோஸ்மெரி ஆயில் சேர்க்கவும். சமீபகாலமாக சோஷியல் மீடியாக்களில் பிரபலமாக இருக்கிறது ரோஸ்மெரி ஆயில். பலரும் அதை அப்படியே தலையில் தேய்ப்பதைப் பார்க்கிறோம். அது மிகவும் தவறு. இந்த எண்ணெய்களை தடவிய 20 நிமிடங்களில் தலையில் இறங்கும், மேலும் நேரடியாகத் தடவுவது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் வேறு எண்ணெயுடன் சேர்த்தே உபயோகிக்க வேண்டும்.

    மேற்குறிப்பிட்ட கலவையில் தயாரித்து ஒரு பாட்டிலில் நிரப்பி வைத்துக்கொள்ளுங்கள். முதல்நாள் தலைக்குக் குளித்து அழுக்கின்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மறுநாள், நீங்கள் கலந்து வைத்துள்ள எண்ணெயில் சிறிது எடுத்து, பஞ்சில் நனைத்து தலையில் தடவி, அரை மணி நேரம் ஊறவிடவும். முடியில் தடவ வேண்டிய அவசியமில்லை. பிறகு தலைமுடியை நன்கு வாரிவிடவும். இந்த கலவையை சூடுபடுத்தக் கூடாது.

     பொடுதலைப் பொடியையும் நீலி அவுரிப் பொடியையும் சம அளவு எடுத்து, புளித்த மோரிலோ, ஆப்பிள் சைடர் வினிகரிலோ (தண்ணீர் கலந்தது) கலந்துகொள்ளவும். எண்ணெய் தடவிய தலையில் இந்த கலவையை பிரஷ் அல்லது விரல்களின் உதவியோடு தடவ வேண்டும். பிறகு, பெரிய பற்கள் கொண்ட சீப்பால் தலையை வாரிவிடவும். இந்த கலவையையும் முடியில் தடவ வேண்டியதில்லை. தலைப்பகுதியில் மட்டும் தடவினால் போதும்.

    45 நிமிடங்கள் கழித்து மைல்டான ஷாம்பூ உபயோகித்து அலசவும். வாரம் இரண்டு முறை இப்படி செய்யலாம். ஏழெட்டு முறை செய்தாலே பொடுகு குறைந்து, முடி ஆரோக்கியமாக மாறுவதை உணர்வீர்கள்.

    ×