என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "oil massage"
- வாரத்திற்கு ஒரு முறை டைட்டனிங் ஃபேஷியல் செய்ய வேண்டும்.
- டைட்டனிங் மாஸ்க்கை பெண்கள் வீட்டிலேயே தயாரிக்க முடியும்.
உடல் எடையை குறைத்தாலே உடலில் உள்ள கொழுப்புகள் அனைத்தும் குறைந்து முகம், கை, கழுத்து, கைவிரல் போன்ற பகுதிகளில் சுருக்கங்கள் தோன்றும். இதனை போக்குவதற்கு வாரத்திற்கு ஒரு முறை டைட்டனிங் ஃபேஷியல் செய்ய வேண்டும்.
இந்த டைட்டனிங் மாஸ்க்கை பெண்கள் வீட்டிலேயே தயாரிக்க முடியும். முட்டையின் வெள்ளைக்கரு, முல்தானிமட்டி, தேன் மூன்றையும் ஒன்றாக கலந்து முகத்தில் தேய்த்து வந்தாலே போதும். வறண்ட சருமமாக இருந்தால் பால் சேர்த்துக்கொள்ளலாம்.
டைட்டனிங் மாஸ்குகளும், ரைட்டனின் ஃபேஷியல்களும் சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்க உதவுகின்றன. சருமத்தின் அழகை பாதுகாக்க கார்போ ஹைட்ரேட், புரோட்டின், வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்பு போன்ற உணவுகள் தேவை.
முட்டைக்கோஸ், வெள்ளரிக்காய், கீரை வகைகள், முளைவிட்ட பயறு வகைகள் போன்றவை சருமத்திற்கு இளமையையும், மினுமினுப்பையும் தரும். அதோடு மட்டுமில்லாமல் தினமும் 10 டம்ளர் தண்ணீர் குடித்து வந்தாலும் வறண்ட சருமம் சுருக்கம் இல்லாமல் பொலிவாக இருக்கும்.
புரோட்டின் கலந்த உணவுகளை எடுத்துக்கொள்வது மட்டுமல்லாமல் ஆயில் மசாஜ், ஹென்னா, ஸ்பா சிகிச்சைகளும் செய்வது சருமத்திற்கும், கூந்தலுக்கும் நல்லது. பெண்கள் டீன் ஏஜ் வயதில் இருந்தே உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
- பொடுகு இருப்பவர்கள் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் தேய்ப்பதை தவிர்க்க வேண்டும்
- தலைக்கு குளித்து அழுக்கின்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பொடுகில் வெளியே வெள்ளை நிறத்தில் உதிரும் வகை மற்றும் மண்டைப்பகுதியில் மெழுகு மாதிரி படிந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத என இரண்டு வகை உண்டு. இவற்றில் உங்களுக்கு எந்தவிதமான பொடுகு என்றாலும் அதில் இருந்து நிவாரணம் பெற எளிய சிகிச்சை ஒன்று உள்ளது.
நாட்டு மருந்து கடைகளில் பொடுதலைப் பொடி, நீலி அவுரி பொடி இரண்டையும் வாங்கிக் கொள்ளுங்கள். தவிர, ஆலிவ் ஆயில், டீட்ரீ ஆயில் மற்றும் ரோஸ்மெரி ஆயில் போன்றவற்றையும் ஆன்லைனிலோ, கடைகளிலோ வாங்கிக் கொள்ளுங்கள். டீட்ரீ ஆயில் மற்றும் ரோஸ்மெரி ஆயில் இரண்டும் அரோமா ஆயில்கள். இந்த அரோமா ஆயில்களை கலப்பதற்கு தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் தவிர்த்து பாதாம் ஆயில், சூரியகாந்தி ஆயில், ஆலிவ் ஆயில் என எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
பொடுகுத் தொல்லை இருப்பவர்கள், கூடியவரையில் தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் உபயோகிப்பதைத் தவிர்ப்பது சிறந்தது.
30 மில்லி ஆலிவ் ஆயிலில் தலா 100 சொட்டு டீட்ரீ ஆயில் மற்றும் ரோஸ்மெரி ஆயில் சேர்க்கவும். சமீபகாலமாக சோஷியல் மீடியாக்களில் பிரபலமாக இருக்கிறது ரோஸ்மெரி ஆயில். பலரும் அதை அப்படியே தலையில் தேய்ப்பதைப் பார்க்கிறோம். அது மிகவும் தவறு. இந்த எண்ணெய்களை தடவிய 20 நிமிடங்களில் தலையில் இறங்கும், மேலும் நேரடியாகத் தடவுவது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் வேறு எண்ணெயுடன் சேர்த்தே உபயோகிக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட கலவையில் தயாரித்து ஒரு பாட்டிலில் நிரப்பி வைத்துக்கொள்ளுங்கள். முதல்நாள் தலைக்குக் குளித்து அழுக்கின்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மறுநாள், நீங்கள் கலந்து வைத்துள்ள எண்ணெயில் சிறிது எடுத்து, பஞ்சில் நனைத்து தலையில் தடவி, அரை மணி நேரம் ஊறவிடவும். முடியில் தடவ வேண்டிய அவசியமில்லை. பிறகு தலைமுடியை நன்கு வாரிவிடவும். இந்த கலவையை சூடுபடுத்தக் கூடாது.
பொடுதலைப் பொடியையும் நீலி அவுரிப் பொடியையும் சம அளவு எடுத்து, புளித்த மோரிலோ, ஆப்பிள் சைடர் வினிகரிலோ (தண்ணீர் கலந்தது) கலந்துகொள்ளவும். எண்ணெய் தடவிய தலையில் இந்த கலவையை பிரஷ் அல்லது விரல்களின் உதவியோடு தடவ வேண்டும். பிறகு, பெரிய பற்கள் கொண்ட சீப்பால் தலையை வாரிவிடவும். இந்த கலவையையும் முடியில் தடவ வேண்டியதில்லை. தலைப்பகுதியில் மட்டும் தடவினால் போதும்.
45 நிமிடங்கள் கழித்து மைல்டான ஷாம்பூ உபயோகித்து அலசவும். வாரம் இரண்டு முறை இப்படி செய்யலாம். ஏழெட்டு முறை செய்தாலே பொடுகு குறைந்து, முடி ஆரோக்கியமாக மாறுவதை உணர்வீர்கள்.
- பிரசவத்திற்கு பின் வரும் தழும்புகள் தவிர்க்க முடியாதது.
- தழும்புகள் குறித்த கவலை பெரும்பாலான பெண்களுக்கு இருக்கிறது.
பிரசவ தழும்புகள் மறைய பிரசவத்திற்கு பின் வரும் தழும்புகள் தவிர்க்க முடியாதது எல்லா பெண்களுக்கும் அது ஏற்படும். கர்ப்ப காலத்தில் குழந்தை உள்ளே வளர்வதற்காக உடல் வேகமாக வளர்ந்து விரிவடையும். அதே சமையம் குழந்தை பிறந்தவுடன் வயிற்றில் இருந்த இறுக்க தன்மை குறைந்து தோல் சுருக்கமாகவோ அல்லது வயிற்றில் தழும்புகள் ஏற்பட்டது போலவோ காணப்படும்.
இந்த தழும்புகள் குறித்த கவலை பெரும்பாலான பெண்களுக்கு இருக்கிறது. கவலை வேண்டாம் இந்த தழும்புகளை சில எளிய வழிகள் மூலம் சரி செய்யலாம்.
பிரசவத்திற்கு பின் வயிற்றில் தழும்பு மறைய கொஞ்சம் ஆயிலை எடுத்து மெதுவாக வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் தடவுங்கள். அதாவது உள்ளங்கையில் சிறிதளவு எண்ணெயை எடுத்து வயிற்றில் ஒரு பகுதியில் இரண்டு நிமிஷம் வரை மசாஜ் செய்ய வேண்டும்.
அதன் பிறகு இதே மாதிரி அடுத்த பகுதியிலும் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு மசாஜ் செய்யும் போது ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். இதனால் செல்கள் வேகமாக செயல்பட ஆரம்பிக்கும். தழும்புகள் சீக்கிரமாக மறைய ஆரம்பிக்கும்.
யோகா
பிரசவ தழும்புகள் மறைய யோகா மற்றும் உடற்பயிற்சிகள் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது. அதாவது வாக்கிங், யோகா போன்ற லேசான பயிற்சிகள் கூட இடுப்பு, தொடை மற்றும் வயிற்றுப் பகுதிகளில் இருக்கும் தசைகளை வலுப்படுத்தும். தசைகள் வலுவானால் தளர்ந்து போன சருமம் சரியாகி விரைவில் குணமாகும்.
முட்டை:
பிரசவ தழும்புகள் மறைய முட்டையின் வெள்ளைக்கருவில் புரோட்டீன், பொட்டாசியம், ரிபோஃப்ளேவின் மற்றும் மெக்னீஷியம் போன்ற நன்மை செய்யும் ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் பிரசவ தளும்புகளை போக்க உதவியா இருக்கின்றன.
ஒரு முட்டையின் வெள்ளை கருவை எடுத்து தனியாக அடித்து ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளவும். பின்பு இளஞ்சூடான தண்ணீரை கொண்டு தழும்புகள் மற்றும் சுருக்கங்கள் உள்ள இடத்தில் நன்கு துடைத்து விட்டு. அடித்து வைத்துள்ள முட்டையின் வெள்ளை கருவை தழும்புகள் உள்ள இடத்தில் அப்ளை செய்யுங்கள்.
அதன்பிறகு 15 முதல் 20 நிமிடங்கள் வரை வரை அப்படியே வைத்திருக்கவும். பின்னர் இளஞ்சூடான தண்ணீரை கொண்டு கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரன்டு அல்லது மூன்று முறை செய்து வர பிரசவத் தழும்புகள் மறைய ஆரம்பிக்கும்.
கற்றாழை:
பிரசவ தழும்புகள் மறைய கற்றாழை ஜெல்லை எடுத்து தேரடியாக தழும்புகள் இருக்கும் பகுதியில் தடவினால் நாளடைவில் தழும்புகள் மறைந்து விடும். கற்றாழை சருமத்தை மென்மைப்படுத்தும்.
தேன்:
பிரசவத் தழும்புகள் மறைய சுத்தமான மலை தேனை எடுத்து தழும்புகள் உள்ள இடத்தில் அப்ளை செய்யுங்கள். தேன் நன்கு காய்ந்தவுடன் இளஞ்சூடான தண்ணீரில் கழுவினால் சீக்கிரமாக பிரசவ தழும்புகள் மறைய ஆரம்பிக்கும்.
திராட்சை எண்ணெய்:
இந்த எண்ணெயில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. ஆகவே சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும் அதுமட்டுமல்லாமல் திராட்சை எண்ணெயில் மசாஜ் செய்தால் சரும தளர்ச்சி நீங்குவதோடு ஏதேனும் தழும்புகள் இருந்தால் நாளடைவில் மறைந்துவிடும். முகம் நன்கு பொலிவோடு இருக்கும். எந்த வயதிலும் இளமையாக இருக்க விரும்புபவர்கள் இந்த மசாஜை செய்தால் முகச் சுருக்கம் நீங்கி இளமையாக தெரிவீர்கள்.
நல்லெண்ணெய்:
உடலுக்கு செய்யும் மசாஜிற்கு பயன்படுத்தும் எண்ணெயில் மிகவும் சிறந்தது நல்லெண்ணெய் தான். சில நேரங்களில் எண்ணெய் மசாஜ் பருக்களை ஏற்படுத்தும். ஆனால் நல்லெண்ணெயை பயன்படுத்தினால் எந்த ஒரு பிரச்சனையும் வராது. இந்த எண்ணெய் சருமத்தில் ஏற்படும் பருக்களை நீக்கி விடும். எனவே ஆயில் மசாஜ் செய்து உங்கள் இளமையை தக்க வைத்துக் கொள்வது உங்கள் கையில் தான் இருக்கிறது.
தேங்காய் எண்ணெய்: கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்கு தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.
கடுகு எண்ணெய்: மூட்டு வலி, நடுக்கம் மற்றும் சோம்பல் போன்றவைக்கு நிவாரணம் கிடைக்கும். மேலும் உலர்ந்த சருமத்திற்கு, தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.
தொப்புளில் எண்ணெய் வைப்பதால் நரம்புகள் வறண்டு போயிருந்தால் இந்த எண்ணெய் அந்த நரம்புகள் வழியாக சென்று அவற்றை திறக்கும்.
ஒரு குழந்தைக்கு வயிற்றுவலியின் போது, சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவி விடுவார்கள். நிமிடங்களில் வலி குணமாகும். அதே வழியில் தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும்.
தொப்புளில் வைப்பதன் மூலம் நிறைய நன்மைகள் கிடைக்கும். இந்த செயலால் உள்ளுறுப்புக்களின் அபாயம் தடுக்கப்படுவதோடு, உடலில் உள்ள அதிகப்படியான வாய்வுத்தொல்லையும் சரியாகும்.
சளி பிடித்தவர்கள், தினமும் இரவில் தொப்புளில் தேங்காய் எண்ணெய் வைத்தால் விரைவில் சரியாகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்