search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொங்கல் பண்டிகை"

    • நொய்யல் ஆற்றங்கரையோரம் சமத்துவ பொங்கல் விழா நடத்தப்பட்டது.
    • பல்லாங்குழி, தாயம், பரமபதம் போன்ற விளையாட்டுகளும் நடைபெற்றது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி நொய்யல் பண்பாட்டு அமைப்பு மற்றும் ஜீவநதி நொய்யல் சங்கம் சார்பாக திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வளர்மதி பாலம் அருகே உள்ள நொய்யல் ஆற்றங்கரையோரம் சமத்துவ பொங்கல் விழா நடத்தப்பட்டது. 3 நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முதல் 2 நாட்கள் மாலை நேரத்தில் பல்வேறு தமிழ் பாரம்பரிய கலாச்சார கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது .

    அதனை தொடர்ந்து 3-வது நாளான இன்று திருப்பூர் நொய்யல் ஆற்றங்கரையோரம் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளை சேர்ந்த 1000 பெண்கள் கலந்து கொண்டு வைக்கக்கூடிய சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டனர். நொய்யல் நதிக்கரை யோரம் அடுப்புகளை பற்ற வைத்து பொங்கலிட்டனர். பால் பொங்கும் போது குலவையிட்டனர்.


    இதைத்தொடர்ந்து மகிழ்ச்சியான ஞாயிறு கொண்டாட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் உள்ளூர் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பரதநாட்டியம், சிலம்பம், பானை உடைத்தல், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற நிகழ்ச்சிகளும், குழந்தைகளுக்கான பாரம்பரிய விளையாட்டுக்களான நொண்டி, பல்லாங்குழி, தாயம், பரமபதம் போன்ற விளையாட்டுகளும் நடைபெற்றது.

    மேலும் கேரம், செஸ், கைகளில் மெகந்தி வரைதல் , சலங்கையாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாநகரை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் என பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனால் நொய்யல் பகுதியானது பொதுமக்களின் ஆட்டம் பாட்டத்தால் களை கட்டியது. சமத்துவ பொங்கல் தொடக்க விழாவில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், கலெக்டர் கிறிஸ்துராஜ், மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார், மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு உள்ளிட்டோர் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து கலந்து கொண்டு பொங்கல் விழாவினை தொடங்கி வைத்தனர்.

    • நீடாமங்கலத்தில் கரும்பு விற்பனை மும்முரம் நடை பெற தொடங்கி உள்ளது.
    • ஒரு கட்டு கரும்பு ரூ. 250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    திருவாரூர்:

    பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாள் என்றாலே செங்கரும்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

    பொங்கலுக்கு இன்னும் 4நாட்களே இருப்பதால் கரும்பை விவசாயிகள் அறுவடை செய்து விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி திருவாரூர் மாவட்டம் ஆதனூர், நெடுவாக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நீடாமங்கலத்தில் கரும்பு கடைகள் அமைத்து கரும்பு விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒரு கட்டு கரும்பு ரூ. 250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் இஞ்சி, மஞ்சள் கொத்துக்கள், மண்பாண்டங்கள் விற்பனையும் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

    • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
    • மதுரையில் இருந்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை

    பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழகம் முழுவதும் வசித்துவரும் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

    எனவே பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அதன்படி மதுரையில் இருந்தும் சிறப்பு பஸ்கள் வருகிற 12-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.

    சென்னையில் மதுரைக்கு 280 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இது தவிர திருச்சிக்கு 135, திருப்பூ ருக்கு 80, கோவைக்கு 120, நெல்லைக்கு 35, நாகர்கோவி லுக்கு 35, திருச்செந்தூருக்கு 30, மற்றவை 175 உள்பட 610 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதேபோல பொது உள்ளது.

    இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதனை பொது மக்கள் பயன்படுத்தி பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளலாம்.

    பயணிகளுக்கு வழிகாட்ட வும், சிறப்பு பஸ்களை கண்காணிக்கவும், முக்கிய பஸ் நிலையங்களில் போக்குவரத்து கழக அலு வலர்கள், பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் மற்றும் பயண சீட்டு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    • குமரி மாவட்ட மக்கள் சமையலுக்கு அதிக அளவில் தேங்காய் பயன்படுத்தி வருகிறார்கள்.
    • தேங்காய் விளைச்சல் கடந்த 10 ஆண்டில் தற்போது வெகுவாக குறைந்துள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தேங்காய் முக்கிய உணவு பயிராக உள்ளது. இங்கு தென்னந்தோப்புகள் அதிகம் உள்ளன. அதிலும் ஈத்தாமொழி தோங்காய் என்றால் மவுசு அதிகம். இங்குள்ள உயரமான தென்னை மரங்கள் குமரியின் பாரம்பரிய சிறப்பிற்கு ஓர் அடையாளமாக விளங்குகிறது. அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம், ஈத்தாமொழி மற்றும் குளச்சல் போன்ற பல்வேறு பகுதிகளில் இந்த பூர்வீக வகை தென்னைமரங்கள் காணப்படுகின்றன.

    குமரி மாவட்ட மக்கள் சமையலுக்கு அதிக அளவில் தேங்காய் பயன்படுத்தி வருகிறார்கள். மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தேங்காய் விலை உயர்ந்து காணப்படுகிறது. கடந்த மாதம் வரை தேங்காய் ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.23-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு கிலோ தேங்காய் மொத்த விற்பனைக்காக வியாபாரிகளிடம் ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. சந்தைகளில் கிலோ ரூ.35 க்கு விற்பனையாகிறது. இதனால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதுபற்றி ஈத்தாமொழியை சேர்ந்த தேங்காய் மொத்த வியாபாரி முத்துசரவணன் கூறியதாவது:-

    தேங்காய் விளைச்சல் கடந்த 10 ஆண்டில் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. முன்பு ஒரு எக்டருக்கு 250 தென்னைகள் பயிரிட்டால் அதில் சுமார் 5 ஆயிரம் தேங்காய் வரை கிடைக்கும். தற்போது அதே 250 தென்னைகளில் இருந்து சுமார் 1000 முதல் 1,500 தேங்காய்கள் மட்டுமே கிடைக்கிறது. தற்போது பனி காலம் என்பதால் விளைச்சல் மிகவும் குறைந்துள்ளது. மேலும் பொங்கல் பண்டிகை வருவதால், தேங்காய் விலையும் உயர்ந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×