search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரியார் பிறந்தநாள்"

    • ஓ. பன்னீர்செல்வம் கூறும்போது, பெரியார் எல்லோருக்கும் பொதுவானவர்.
    • இரு தரப்பினர் மத்தியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    சென்னை:

    சென்னை அண்ணா சாலையில் பெரியார் பிறந்த நாளையொட்டி இன்று அவரது சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதற்காக அவரது ஆதரவாளர்கள் அண்ணா மேம்பாலத்துக்கு கீழே உள்ள பெரியார் சிலைக்கு அருகில் அவரது புகைப்படத்தை வைத்து மரியாதை செலுத்தினர்.

    ஓ. பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தி விட்டு சென்ற பின்னர் அங்கு அ.தி.மு.க. வினர் வந்தனர். ஓ.பி.எஸ் அணியினர் வைத்த பெரியார் படத்துக்கு மரியாதை செலுத்த மறுத்து விட்டனர். இதையடுத்து வேறு ஒரு பெரியார் படத்தை அ.தி.மு.க.வினர் அலங்கரித்து வைத்தனர். இந்த படத்துக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

    இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது யாரோ வைத்த புகைப்படத்துக்கு நாங்கள் எப்படி மரியாதை செலுத்த முடியும் என்று தெரிவித்தார். ஓ. பன்னீர்செல்வம் கூறும்போது, பெரியார் எல்லோருக்கும் பொதுவானவர். இதில் பாகுபாடு பார்க்கக்கூடாது என்றார். இதன் காரணமாக இரு தரப்பினர் மத்தியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    • தாம் எண்ணியவை எல்லாம் சட்டவடிவம் பெறுவதைப் பார்த்துவிட்டே மறைந்த பெருமை அவருக்கே உரித்தானது!
    • பெண் விடுதலைக்காகவும், சமத்துவச் சமுதாயத்துக்காகவும் நாம் இன்று தீட்டும் திட்டங்களுக்கெல்லாம் அடிப்படை பெரியாரியலே!

    சென்னை:

    தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

    அவர் வாழ்வே ஓர் அரசியல் தத்துவம்! மொழி, நாடு, மதம் போன்றவற்றைக் கடந்து-மனிதநேயத்தையும் சுய மரியாதையையும் அடிப்படையாகக் கொண்ட அரசியலை வலியுறுத்திய மாபெரும் சீர்திருத்தவாதி அவர். தாம் எண்ணியவை எல்லாம் சட்டவடிவம் பெறுவதைப் பார்த்துவிட்டே மறைந்த பெருமை அவருக்கே உரித்தானது!

    பெண் விடுதலைக்காகவும், சமத்துவச் சமுதாயத்துக்காகவும் நாம் இன்று தீட்டும் திட்டங்களுக்கெல்லாம் அடிப்படை பெரியாரியலே! அண்ணா, கலைஞர் ஆகியோரின் ஆட்சியைப் போன்றே இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சியும் எம் தந்தை பெரியாருக்கே காணிக்கை!

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

    • திருமங்கலத்தில் பெரியார் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
    • இதனைத்தொடர்ந்து சமூக நீதி நாள் உறுதிமொழி ஏடுத்துக்கொண்டனர்.

    திருமங்கலம்

    பெரியாரின் 144-ம் ஆண்டு பிறந்தநாளையொட்டி திருமங்கலத்தில் உள்ள அவரது சிலைக்கு தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் தி.மு.க. வினர் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முத்து ராமலிங்கம், சாமிநாதன், நகரச் செயலாளர் ஸ்ரீதர், நகர சபை தலைவர் ரம்யா முத்துக்குமார், ஒன்றிய செயலாளர்கள் தனபாண்டி, ராமமூர்த்தி, ஜெயசந்திரன், கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், அணி அமைப்பாளர்கள் மதன், பாசபிரபு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அதிமுக சார்பில் நகர செயலாளர் விஜயன், ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதனைத் தொடர்ந்து சமூக நீதி நாள் உறுதிமொழி ஏடுத்துக்கொண்டனர். இதில் வர்த்தக அணி மாவட்ட செயலாளர் சதீஷ்சண்முகம், நிர்வாகிகள் பாண்டி, சிவனாண்டி, உச்சப்பட்டி செல்வம், வழக்கறிஞர்கள் முத்துராஜா, வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அ.ம.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் மகேந்திரன், நகர செயலாளர் வைரன், ம.தி.மு.க. நகர செயலாளர் அனிதா பால்ராஜ், அவைத்தலைவர் சிவனாண்டி, பொருளாளர் முருகன், இளைஞர் அணி துணைச் செயலாளர் ராஜகோபால், நகர துணை செயலாளர் மாரிசாமி, விவசாய அணி துணைச் செயலாளர் காசி ஆகியோரும் பெரியார் சிலைக்கு மாைல அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • தமிழ்நாடு அரசின் சார்பில் தந்தை பெரியாரின் 144-வது பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.
    • சிம்சன் அருகில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து, அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.

    சென்னை:

    தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

    மேலும், அவரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாகக் கடந்த ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு, அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழியும் எடுக்கப்பட்டு வருகிறது.

    தமிழ்நாடு அரசின் சார்பில் தந்தை பெரியாரின் 144-வது பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசின் சார்பில், தந்தை பெரியார் 144-வது பிறந்தநாளினை முன்னிட்டு, 17-ந் தேதி காலை 9 மணியளவில், அண்ணா சாலை, சிம்சன் அருகில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து, அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டு உள்ள அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.

    ×