search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் பாதுகாப்பு"

    • பிளாஸ்டிக் பொருட்களை அடுப்பின் அருகில் வைத்திருக்கக்கூடாது.
    • சமைக்கும்போது, நைலக்ஸ் புடவை கட்டிக்கொ ண்டு சமைக்கக் கூடாது.

    வீட்டில் பெண்கள் அதிகமாக நேரத்தை செலவிடும் இடம் சமையலறை. பரபரப்பாக சமையல் செய்வது, மற்ற வேலைகளை முடித்த களைப்போடு சமையல் வேலைகளில் ஈடுபடுவது என அவர்கள் மேற்கொள்ளும் வேலைக்கு ஏற்றவாறு, அந்த அறையின் அமைப்பு மற்றும் வசதிகள் இருக்கவேண்டும்.

    தண்ணீர், மின்சாரம், நெருப்பு இவை மூன்றையும் ஒன்றாக பயன்படுத்தும் இடம் என்பதால், சமையல் அறையில் பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியமானது. அதைப் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.:-

    பெரும்பாலான வீடுகளில் 'டை ல்ஸ்' பதிக்கப்பட்ட தரை உள்ளது. இதில், எந்த வகையான திரவங்கள் சிந்தினாலும் எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது. எதிர்பாராமல், அதில் கால் வைக்க நேர்ந்தால் வழுக்கி விழும் அபாயம் உள்ளது. எனவே , கீழே சிந்தும் திரவங்களை அவ்வப்போ து துடைத்து, சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கண்ணாடி பாட்டில்கள் ஏதேனும் உடைந்தால், அதைத் துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.

    தீ அணைக்கும் கருவி:

    சமையல் அறையில், சிறிது கவனக்குறைவாக இருந்தாலும், பர்னர்கள் அல்லது பிளம்பீட் டெசர்ட் ஆகியவற்றில் இருந்து தீப்பிழம்புகள் வந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. சமைக்கும் பாத்திரத்தில் திடீரென தீப்பற்ற நேர்ந்தால், அதில் தண்ணீர் ஊற்றக் கூடாது. இது தீயை மேலும் அதிகரிக்கக்கூடும்.

    பாத்திரத்தை ஒரு தட்டை போட்டு மூடி, அதன் மீது சிறிது பேக்கிங் சோடாவைப் போடலாம். இதனால், தீ உடனடியாக கட்டுக்குள் வரும். சமையல் அறையில், தீயணைக்கும் கருவியை வைத்திருப்பதும், அதைக்கையாளத்தெரிந்திருப்பதும் அவசியம்.

    சமையல் உபகரணங்கள்:

    கத்தி, அரிவாள், அரிவாள்மனை போன்ற கூர்மையான பொருட்களை சமையல் அறையின் பாதுகாப்பான இடத்தில் வைத்துப் பயன்படுத்த வேண்டும்.

    பாத்திரங்களில் திருகுகள் உள்ள கைப்பிடிகள் தளர்வாக இருப்பதைக் கவனித்து உடனே அவற்றை சரி செய்வதன் மூலம், விபத்துகளைத் தவிர்க்கலாம்.

    தினசரி கவனம்:

    தினமும் இரவில் குக்கரின் கேஸ்கட், வெயிட் முதலிய வற்றை நன்றாக சுத்தம் செய்வதுடன், குக்கர் மூடியில் உள்ள சேப்டி வால்வையும் சரிபார்ப்பது அவசியம். அடுப்பை அணைப்பதோடு, எரிவாயு சிலிண்டரையும் மூடிய பின்னரே சுத்தம் செய்ய வேண்டும். குழம்பு தாளிக்கும் போது, குமிழ் வைத்த மூடியால் மூடியபடி தாளித்தால், கடுகு போன்ற பொருட்கள் தெறித்து விழுந்து சூடுபடாமல் இருக்கும்.

    சமைக்கும்போது, நைலக்ஸ் புடவை கட்டிக்கொ ண்டு சமைக்கக் கூடாது. இது எளிதில் தீப்பிடிக்கும் தன்மை கொண்டது. மேலும், குழந்தைகள் அடுப்பிறகு அருகில் சென்று கேஸ் குழாய்களை திருப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    பிளாஸ்டிக் பொருட்களை அடுப்பின் அருகில் வைத்திருக்கக்கூடாது. இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு ரெகுலேட்டரும், அடுப்பின் வால்வும் மூடி உள்ளதா என்பதை சரி பார்ப்பது அவசியம். பாத்திர அலமாரிகளோ , மற்ற பொருட்களோ அடுப்பிற்கு மேல் பகுதியில் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அதை எடுக்க முயலும் போது, ஆடையில் தீப்பிடிக்கும் வாய்ப்புள்ளது. ஆடையில் நெருப்பு பற்றினால், உடனே உடலைச்சுற்றி கம்பளியை போர்த்தி, நெருப்பை அணைக்கலாம்.

    • வீட்டில் உள்ளவர்களின் உடல் நலத்தை பாதுகாக்க சிம்னியை சுத்தம் செய்வது எவ்வளவு அவசியம் என்பது புரியும்.
    • சமையலறை சுவர்களை அழகாக வைத்திருக்க உதவும் சிம்னியை சுத்தம் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

    வீட்டின் மற்ற அறைகளைக் காட்டிலும் சமையலறை சுவறில் வேகமாக கறை படிவதற்கு வாய்ப்பு அதிகம். காரணம், புகை மற்றும் நீராவி. சமைக்கும் போது உருவாகும் புகை மற்றும் நீராவியை சிறப்பாக வெளியேற்றி, சுவர்களின் வண்ணத்தை பாதுகாக்கும் கருவி சிம்னி. அதுமட்டும் அல்ல மிளகாய் நெடியால் வீட்டில் உள்ளவர்களுக்கு இருமல் தும்மல் ஏற்படாமல் காப்பாற்றுவதும் சிம்னி தான். மற்ற வீட்டு உபயோக கருவிகளை சுத்தம் செய்வது போல இதையும் சுத்தம் செய்வது அவசியம். சமையலறை சுவர்களை அழகாக வைத்திருக்க உதவும் சிம்னியை சுத்தம் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

    சமைக்கும் போது உருவாகும் புகை மற்றும் நீராவியை வெளிவேற்றுவது தான் சிம்னியின் வேலை. இவற்றை வெளியேற்றும் போது புகை மற்றும் நீராவியில் இருக்கும் நீர்த்துளிகள், கரி துகள்கள், எண்ணெய் பிசுபிசுப்பு இவை சிம்னியில் உள்ள நுண்ணிய துளைகள் கொண்ட பல அடுக்கு வலைகளில் வடிகட்டப்படும். இப்படி சேரும் இந்த அழுக்கினால் இரண்டு தீமைகள் நேரும். ஒன்று, நோய் கிருமி மற்றும் பூஞ்சை காளான் உருவாகும். இதனால் வீட்டில் உள்ள வயதானவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. இரண்டு, சிம்னி வழியாக புகை வெளியேறுவது தடைபடும். வீட்டில் உள்ளவர்களின் உடல் நலத்தை பாதுகாக்க சிம்னியை சுத்தம் செய்வது எவ்வளவு அவசியம் என்பது புரியும்.

    சரி, எத்தனை நாட்களுக்கு ஒரு முறை சிம்னி சுத்தம் செய்ய வேண்டும்?

    பொதுவாக 2 மாதத்திற்கு ஒரு முறை சிம்னியில் உள்ள வடிகட்டும் வலைகளை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு வேலை நீங்கள் அதிகம் எண்ணெய் மற்றும் கார சாரமான உணவு வகைகளை அடிக்கடி சமைப்பவராக இருந்தால், மாதம் ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். நீங்கள் சார்க்கோள் பில்டர் சிம்னி பயன்படுத்தினால் 6 மாத்திற்கு ஒரு முறை பில்டரை மாற்ற வேண்டும். இனி சிம்னியை எப்படி சுத்தம் செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.

    சிம்னியை சுத்தம் செய்ய அதை அக்கு வேறு ஆணி வேறாக பிரிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சிம்னியில் உள்ள வடிகட்டிகள், வலைகள், தட்டைகள் மற்றும் அதன் மூடி இவற்றை சுத்தம் செய்தால் போதும். நீங்கள் எந்த பாகத்தை சுத்தம் செய்கிறீர்கள் என்பதை பொறுத்து தேவைபடும் பொருட்கள் மாறுபடும். சிம்னியின் மூடியை சுத்தம் செய்கிறீர்கள் என்றால் வினிகர் மற்றும் பேக்கிங் சோடா தேவைப்படும். பில்டர் சுத்தம் செய்ய வேண்டுமானால், அதில் உள்ள கரையின் அளவை பொறுத்து சுத்தம் செய்யும் பொருட்கள் வேறுபடும். ஓரளவு கரை இருந்தால் பாத்திரம் துலக்க பயன்படும் லிக்விட் போதும். விடாப்பிடியான கரை இருந்தால் பெயிண்ட் தின்னெர் தேவைபடும். மூடியை சுத்தம் செய்வதை பார்ப்போம்.

    மூடியை சுத்தம் செய்ய வினிகர் பயன்படுத்தலாம். முதலில் டவல்/பேப்பரால் வினிகரில் நன்றாக நனைத்து மூடியின் மூளை முடுக்கெல்லாம் தடவுங்கள். இரண்டு நிமிடம் அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு சுத்தமான நீரில் ஒரு துணியை நனைத்து நன்றாக அழுத்தி துடையுங்கள். மூடி மேல் படிந்த கறை அகன்று விடும். இன்னும் கறை போகாமல் இருந்தால் 2 ஸ்பூன் பேக்கிங் சோடா பவுடரில் தேவையான அளவு நீர்/வைட் வினிகர் சேர்த்து மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்டை மூடி மீது தடவி 5 நிமிடம் கழித்து ஈர துணியால் துடைத்து விடுங்கள். இப்போது மூடி நன்றாக சுத்தம் ஆகியிருக்கும்.

    பில்டர் மாறும் வலைகளை சுத்தம் செய்ய உங்களுலுக்கு ஒரு டப் தேவைப்படும். முதலில் 2 கப் வினிகர், 2-3 ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் சிறிது உப்பு தூவுங்கள். டப்பில் சூடு நீர் ஊற்றி நிரப்புங்கள். பில்டர் மற்றும் வலைகளை அதில் முழ்கச் செய்யுங்கள். 2 மணி நேரம் அப்படியே விடுங்கள். பிறகு வெளியே எடுத்தது சுத்தமான நீரால் நன்றாக துடையுங்கள். இன்னும் கறை மற்றும் பிசுபிசுப்பு உள்ளதா? கவலை வேண்டாம். இப்பொது பில்டர் மற்றும் வலைகளை ஒரு பெரிய ஸ்டீல் பத்திரத்தில் போட்டு நீர் நிரப்பி , டிஷ் வாஷ் லிக்விட் ஊற்றி, 30 நிமிடம் அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள்.

    எண்ணெணை பிசுபிசுப்பு கரை எல்லாம் அகன்று விடும். 30 நிமிடம் கழித்து குளிர்ந்த பின் ஒரு துணியால் நன்றா அழுத்தி துடையுங்கள். பில்டர் மற்றும் வலை சுத்தம் ஆகிவிடும். இந்த முறையில் வேகமாக கறைகளை நீக்கலாம். விடாப்பிடியான கறை மற்றும் எண்ணெணை பிசுக்கை விரைவாக நீக்க ஒரு வழி உள்ளது. அது தான் பெயிண்ட் தின்னெர் பயன்படுத்துவது. பில்டர் மற்றும் வலைகளின் கறை மீது பஞ்சு/துணியால் வினிகர் நனைத்து தடவுங்கள். கறை வலுவாக இருக்கும் இடங்களில் சில துளிகள் வினிகர் தெளியுங்கள். சில நிமிடத்தில் கத்தி அல்லது வேறு ஏதாவது கருவி கொண்டு சுரண்டி எடுத்து விடுங்கள். ஒரு முக்கிய தகவல். வினிகர் விரைவாக ஆவியாகிவிடும்; நெடி அதிகம் இருக்கும். அதனால் இதை செய்யும் போது காற்றோட்டமான இடத்தில் செய்யவும். இப்பொது விடாப்பிடி கறையும் நீங்கி விடும்.

    மேலே கூறிய வழிகளை பின்பற்றி உங்கள் சிம்னியை சுத்தம் செய்து குடும்ப உறுப்பினர்கள் உடல் நலத்தை பேணி பாதுகாக்கவும். சமையலறை சுவற்றின் அழகையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

    • குடும்பம், பணியிடம், கல்விக்கூடம் என்று எல்லா இடங்களிலும் பெண்களுக்கும் பிரச்சினைகள் ஏற்படுகிறது.
    • தமிழகத்தில் கடந்த 1973-ம் ஆண்டு பெண் போலீசார் பணியில் நியமிக்கப்பட்டனர்.

    அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற நிலை மாறி இப்போது பெண்கள் சாதிக்காத துறைகளே இல்லை... அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் பல சாதனைகளை படைத்து வருகிறார்கள்.

    இந்த சமுதாயத்தில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு போலீசாருக்கு இருக்கிறது. மேலும் மக்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடி செல்லும் இடமாக போலீஸ் நிலையம் இருக்கிறது.

    குடும்பம், பணியிடம், கல்விக்கூடம் என்று எல்லா இடங்களிலும் பெண்களுக்கும் பிரச்சினைகள் ஏற்படுகிறது. அது பற்றி அவர்கள் ஆண் போலீசாரிடம் தெரிவிப்பதில் தயக்கம் இருக்கும். ஆனால் அந்த இடத்தில் பெண் போலீசார் இருந்தால் பெண்கள் தங்களின் பிரச்சினைகளை மனம் திறந்து சொல்ல முடியும். அதை பெண் போலீசாரும் கனிவுடன் கேட்டு தீர்வு காண வாய்ப்பு ஏற்படும்.

    பெண் போலீசார்

    எனவே தான் தமிழகத்தில் கடந்த 1973-ம் ஆண்டு பெண் போலீசார் பணியில் நியமிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து 1993-ம் ஆண்டு தமிழகத்தில் மகளிர் போலீஸ் நிலையங்கள் தொடங்கப்பட்டன. அதன் பின்னர் காவல்துறையில் பெண்களை தேர்வு செய்வது அதிகரித்தது.

    தற்போது தமிழக காவல்துறையில் ஐ.ஏ.எஸ். முதல் காவலர் வரை 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இதன் மூலம் 1973-ம் ஆண்டு தொடங்கியதால் இந்த ஆண்டுடன் காவல் துறையில் பெண் போலீசார் நியமிக்கப்பட்டு 50 ஆண்டு ஆகிறது. பொன்விழா ஆண்டில் பயணிக்கும் மகளிர் போலீசார் சவாலான பணியை ஏற்று சாதனை படைத்து வருகிறார்கள்.

    சட்டம் ஒழுங்கை பராமரித்தல், குற்றவாளிகளை பிடித்தல், போக்கு வரத்தை ஒழுங்குபடுத்துதல், கோர்ட்டு பணி என்று காவல் துறையில் இருக்கும் அனைத்து பணிகளையும் பல்வேறு சிரமங்களுக்கு இடையிலும் பெண்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    இது தொடர்பாக காவல் துறையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் பெண்கள் சிலர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

    வரப்பிரசாதம்

    போலீஸ் துணை கமிஷனர் சுகாசினி :-

    காவல்துறையில் இடம் ஒதுக்கியது பெண்களின் திறமைக்கு கிடைத்த அங்கீகாரம் ஆகும். இது தினமும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் துறை ஆகும். அதை சவாலாக ஏற்று பெண்கள் திறம்பட பணியாற்றி வருகின்றனர். போலீஸ் நிலையத்துக்கு வரும் பெண்கள், தங்களின் பிரச்சினைகளை ஆண் போலீசிடம் சொல்ல தயங்குவார்கள். தற்போது பெண் போலீசார் இருப்பதால், எவ்வித தயக்கமும் இன்றி பெண்கள் தங்களின் பிரச்சினைகளை கூறி நிவாரணம் பெற்று செல்கிறார்கள். பெண் போலீசார் இருப்பதால் தான் பாலியல் புகார்களை பெண்கள் தயக்கம் இன்றி கூறமுடிகிறது. அதன் மூலம் குற்றவாளிகள் பிடிக்கப்பட்டு தண்டனை பெற்று தரப்படுகிறது. போலீசாக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது பெண்க ளுக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும். அதை ஒவ்வொரு பெண் போலீசாரும் நினைத்து சமுதாயத்துக்கு நல்ல முறையில் பணியாற்ற வேண்டும்.

    சாதிக்க முடிகிறது

    சாய்பாபாகாலனி உதவி கமிஷனர் பஷினா பீவி:-

    காவல்துறை என்பது மிகவும் சவாலான பணி. அதில் பெண்கள் பணியாற்றுவது மிகவும் சவாலானது. குற்றவாளிகளை பிடிக்க செல் லும் தனிப்படையில் பெண் போலீசாரும் நியமிக்கப்படுகிறார்கள். எந்த பணியையும் ஒதுக்காமல் பெண்கள் செய்து வருகின்றனர். அவர்களுக்கு மற்ற போலீசாரும் உதவியாக இருக்கிறார்கள். இதன் மூலம் காவல் துறையில் அனைத்து பணிகளிலும் பெண்கள் சாதிக்க முடிகிறது. போலீஸ் சீருடையில் பெண்களுக்கு தனி மரியாதை உள்ளது. நான் சார்ந்து இருக்கும் சமுதாயத்தில் பெண்களை வெளியே அனுப்ப கூட யோசிப்பார்கள். அதையும் தாண்டி நம்மீது பெற்றோர் நம்பிக்கை வைத்து வெளியே அனுப்புகிறார்கள். அந்த நம்பிக்கை தான் சாதனை படைக்க வைக்கிறது.

    நமக்கு இருக்கும் பிரச்சினையை வெளியே காட்டாமல் நம்மை தேடி வரும் பொதுமக்களுக்கு உதவினாலே நிறைய பிரச்சினைகளை தீர்க்க முடியும். பணியில் இருக்கும் பெண் போலீசார் தங்களின் உடல் நலனிலும் கட்டாயம் அக்கறை காட்ட வேண்டும். நாம் நன்றாக இருந்தால்தான் சமுதாயத்துக்கு சேவையாற்ற முடியும். பெண் போலீசாருக்கு உள்ள வேலைப்பளுவை வீட்டில் இருப்பவர்கள் புரிந்து கொண்டு உதவியாக இருந்தால் மேலும் சாதிக்கலாம்.

    பெண்களுக்கு கிடைத்த பெருமை

    இன்ஸ்பெக்டர் தவ்லத் நிஷா:-

    முதலில் பெண் குற்றவாளிகளை கையாள பெண் போலீஸ் தேவைப் பட்டார்கள். பின்னர் குடும்பம், பாலியல் மற்றும் பெண் கைதிகளை கையாள பெண் போலீசார் பணி அமர்த்தப்பட்டனர். அனால் தற் போது அனைத்து பணிகளையும் பெண் போலீசார் செய்து வருகி றார்கள். குறிப்பாக முதல்-அமைச்சர் பாதுகாப்பு தனிப்பிரிவிலும் பெண்கள் உள்ளனர்.

    போலீஸ் துறையில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் பெண் போலீசார் பணியாற்றி வருகிறார்கள். போலீசில் பெண் காவலர்கள் தேவையா என்ற கேள்வி முன்பு இருந்தது. ஆனால் தற்போது பெண் போலீஸ் இல்லாமல் முடியாது என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.. குறிப்பாக கோவை மாநகரத்தில் தொடங்கப்பட்டு உள்ள போலீஸ் அக்கா திட்டத்தில் பெண் போலீசார் சிறப்பாக பணியாற்றி கல்லூரி மாணவிகள் கூறும் பிரச்சினைகளை தீர்த்து வைக்கிறார்கள்.

    ஊக்கம் அளிக்கிறார்கள்

    சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரிகா:-

    நான் கடந்த 1997-ம் ஆண்டு போலீஸ் வேலையில் சேர்ந்தேன். பின்னர் பயிற்சி முடிந்து கோவைப்புதூரில் 4-வது பட்டாலியனில் பணியில் அமர்த்தப்பட்டேன். அங்கு பெண் போலீசை பணியில் அமர்த்தியது அப்போதுதான். அதற்கு முன்னர் மகளிர் போலீஸ் நிலையம், ஆயுதப்படையில் பெண் போலீசார் பணியாற்றினார்கள். 2000-ம் ஆண்டில் தான் முதன்முறையாக போக்குவரத்து பிரிவில் பெண் போலீசாக பணியமர்த்தப்பட்டேன். எனது பணிக்கு கணவர் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறப்பாக பணி யாற்ற முடிகிறது. எனது பணியை பாராட்டி வக்கீல் சங்கம் விருது அளித்தது. நான் தைரியமாக பணியாற்ற காவல்துறைதான் காரணமாக இருக்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    'தூணாக நின்று பெருமை சேர்க்கும் பெண் போலீஸ்'

    பொன் விழா கொண்டாடும் பெண் போலீசாரின் பெருமைகள் குறித்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    தமிழக போலீஸ் துறையில் பெண் போலீசாரின் பங்களிப்பு முக்கியமானதாகவும், பெருமை சேர்ப்பதாகவும் உள்ளது. ஆரம்ப காலத்தில் பெண் குற்றவாளிகளை விசாரித்து கைது செய்வது, பொதுக்கூட்டங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது போன்ற ஒரு சில பணிகளில்தான் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது சட்டம் - ஒழுங்கை பராமரிப்பது, புலன் விசாரணை செய்வது போன்ற பணிகளில் பெண் போலீசார் ஈடுபடுத்தப்படவில்லை. தற்போது அனைத்து பிரிவுகளிலும் பெண் போலீசாரின் பணி முக்கியமானதாக உள்ளது. அவர்கள் தமிழக போலீஸ் துறைக்கு தூண் போன்று உள்ளார்கள்.

    தமிழகத்தில் உள்ள 1,498 போலீஸ் நிலையங்களில் 503 போலீஸ் நிலையங்களுக்கு சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு பெண் இன்ஸ்பெக்டர்கள் தான் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதில் அவர்களது பணி சிறப்பாக உள்ளது.

    தமிழகத்தில் 228 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் உள்ளன. அந்த போலீஸ் நிலையங்கள் மூலம் கடந்த ஆண்டு 75 ஆயிரத்து 600 பெண்களிடம் புகார் மனுக்கள் பெறப்பட்டு உரிய தீர்வு காணப்பட்டு உள்ளது. இதனை பெண் போலீசார்தான் சிறப்பாக கையாண்டு உள்ளனர். கம்ப்யூட்டர் பிரிவில் பெரும்பாலும் பெண் போலீசார்தான் பணியாற்றி வருகிறார்கள். எப்.ஐ.ஆர். போன்ற முக்கிய பணிகளை கம்ப்யூட்டரில் அவர்கள்தான் பதிவு செய்கிறார்கள்.

    ஆக, சட்டம்-ஒழுங்கு பிரிவில் இருந்து முக்கியமான நிர்வாக பணிகளிலும் பெண் போலீசாரின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்கள் எளிதில் கிடைப்பதாக இருக்க வேண்டும்.
    • பட்ஜெட்டுக்குள் அடங்கும்படியான சிறிய அளவிலான தயாரிப்பு தொழிலையே மேற்கொள்ளலாம்.

    செய்யும் தொழிலே தெய்வம். அத்தகைய தொழிலை தேர்ந்து எடுப்பதில் மிக கவனமாக செயல்பட வேண்டும். ஏற்கனவே தொழிலில் வெற்றிபெற்றவர்கள், நல விரும்பிகள், வங்கி அதிகாரிகள் ஆகியோரின் ஆலோசனைகளை பெறுதல் என்பது மிக அவசியம். மேலும் நமது நிதி நிலைமை, சுற்றுப்புற சூழல் ஆகியவற்றையும் அறிந்து வைத்து இருக்க வேண்டும்.

    தொழில் என்பது 2 பிரிவுகளை கொண்டு உள்ளது. உற்பத்தி அல்லது தயாரிப்பு அடிப்படையிலானது. விற்பனை அல்லது தேவை அடிப்படையிலானது. உதாரணமாக ஸ்டீல் தகடு உற்பத்தி செய்யப்பட்டு அவை பாத்திரங்கள், பொருட்களாக தயாரிக்கப்படுகிறது. அந்த பாத்திரங்களை வாங்கி ஒருவர் விற்பனை செய்கிறார். பாத்திரங்களின் பளபளப்பு குறைந்தால் அதனை ஒருவர் பாலீஷ் செய்து தருகிறார். இவைகளில் உற்பத்தி, தயாரிப்பு, விற்பனை, சேவை என 4 அடிப்படைகள் உள்ளதை புரிந்து கொள்ளலாம். இவற்றில் சேவை என்பது கட்டணம் பெற்று செய்து கொடுக்கும் தொழில்களை குறிப்பிடுவது ஆகும்.

    தயாரிப்பு தொழிலை மேற்கொள்வோர் அதற்கு உரிய விற்பனை வாய்ப்பை தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். தயாரிக்கப்படும் பொருட்கள் அதிக வியாபார போட்டி இல்லாமல் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்கள் எளிதில் கிடைப்பதாக இருக்க வேண்டும். அல்லது நாம் வசிக்கும் பகுதியில் மலிவாகவும், நிறைவாகவும் கிடைப்பதாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் பொருட்களின் விற்பனை வாய்ப்பு எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் அறிந்து இருக்க வேண்டும்.

    சிறிய முதலீட்டில் பெரிய அளவிலான தயாரிப்பு தொழில்கள் எதையும் மேற்கொள்ள இயலாது. எனவே, பட்ஜெட்டுக்குள் அடங்கும்படியான சிறிய அளவிலான தயாரிப்பு தொழிலையே மேற்கொள்ளலாம். நாம் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்யும் காலத்தில் ஏற்படும் சூழலை சந்திக்க சிறிது பொருளாதாரம் நம்மிடம் இருக்க வேண்டும். எனவே எப்போதும் சிறிய அளவிலான தொகை கைவசம் வைத்திருக்க வேண்டும்.

    மேலும் உங்களது தயாரிப்பு பொருளை சந்தையில் விற்பதற்கும், மக்களிடத்தில் கொண்டு செல்வதற்கும் அவ்வப்போது விளம்பரங்கள் செய்ய வேண்டும். இவற்றுக்கான மூலதனங்களை நீங்கள்தான் கொடுக்க வேண்டியிருக்கும். ஆகவே தயாரிப்பு தொழிலை செய்ய விரும்புபவர்கள் ஓரளவு பொருளாதாரம் உடையவராக இருக்க வேண்டும். கடன் தொல்லை இல்லாமல், சுய முதலீடு இல்லாதவர்கள் விற்பனை தொழிலை தேர்ந்து எடுக்கலாம். அதுதான் சிறந்தது.

    முக்கியமான விஷயம், தொழில் தொடங்க கடன் கிடைக்கிறதே என்ற எண்ணத்தில் முழு கடன் தொகையையும் வாங்க நினைக்கக்கூடாது. நம் தொழிலுக்கு தேவையான நிதி எவ்வளவோ அந்த அளவுக்கு மட்டுமே கடன் வாங்க வேண்டும். இல்லையேல் கடன் நம்மை அமுக்கிவிடும். இதை தொழில் தொடங்குவோர் கவனத்தில் கொண்டால் வெற்றி பெறலாம்.

    • படித்த பெண்கள் அரசு வேலைகளுக்காக காத்திருக்காமல் சுலபமாக தொழில் தொடங்கலாம்.
    • தொழிலை விரிவுபடுத்த அரசு மானியத்துடன் கடன் உதவிகளும் வழங்குகிறது.

    "என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் அயல்நாட்டில்" என்ற பாடல் வரிகளில் புதைந்துள்ள கருத்துகள் வளர்ந்து வரும் இளைஞர்களுக்காக கூறப்பட்டது. நமது நாடு தன்னிறைவு பெறும் காலம் வரை இந்த வரிகள் உயிருடன் இருக்கும். படித்த பெண்கள் அரசு வேலைகளுக்காக காத்திருக்காமல் சுலபமாக தொழில் தொடங்கலாம்.

    அதற்காக தொழில் பயிற்சி நிலையங்களில் சேர்ந்து நமக்கு என்ன தொழில் தொடங்க விருப்பமோ அந்த தொழிலில் பயிற்சிப்பெற்று தொடங்கலாம். இதற்காக தொழில் ஆலோசனை கூறும் அரசு நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களில் ஆலோசனை பெறலாம். அவர்கள், எளிதான முறையில் தொழில் யோசனைகளையும் வழங்குகிறார்கள்.

    விவசாயத் தொழில்கள் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு, தோல் பொருட்கள் தயாரிப்பு, எலக்ட்ரானிக் போன்ற மின்னணு கருவிகள் தயாரிப்பு, பீங்கான் பொருட்கள் தயாரித்தல், பெயிண்டிங், வர்ணம் தீட்டுதல், மாடலிங் செய்தல், ரேடியோ, ரெப்ரிஜிரேட்டர், குளிர்சாதனப்பெட்டி, வாஷிங் மெஷின் போன்றவற்றை பழுது பார்த்தல் போன்ற பல தொழில்களை தொடங்கலாம். மேலும் கம்ப்யூட்டர் வேலைகளுக்கு அது பற்றிய தொழில்நுட்பங்களை அறிந்து இதில் ஈடுபடலாம்.

    இதன் மூலம் நமக்கு தினசரி வருமானம் கிடைப்பதுடன் தொழிலை விரிவுபடுத்தி பலருக்கு வேலை வாய்ப்பையும் வழங்கலாம்.

    தொழிலை விரிவுபடுத்த அரசு மானியத்துடன் கடன் உதவிகளும் வழங்குகிறது. அதன்படி மானியத்துடன் கடன் உதவிகள் பெற்று தொழில் வல்லுனர்களை அழைத்து வந்து எளிதில் வேலைகளை முடிப்பதற்கான நுட்பங்களை அறிந்து கொள்ளலாம்.

    பணிகளை விரைவில் முடிப்பதால் பல தொழில் ஆர்டர்களை பெறும் போது நமக்கு கூடுதலாக வருமானமும் கிட்டும். மேலும் தொழில் தொடங்குவதற்கு வங்கிகள் கடன் உதவி அளிக்கிறது.

    தொழில் முதலீட்டுக்கழகமும் கடன் உதவி வழங்குகிறது. சிறு தொழில் நிறுவனமும் கடன் தர தயாராக உள்ளன. இந்த நிறுவனங்களில் கடன் பெற்று தொடங்கிய தொழிலை அபிவிருத்தி செய்யவோ, புதிய தொழில் தொடங்கவோ கடன் பெறலாம். எந்தவொரு தொழிலையும் தள்ளி விடாது. அது பற்றி ஆராய்ந்து அறிந்து வாழ்க்கையில் முன்னேறலாம்.

    • பனி அதிகமாக இருந்த போதிலும் பயிற்சி செய்யும் ஆர்வம் குறையவில்லை.
    • திறந்தவெளியில்தான் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.

    காஷ்மீர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் எப்போதும் குளிர்ச்சி குடிகொண்டிருக்கும். குளிர்காலத்தில் அதன் தாக்கம் அதிகரித்து பனிக்கட்டிகளாக உருமாறும். புல்வெளிகள் மட்டுமின்றி சாலைகள், மரங்கள், வீட்டு கூரைகள் என சுற்றுப்புற பகுதிகளில் பனிப்பிரதேசம் போல் பளிச் வெண்மை நிறத்தில் பனித்துளிகள் படர்ந்திருக்கும்.

    தினமும் அதிகாலை உடற்பயிற்சி செய்பவர்கள் கூட குளிர் காலங்களில் குறிப்பிட்ட நேரத்திற்குள் எழுந்து பயிற்சிகளை மேற்கொள்வதற்கு தடுமாறுவதுண்டு. ஆனால் காஷ்மீரில் வசிப்பவர்களிடம் குளிர், அன்றாட வாழ்வின் அங்கமாக இணைந்திருப்பதால் அதனை பொருட்படுத்தாமல் பனி சூழலிலும் சுறுசுறுப்போடு இயங்குவார்கள். இளம் பெண்களும் அதற்கு விதிவிலக்கல்ல.

    ஜம்மு காஷ்மீர் அடுத்த பீர்வா நகரத்தில் பனிக்கட்டிகளின் மீது வெறும் காலில் நின்றபடி இளம் பெண்கள் தற்காப்பு கலை பயிற்சிகள் செய்து அசத்தும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.

    தரையில் நிற்பது போலவே பனிக்கட்டிகள் மீது சாதாரணமாக நின்று கொண்டு ஆக்ரோஷமாக ஒருவருக்கொருவர் சண்டையிட்டபடி பயிற்சி பெறுகிறார்கள். பனி அதிகமாக இருந்த போதிலும் பயிற்சி செய்யும் ஆர்வம் குறையவில்லை. இதுபற்றி பயிற்சி பெறும் சிறுமிகளில் ஒருவரான முஸ்கான் கூறுகையில், ''நாங்கள் பயிற்சி பெறுவதற்கு போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. திறந்தவெளியில்தான் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.

    பனிக் காலத்திலும் இதே நிலைதான் தொடர்கிறது. அதற்காக நாங்கள் சோர்ந்து போவதில்லை. பனியிலும் கூட பயிற்சி செய்வதற்கு ஆர்வமாக இருக்கிறோம். உடல் அளவிலும், மனதளவிலும் எங்களை நாங்களே வலுப்படுத்திக் கொள்கிறோம். போட்டியில் பங்கேற்று இந்தியா, காஷ்மீருக்கு பெருமை சேர்க்க விரும்புகிறோம்'' என்கிறார்.

    ''ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதை இலக்காக கொண்டிருப்பதால் பனியைக் காரணம் காட்டி ஒதுங்கி இருக்க விரும்பவில்லை'' என்பது பயிற்சி பெறும் பெண்களின் கருத்தாக இருக்கிறது.

    பனி சீசனாக இருப்பதால் அதனை பிரதானப்படுத்தி பலரும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா காலகட்டத்தில் ஸ்ரீநகரை சேர்ந்த குராடல் ஐன் ஜோஹ்ரா, ஐமன் ஜோஹ்ரா ஆகிய இரு சகோதரிகள் கொரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பனி சிற்பத்தை உருவாக்கி இருந்தனர். டெதாஸ்கோப், தடுப்பூசி, சிரஞ்ச் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை கொண்டு அந்த பனி சிற்பம் உருவாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • எம்பிராய்டரி தொழிலை கற்பது எளிது.
    • இந்த தொழிலும் நல்ல லாபம் பார்க்கலாம்.

    பொறுமை நிறைந்த தொழில் என்றால் அது 'எம்பிராய்டரி' தொழில் என்றால் அது மிகையா காது. உடுத்தும் உடைகளில் இருந்து வீட்டை அலங்கரிக்கும் திரைச்சீலைகள், மேஜை விரிப்புகள் முதல் செல்போன் கவர்கள் வரை இன்று எம்பிராய்டரியில் வந்து விட்டன. அதிலும் எம்பிராய்டரி வேலையில் பல்வேறு பூக்களை வரைந்து காண்பித்து அழகுபடுத்தினால் அதற்கு வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்து விடுகிறது.

    கற்பது எளிது

    எம்பிராய்டரி தொழிலை கற்பது எளிது. தற்போதைய காலக்கட்டத்தில் புத்தகங்கள் மூலமும், டி.வி. நிகழ்ச்சிகள் மூலமும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் எம்பிராய்டரியை கற்றுத்தருகிறார்கள். எனவே இதை கற்றுக்கொள்வது ஒன்றும் பெரிய காரியம் அல்ல. அதனை எந்த வகையான வேலைபாடுகளில் எம்பிராய்டரி செய்தால் சந்தையில் நல்ல விலை கிடைக்கும் என்பதை சர்வே மூலம் அறிந்து கொள்வது நல்லது.

    நீங்கள் வெளியே செல்லும் போது உள்ள கடைகளில் விசாரித்தாலே தெரிந்து கொள்ள முடியும். முக்கியமாக பேன்சி விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கேட்டால் உங்களுக்கு தேவையான தகவல்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. கேரம் போர்டில் உள்ள 4 ஓட்டைகளிலும் விழும் காய்கள் கீழே விழாமல் இருக்க ஒரு வலை பின்னப்பட்டிருக்கும். அதுவும் எம்பிராய்டரிதான். அதன் தேவையை அறிந்து தயாரித்து கொடுத்தாலும் லாபம் பார்க்கலாம். அதற்கு ஒரு ஊசியும், குரோஷா நூலும் தான் தேவை. இவை மட்டும் உங்கள் மூலதனம் ஆகும்.

    வருமானம் பார்க்கலாம்

    எம்பிராய்டரி மற்றும் குரோஷா வலை பின்னத்தெரிந்தவர்களுக்கு இது மிகவும் சுலபம். ஒரு பண்டல் குரோஷா நூலில் சாதாரண கேரம் போர்டு வலையாக இருநதால் 8 வலைகள் பின்னலாம். இன்னும் கொஞ்சம் உங்கள் மூளையை பயன்படுத்தி சற்று வித்தியாசமாக வலை அமைப்பை மாற்றினால் நீங்கள் பின்னும் வலைக்கு ஏற்ப நூலின் எண்ணிக்கை மாறுபடும். வீட்டு வேலைகளை கவனித்துக்கொண்டு, இந்த வலை பின்னும் பணியை தொடர்ந்தால் ஒரு நாளைக்கு 5 டஜன் வலைகள் வரை பின்ன வாய்ப்புகள் உள்ளன.

    மேலும் சில நிறுவனங்கள் எம்பிராய்டரி பின்னி தருக்கூறி ஆர்டர்களும் கொடுக்கின்றன. அதனை பெற்று எம்பிராய்டரி வேலைபாடுகளை செய்து கொடுத்தால் நல்ல வருமானம் கிடைக் கும். தற்போதைய காலக்கட்டத்தில் செல் போன் இல்லாதவர்கள் இல்லை என்றே கூறலாம். அதில் குறிப்பாக பெண்கள் செல்போன் வைக்க பயன்படுத்தும் உறைகள் எம்பிராய்டரி வேலைபாடு இருந்தால், அவர்களை கவரலாம். மிக குறைந்த மூலத்தனத்தில் எம்பிராய்டரி வேலைகளை செய்யலாம். பெண்கள் சேலைகள், சுடிதார்கள் உள்பட ஆடைகளிலும் எம்பிராய்டரி வேலைகளை செய்து இந்த தொழிலும் நல்ல லாபம் பார்க்கலாம்.

    • திட்டமிட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
    • பங்குச்சந்தையில் ஜெயிப்பது எப்படி? என்பதை இங்கே காண்போம்.

    பங்குச்சந்தையில் ஜெயிப்பது எளிதான காரியம் அல்ல. பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்துக்கு ஏற்பவே நமது லாப-நஷ்டம் அமையும். எனவே, கண்ணை மூடிக்கொண்டு சந்தைக்குள் குதிக்காமல், ஓரளவுக்கு விவரங்களை தெரிந்து கொண்டு முதலீட்டைத் தொடங்க வேண்டும். இதை கவனத்தில் கொண்டு பங்குச்சந்தையில் ஜெயிப்பது எப்படி? என்பதை இங்கே காண்போம்.

    பங்குச்சந்தையில் ஏன் முதலீடு செய்ய நினைக்கிறீர்கள்? என்கிற கேள்விக்கு முதலில் பதில் தெரிந்து கொள்ள வேண்டும். மற்ற துறைகளில் கிடைக்கும் வருமானத்தைவிட பங்குச்சந்தை மூலம் கிடைக்கும் லாபம் அதிகம். அதற்கு நீங்கள் கொஞ்சமாவது உழைக்க வேண்டும். முதலில் உங்களை நீங்கள் ஒரு வியாபாரியாக மாற்றிக்கொள்ள வேண்டும். பங்குச்சந்தைக்கு நீங்கள் வருவதே வியாபாரம் செய்யத்தான். அந்த வியாபாரத்தை சரியாக செய்தீர்கள் எனில் லாபம் உங்களைத்தேடி வரும். தவறாக செய்தால் கையில் உள்ள பணம்தான் கரையும். கவனம் தேவை.

    வியாபாரம் செய்ய முதலீடு வேண்டும். இயல்பான வாழ்க்கை வியாபாரத்தில் கடன் வாங்கலாம். லாபம் சம்பாதித்த பிறகு திரும்பத்தந்து விடலாம். ஆனால், பங்குச்சந்தையில் கடன் வாங்கி முதலீடு செய்து விடாதீர்கள். ஏனெனில் இங்கு ரிஸ்க் அதிகம். அதனால்தான் இந்த மூதலீட்டை 'ரிஸ்க் கேப்பிட்டல்' என்கிறோம். எனவே, இந்த ரிஸ்க்கை எடுக்கும் துணிச்சல்காரர்களுக்குத்தான் பங்குச்சந்தையில் வெற்றி கிடைக்கும். பங்குச்சந்தையில் வெற்றிபெற எளிய வழி, ஒரு நிறுவனத்தின் உற்பத்திப் பொருளுக்கு அல்லது சேவைகளுக்கு யார், யார்? வாடிக்கையாளர்கள்.

    அவர்களின் ஆதரவு எதுநாள் வரை கிடைக்கும். நிறுவனத்தின் போட்டியாளர்கள் யார், அவர்களின் திறமை எப்படி? அந்த நிறுவனம் சார்ந்த துறையின் எதிர்காலம் எப்படியிருக்கும்? என்பதையெல்லாம் தெரிந்து கொண்டு முதலீடு செய்வதுதான். உங்கள் முதலீட்டை திட்டமிட்டு, திட்டமிட்டபடி முதலீடு செய்யுங்கள். முதலீடு எவ்வளவு? அதை எப்படியெல்லாம் பிரித்து முதலீடு செய்யலாம் என்பதை உறுதி செய்து கொண்டு பங்குச்சந்தையில் கால் பதியுங்கள். வாங்கும் பங்குகளை எவ்வளவு லாபம் வந்தால் விற்கலாம் என்பதையும் முடிவு செய்து கொள்ளுங்கள். திட்டமிட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

    பங்குச்சந்தை முதலீடு ரிஸ்க் நிறைந்தது என்பது உங்களுக்கு தெரியும். இந்த ரிஸ்க்கை குறைக்க எப்போது ஒரு பங்கினால் நமக்கு நஷ்டம் வருகிறதோ, அப்போதே அதை கைகழுவிவிட வேண்டும். விலை குறையும் பங்கு கீழ்நோக்கி வரும் கத்திமாதிரி. அதை பிடிக்க நினைத்தால் நம் கை ரத்தக்களறி ஆகிவிடும். அதேபோல் நாம் வாங்கிய பங்கின் விலை லாபத்தில் இருக்கிறது என்றால் நேரம் பார்த்து அந்த பங்கை விற்று விடவேண்டும். உச்சத்தில் இருக்கும் பங்கு விலை மீண்டும் குறையும். குறிப்பிட்ட அளவு குறைந்தபிறகு மீண்டும் உயரும். இதுவே பங்குச்சந்தையின் நீண்டகால விளை யாட்டு. இந்த விளையாட்டை பற்றி நாம் தெரிந்து கொண்டு, அதுபற்றிய அறிவுடை யவர்களின் நட்பை பெற்று முதலீடு செய்தால் லாபத்தை ஈட்டலாம்; நஷ்டத்தையும் தவிர்க்கலாம். எனவே, இந்த வழிகளை மனதில் வைத்து பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் ஜெயிப்பது உறுதி.

    • அலுவலகத்தில் குழு சரியாக அமையாவிட்டால் வேலை ஒழுங்காக நடைபெறாது.
    • எல்லோரும் தமது வேலையை முடித்தபின் ‘மீட்டிங்’கை நடத்துங்கள்.

    விளையாட்டாக இருந்தாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி, குழுவாகச் சேர்ந்து செயல்படுவது என்பது அவசியம். அதிலும் அலுவலகத்தில் குழு சரியாக அமையாவிட்டால் வேலை ஒழுங்காக நடைபெறாது. அலுவலகத்தில் நீங்கள் ஒரு சிறந்த குழுவை அமைத்துச் செயல்படுவது எப்படி?

    இதோ 5 டிப்ஸ்கள்:

    * நன்றாகப் பணிபுரியக்கூடியவர்கள் என்று உங்களுக்கு தோன்றக்கூடியவர்களை உங்கள் குழுவில் சேர்ப்பது நல்லது. சாதாரணமாக பிறருடன் நீங்கள் கலந்து பழகி மற்றவர்களை அறிந்திராதவர் என்றால், யார் உங்கள் குழுவில் சேர்வதற்கு ஆர்வமும், விருப்பமுமாக இருக்கிறார்கள் என்று பார்த்துச் சேர்க்கலாம். சும்மா உட்கார்ந்தபடி அதுவாகவே குழு உருவாகட்டும் என்று இருக்காதீர்கள். குறிப்பிட்ட ஒரு குழுவின் அங்கத்தினராக இருப்பதில் அதிக ஆர்வம் காட்டுங்கள்.

    * உங்கள் குழுவுக்கான பொறுப்புகள் அளிக்கப்பட்டபின், அதை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுங்கள். குழு அமைக்கப்பட்ட உடனே அவசர அவசரமாக அடுத்தடுத்து 'மீட்டிங்' போடாதீர்கள். குழு உறுப்பினர்கள் அவரவர் சொந்த வேகத்துக்கு ஏற்ப, தங்களால் ஒதுக்க முடிந்த நேரத்துக்கு ஏற்ப வேலை செய்யட்டும். வாய்மொழிப் பரிமாற்றங்கள் போதும். எல்லோரும் தமது வேலையை முடித்தபின் 'மீட்டிங்'கை நடத்துங்கள்.

    * வேலையை முடித்த அறிக்கையை அலுவலகத்தில் அளிக்க வேண்டும் என்றால், நீங்கள் முதலில் போக வேண்டாம். உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையில் அதிக கவனம் செலுத்துங்கள். பிற குழுக்கள் எப்படி வேலை அறிக்கை அளிக்கிறார்கள் என்று பொறுத்திருந்து பாருங்கள். அதன் பிறகு நீங்கள் உங்கள் வேலை அறிக்கையை வித்தியாசமாக அளிக்கலாம்.

    * குழுவில் பிரச்சினைகள் வரலாம். சிலரிடம் 'ஈகோ' தலைதூக்கலாம். சிலர் சோம்பேறித்தனமாக இருக்கலாம். எனவே உங்கள் குழுவில் வேலையில் பலவீனமாக இருப்பவரைக் கண்டு பிடித்து, அவருக்கு ஏற்ப எளிதான வேலையைக் கொடுங்கள். உங்கள் குழுவில் ஒழுங்கீனமாக ஒருவர் இருந்தால், அவரது வேலையை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்து குறிப்பிட்ட நேரத்துக்குள் வேலையை முடிக்கப் பாருங்கள். வேலை அறிக்கை அளிப்பதற்கு இரண்டொரு நாட்களுக்கு முன்பே அதைத் தயார் செய்துவிடுங்கள்.

    * குழு உறுப்பினர்கள் பலர் சரியாக வேலை செய்யாமல், முக்கியப் பொறுப்பில் இருப்பவர் தலையில் எல்லா வேலையும் விழும்போது அவர் மனம் கசந்து வெறுத்துப் போவார். உங்களுக்கு இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டால், குறிப்பிட்ட 'பிராஜெக்ட்' முழுவதையும் கவனிக்கும் பொறுப்பை மனமுவந்து ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள்.

    உங்கள் குழு உறுப்பினர்கள் சரியில்லாவிட்டால், அது நீங்கள் கையில் எடுத்திருக்கும் பொறுப்பை ஏன் பாதிக்க வேண்டும்? அதில், எல்லாவற்றையும் உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தால், இறுதி முடிவையும் நீங்கள் கட்டுப்படுத்தலாம். யாருமே வேலை செய்யாதபோது நீங்கள் பொறுப்பாகச் செயல்பட வேண்டும் என்பது வித்தியாசமாகத் தோன்றலாம். ஆனால் குழுவில் ஒன்றுமே செய்யப்படாமல் இருப்பதை விட, ஏதோ உங்களால் அதிகபட்சமாக செய்யக்கூடியதை செய்வது சிறப்பானது. வேலையின் முழுக் கட்டுப்பாட்டையும் உங்களுக்குக் கீழே கொண்டுவந்து வெற்றி பெற்றுக் காட்டுங்கள்.

    • பங்கு சந்தையில் யாராக இருப்பினும் நுழையலாம், நிர்வகிக்கலாம், லாபம் பெறலாம்.
    • குடும்ப தலைவிகள் பங்கு சந்தை வர்த்தகம் மூலமாக பயனுள்ள வகையில் செலவிடலாம்.

    இயல்பான குடும்ப பெண்களை, பங்கு சந்தை முதலீட்டாளர்களாக மாற்றி வருகிறார், தர்மஸ்ரீ ராஜேஸ்வரன். சென்னையை சேர்ந்தவரான இவர், பங்குசந்தையில் 20 வருடங்களுக்கு மேல் அனுபவம் உள்ளவர். தனக்கு நன்கு பழக்கமான பங்கு சந்தையை, குடும்ப பெண்களுக்கும் கற்றுக்கொடுக்க ஆசைப்பட்டவர், அதை திறம்பட செய்து வருகிறார்.

    தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், ஆன்லைன்-ஆப்லைன் பயிலரங்கம் மூலமாகவும் பெண்களுக்கு பங்குசந்தை கலையை கற்றுக் கொடுப்பவரிடம் பேசினோம். இந்த பயணம் எப்படி தொடங்கியது என்பது முதல், பங்கு சந்தையில் களமிறங்க ஆசைப்படும் பெண்களுக்கு வழிகாட்டுதல் வரை எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார். அவை இதோ...

    * எப்படி தொடங்கியது இந்தப் பயணம்?

    எனக்கு பங்கு சந்தை, பங்கு வர்த்தகம் சார்ந்த அனுபவமும், படிப்பினையும் இருந்ததால், அதை மற்றவர்களுக்கு குறிப்பாக ஏழை எளிய குடும்ப பெண்களுக்கு கற்றுக்கொடுக்க ஆசைப்பட்டேன். சிறு முயற்சியாகத்தான், சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினேன். இன்று 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களை பங்கு சந்தை முதலீட்டாளர்களாக, அந்த துறை சார்ந்த பணியாளர்களாக மாற்றி இருக்கிறேன்.

    * பங்கு சந்தை குடும்ப பெண்களுக்கு ஏற்றதா?

    மற்றவர்களைவிடவும், குடும்ப பெண்களுக்குத்தான் சிறப்பானது. காலை 9 மணிக்கு தொடங்கும் பங்கு சந்தை வர்த்தகம், மாலை 3.30 மணி வரை நடைபெறும். இந்த நேரம், ஒருசில குடும்ப தலைவிகளுக்கு பிசியான நேரமாக இருந்தாலும், ஒருசிலருக்கு ஓய்வு நேரமாகத்தான் இருக்கும். அந்த சமயத்தில், தையல் வேலை, ஆரி வேலைப்பாடுகள், யூ-டியூப் பொழுதுபோக்குகள் என நேரம் செலவாகும். இப்படி பொழுதுபோக்காக கழிக்கும் நேரத்தை, குடும்ப தலைவிகள் பங்கு சந்தை வர்த்தகம் மூலமாக பயனுள்ள வகையில் செலவிடலாம். கூடவே, குடும்ப பொருளாதாரத்தை முன்னேற்ற தங்களால் முடிந்த பங்களிப்பை பங்கு சந்தை வாயிலாக பெறலாம்.

    * குடும்ப பெண்கள், பங்கு சந்தையில் இணைவது எப்படி?

    ரொம்ப சுலபம். குடும்ப பெண்கள் மட்டுமல்ல, எல்லோருக்கும் இது பொதுவானதுதான். டிமெட் கணக்கு ஒன்றை தொடங்க வேண்டும். பிரபல வங்கிகளே இந்தவகை கணக்குகளை வழங்குகின்றன. 15 நிமிடங்களில் டிமெட் கணக்கை தொடங்கிவிட முடியும். அதேபோல பங்குகளை வாங்கி, விற்க, நிர்வகிக்க நிறைய 'புரோக்கிங்' இணையதளங்களும் இயங்குகின்றன. அதில் ஒன்றில், உங்களுக்கு விருப்பமான துறையில், விருப்பமான நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதன் மூலமாக, பங்கு சந்தையில் நீங்கள் இணைந்துவிடுவீர்கள்.

    * சிக்கலான பங்குசந்தையை குடும்ப பெண்கள் சுலபமாக கற்றுக்கொள்ள முடியுமா?

    முடியும். பங்கு சந்தையின் செயல்பாடுகள் எளிமையானதுதான். அதன் அடிப்படையை புரிந்து கொண்டால், எளிமையாக வர்த்தகம் செய்யலாம். டி.வி. சேனல்கள், யூ-டியூப் சேனல்கள், பேஸ்புக் ரீல்ஸ், ஆன்லைன் படிப்புகள், வாட்ஸ் ஆப் குரூப்கள், கருத்தரங்குகள்... இப்படி நிறைய தளங்களில், பங்கு சந்தை பற்றிய விளக்கங்கள் கிடைக்கின்றன. நிறைய தனியார் அமைப்புகளும், நிறுவனங்களும் அதுபற்றிய படிப்பினையை வழங்குகின்றன. என்.ஐ.எஸ்.எம். (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் செக்யூரிட்டி மார்க்கெட்) கல்வி நிறுவனத்தில், ஷேர் மார்க்கெட் பற்றிய படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

    * பயிற்சி வகுப்புகள் அவசியமா?

    உங்களது சேமிப்பை முதலீடு செய்ய இருக்கிறீர்கள். அதனால் நிச்சயம் பயிற்சி வகுப்புகளும், வல்லுநர்களின் வழிகாட்டுதலும் அவசியம். இல்லையேல், உங்களது சேமிப்பு கரைந்துவிடும்.

    * பங்கு சந்தையில் இளம் பெண்களின் பங்களிப்பு இருக்கிறதா?

    நிறைய இளம் பெண்கள் பங்கு சந்தையில் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். வட இந்தியாவில் இளம் பெண்களின் பங்களிப்பு மிக அதிகமாக இருக்கிறது. சமீபகாலமாக தென்னிந்தியாவிலும், குறிப்பாக தமிழ்நாட்டிலும் பெண்களுக்கு பங்கு சந்தை மீதான ஆர்வம் அதிகரித்திருக்கிறது. இருப்பினும் வெளிப்படையாக தெரிவதில்லை. யூ-டியூப்பை திறந்து பார்த்தால், அதில் நிறைய தமிழ் பேசும் பெண்கள் பங்கு சந்தை பற்றிய தகவல்களை விளக்கிக் கொண்டிருப்பதை பார்க்க முடியும்.

    * பங்கு சந்தை, கல்லூரி மாணவிகளுக்கு பயன்படுமா?

    வணிகம் சார்ந்து படிக்கும் கல்லூரி மாணவிகளுக்கு பங்கு சந்தை சிறப்பான பயிற்சிக்களம். ஒரு பங்கு வாங்கினால், அந்த நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட் நமக்கு வருடந்தோறும் அனுப்பி வைக்கப்படும். அதன்மூலம், பிரபல நிறுவனங்கள் பேலன்ஸ் ஷீட் எப்படி தயாரிக்கின்றன, நிதி மேலாண்மையை எப்படி கையாள்கின்றன... போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும்.

    * பங்குகளை வாங்குவது, விற்பது, நிர்வகிப்பது... இவையெல்லாம் குடும்ப பெண்களுக்கு சிக்கல் நிறைந்த வேலைகளா?

    இல்லவே இல்லை. பல இணையதளங்கள் இதுபோன்ற வேலைகளை மிக சுலபமாக்கி விட்டன. பெண்கள், குறிப்பிட்ட இணையதளத்தில் கணக்கு ஒன்று தொடங்கி, அதில் இருக்கும் 'வாங்க', 'விற்க' ஆகிய பட்டன்களை மட்டும் அழுத்தினாலே போதுமானது. மற்றபடி, சட்டரீதியான வேலைகளை, அந்தந்த இணையதளங்களே பார்த்துக் கொள்ளும்.

    * பங்கு சந்தைக்குள் யாரெல்லாம் நுழையலாம்?

    கல்லூரி மாணவிகள் தொடங்கி, பணி ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் வயது மூத்த பெண்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற துறை இது. படிப்பை விட, அனுபவ அறிவு இருந்தால்போதும், பங்கு சந்தையில் யாராக இருப்பினும் நுழையலாம், நிர்வகிக்கலாம், லாபம் பெறலாம்.

    * பங்கு நிறுவனங்களை எப்படி தேர்வு செய்வது?

    என்.எஸ்.இ. எனப்படும் இணையதளத்தை திறந்து பார்த்தால், 'நிப்டி 50' என தலைசிறந்த 50 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டிருக்கும். அந்தந்த நிறுவனங்களின் கடந்த கால லாப-நஷ்ட கணக்குகளை அடிப்படையாக கொண்டே அந்த பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கும். அதில் உங்களுக்கு பிடித்தமான துறை நிறுவனங்களை தேர்வு செய்து, முதலீடு செய்யலாம். அதுபோக, உலக நடப்புகள், உலக வர்த்தகம் போன்றவற்றையும் கவனித்து, அதற்கு ஏற்ப தேர்வு செய்ய வேண்டும்.

    * துறை சார்ந்த அறிவு தேவையா?

    நிச்சயமாக. நடப்பு 'டிரெண்ட்' பற்றி தெரிந்திருக்க வேண்டும். அடுத்ததாக, ஒவ்வொரு காலகட்டத்தில் எந்த மாதிரியான துறைக்கு அதிக வரவேற்பு இருக்கும், அடுத்த 10 ஆண்டுகளில் எந்த துறை அபார வளர்ச்சி பெறும், எது வீழ்ச்சி பெறும் என்பது போன்ற பொது சிந்தனைகளும், உங்களது பங்கு மதிப்பினை உயர்த்தி தரும்.

    * புதிதாக பங்கு சந்தைக்குள் நுழையும் பெண்கள் செய்யக்கூடாத ஒன்று எது?

    அவசரப்படக்கூடாது. ஒரு பங்கு வாங்குகிறோம் என்றால், அது சேமிப்பு என நினைத்துக் கொள்ள வேண்டும். நீண்ட நாள் கழித்து, அதன் மதிப்பு கூடியிருக்கும் வேளையில், அதை விற்று பணமாக்கிக் கொள்ள வேண்டும். இன்று முதலீடு செய்து, நாளை பல லட்சம் லாபம் பார்க்க வேண்டும் என்றால், அதே அளவிற்கு நஷ்டத்தை எதிர் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

    * பங்கு சந்தை முதலீடு அபாயம் தரக்கூடியதா?

    ஆம்..! கவனமாக செயல்படாத வரை அது, அபாயம் தரக்கூடியதுதான். ஆனால் தகுந்த படிப்பினையோடு கையாளும்போது, அது சிறப்பான முதலீட்டு தளமாக மாறிவிடும்.

    * பங்கு சந்தையில் ஈடுபடுவோரை பாதுகாக்கும் அரசு அமைப்புகள் உண்டா?

    இருக்கிறது. செக்யூரிட்டி அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்ட் ஆப் இந்தியா எனப்படும் 'செபி' பங்கு நிறுவனங்களுக்கும், பங்குகளை வாங்கும் மக்களுக்கும் இடையே பாலமாக செயல்படுகிறது. அது இவ்விரு பிரிவினருக்கும் பாதுகாப்பு அரணாகவும் செயல்படுகிறது. கல்லூரி மாணவிகள் தொடங்கி, பணி ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் வயது மூத்த பெண்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற துறை இது. படிப்பை விட, அனுபவ அறிவு இருந்தால்போதும், பங்கு சந்தையில் யாராக இருப்பினும் நுழையலாம், நிர்வகிக்கலாம், லாபம் பெறலாம்.

    • பெண்களை அதிக பொறுப்புள்ள பதவிகளுக்கு நியமிப்பதில்லை.
    • அதிக நேரம் செய்ய வேண்டிய வேலையை ஆலைகள் பெண்களுக்கு அளிக்கின்றனவாம்.

    ஆண்களையும் பெண்களையும் பணியில் சமமாக நடத்த வேண்டியதன் அவசியம் பற்றி பிரபல பன்னாட்டு நிறுவனம் ஒன்று ஆய்வு செய்து பட்டியலிட்டது.

    95 நாடுகளில் ஆய்வு செய்ததில் 40 நாடுகளில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான ஏற்றத்தாழ்வு மிக அதிகமாக இருப்பது தெரியவந்தது. அதாவது, 1. வேலையில் சமத்துவம், 2. பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் வாய்ப்புள்ள துறைகள் அல்லது அத்தியாவசிய துறைகள், 3. சட்டப்பூர்வமான பணி பாதுகாப்புள்ள துறைகள் அல்லது அரசியல் ரீதியாக பாதுகாப்பு தேடக்கூடிய துறைகள், 4. உடல் ரீதியாக தீங்கு விளைவிக்காத வேலைகள் அல்லது சுயமாக செயல்பட வாய்ப்புள்ள வேலைகள் என்று 4 பிரிவுகளாக பிரித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

    நல்ல நிறுவனங்கள், அதிக ஊதியம் தரும் நிறுவனங்கள் அனைத்தும், அதிக எண்ணிக்கையில் பெண்களை பணிக்கு தேர்வு செய்வதில்லை.. அப்படியே பணி வழங்கினாலும் பெண்களை அதிக பொறுப்புள்ள பதவிகளுக்கு நியமிப்பதில்லை.

    அதிக நேரம் செய்ய வேண்டிய வேலை, சலிப்பு ஏற்படுத்தும் வேலை, உடல் நலனுக்கு ஆபத்து விளைவிக்கும் வேலை, இழிவு என்று கருதத்தக்க வேலை, முக்கியத்துவம் அற்ற வேலை போன்றவற்றையே பல நிறுவனங்கள், ஆலைகள் பெண்களுக்கு அளிக்கின்றனவாம்.

    வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு குடிநீர், உணவு, மருத்துவ உதவி, கைக்குழந்தைகளை பராமரித்துக்கொள்ளும் வசதி, போக்குவரத்து வசதி, காப்பீட்டு வசதி போன்றவையும் சரியாக செய்து தரப்படுவதில்லையாம்.

    ஒரு நாட்டில் ஆண்களைவிட பெண்கள் மோசமாக நடத்தப்படுகிறார்களா? என்பதை அறிய பின்வரும் அம்சங்கள் உதவுகின்றன.

    1. பெண் சிசுக்களை கருவில் அழிப்பது, 2. பெண் குழந்தைகளின் இறப்பு, 3. பிறப்பு முதல் 6 வயது வரையிலான குழந்தைகளில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு ஏற்ப பெண் குழந்தைகளின் விகிதம், 4. ஆண்-பெண் இடையேயான விகிதாசாரம், 5. பெண்களின் எழுத்தறிவு, 6. மகப்பேறின்போது தாயின் மரண விகிதம். இதில் பெண்களுக்கு பாதகமான அம்சங்கள் அனைத்தும் இல்லாமல் இருந்தால், அந்த நாடு பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கிறது என எண்ணிக்கொள்ளலாம்.

    உலகம் முழுவதும் 2011-ம் ஆண்டைய கணக்கெடுப்புப்படி ஆண்களின் எழுத்தறிவு 82.14 சதவீதம் ஆகவும், பெண்களின் எழுத்தறிவு 65.46 சதவீதம் ஆகவும் இருக்கிறது. இந்த கற்றல் இடைவெளியை எவ்வளவு வேகமாக குறைக்கிறோமோ, அதை பொறுத்துதான் பெண்களுக்கான சமத்துவம் சமூக அளவில் உறுதிப்படுத்தப்படும் எனவும் அந்த ஆய்வு தகவல்கள் கூறுகின்றன.

    • குடும்பங்கள் தங்கள் பெண் குழந்தைகளை கொண்டாட வேண்டும்.
    • குடும்பத்தை சேர்ந்தவர்கள் மூலமே பெண் குழந்தைகளுக்கு அநீதி நடந்து வருகிறது.

    பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்று அச்சடிக்கப்பட்ட வாசகங்கள் காணப்பட்டாலும் பெண்களுக்கான உரிமைகளும், தேவைகளும் முழுமையாக பூர்த்தி செய்யப்படுகின்றதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பெண்களை கடவுளாக கருதும் நமது நாட்டில் தான் பெண்களுக்கு எதிரான அநீதிகளும் அதிகரித்து வருவது நம்ப முடியாத ஒன்றாக உள்ளது. பெருகி வரும் பாலியல் குற்றங்களும், பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளும் நாட்டின் சமநிலையை சீர்குலைக்கிறது என்றே சொல்லலாம். பெண் குழந்தைகளும் இந்த நிகழ்வுகள் மூலம் பாதிக்கப்பட்டு வருவது வருந்தத்தக்கதே. இவ்வாறு பல சமூக சிக்கல்களுக்கு இடையேயும் பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    நாட்டின் நிலை வளர்ச்சி அடைய பெண் குழந்தைகளின் உரிமைகள், பெண் கல்வி போன்ற விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட வேண்டும். குறிப்பாக குழந்தை திருமணம் போன்ற நிகழ்வுகள் முற்றிலும் இல்லாமல் போக வேண்டும். இதற்காக அரசும் சட்டம் இயற்றி உள்ளது. அறியாத குழந்தை பருவத்தில் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு துணை புரியும் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் சட்டத்தின் பார்வையில் தண்டனைக்கு உரியவர்களே என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது.

    18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை கட்டாயப்படுத்தி பாலியல் தொந்தரவு செய்பவர்களை போக்சோ சட்டத்தின் படி சிறையில் அடைக்கவும், 10 வயதிற்கு குறைவான பெண் குழந்தைகளை கடத்தினால், அவர்களுக்கு ஜாமீனில் வெளிவராதபடி கடுமையான தண்டனையும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அரசு பல்வேறு பாதுகாப்பு திட்டங்களை பெண் குழந்தைகளுக்காக நிறைவேற்றினாலும், குடும்பங்கள் தங்கள் பெண் குழந்தைகளை கொண்டாட வேண்டும்.

    மாற்றங்கள் குடும்பங்களில் இருந்து வர வேண்டும். ஆனால் அதற்கு மாறாக தன் குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள், நண்பர்கள் மூலமே பெண் குழந்தைகளுக்கு அநீதி நடந்து வருகிறது. இந்த நிலை மாறி, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு, சம உரிமை, கல்வி என அனைத்தும் கிடைக்கப் பெறும் போது சமூகத்தில் பெண்களின் நிலை உயரும்.

    இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் நோக்கிலும், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், 2008-ம் ஆண்டு இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ஜனவரி 24-ந் தேதியை (இன்று) தேசிய பெண் குழந்தைகள் தினமாக அறிவித்து ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    ×